First
தென்மாவட்டத்தில் அகமுடையார் சமுதாயம் எண்ணிக்கை ரீதியில்
மிகப்பெரும் சமுதாயமாகவும், பொருளாதாரத்திலும் நல்ல நிலையிலுமே உள்ளது.
ஆனால் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதில்
தென் மாவட்ட அகமுடையார்கள்
மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர்.
சொல்லப்போனால் உயிர் போகும் பிரச்சனையில் கூட அகமுடையார் சமுதாயம் தனக்கு தானே உதவிக்கொள்ளும் நிலையில் இல்லை.
மக்களுக்கு சாதியை பற்றிய அடிப்படை புரிதல்களே இல்லாதது ,சமூகத்தின் எதிரிகளையே உறவுகளாக எண்ணி சொந்த சாதியையே எதிர்க்கும் மனப்பாங்கு, சாதி சான்றிதழை மாற்றிக்கொண்டு மாற்று சாதிக்குள் கலந்து கரைந்து போன அடையாளங்கள்,சொந்த சாதிக்குள்ளேயே இருக்கும் முரண்கள்,சொற்ப விலைக்கு விலை போகும் அமைப்புகள், தொடர்ந்து சாதியால் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட சலிப்பு, சாதியால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் .பொருளாதாரத்தை பற்றி மட்டுமே எண்ணம் போன்ற பல்வேறு காரணங்களால் தென் மாவட்ட அகமுடையார் சமுதாயம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.
இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு வரவேண்டுமென்றால் சமுகப்பணிக்கான அடிப்படையே மாற்ற வேண்டும்.
அதற்கு இளைஞர்கள் சமுதாய பணிக்கு வரவேண்டும்! சமுதாய பணி என்றால் போஸ்டர் ஒட்டுவது ,படம் திறப்பது அல்ல. ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுப்பது! இதனால் மற்ற சாதிகளுடன் முரண்கள் வராது மாறாக அகமுடையார் சாதிக்குள் ஒருங்கிணைப்பு வளரும்.
சமுதாய பணிக்கு வருவதற்கு தயாராக இருப்பவர்களுக்கு,
வழிகாட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்!
மற்ற ஊர் அகமுடையார்களும் இந்த பணியில் இணையலாம்.
அதற்கு நீங்கள் நடத்தும் அல்லது உங்களுக்கு தெரிந்த அகமுடையார் குருப்களில் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் எண்ணை இணைக்க வேண்டுகிறோம்.
அவ்வாறு இணைக்கும் போது அகமுடையார் விழிப்புனர்வு செய்திகளை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு அகமுடையார் சமுதாயத்தை வலுப்படுத்துவோம். செயல்படுவர்களை கண்டறிந்து அவர்களோடு இணைந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க முயற்ச்சி செய்வோம்.
அகமுடையார் ஒற்றுமை தொலைபேசி எண் : 7200507629
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்