First
@followers அகமுடையாரின் உட்பிரிவான துளுவ வேளாளரை பிரிக்கும் சதி- அரசாணையை திரும்பப் பெறு!
——————-
துளுவ வேளாளர் என்பது அகமுடையாரின் உட்பிரிவாக கி.பி 800ம் ஆண்டு கழுகுமலை பகுதி நடுகல் கல்வெட்டிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அகமுடையாரின் உட்பிரிவுகளில் காலத்தில் பழமையானதாகவும் அதேநேரம் வரலாற்றில் தெளிவாக தங்களை அகம்படியர் என்று பதிவு செய்ததும் இன்று துளுவ வேளாளர் என்று அறியப்படும் பிரிவினர் தான்.
அரசு பதிவெட்டில் துளுவ வேளாளர் என்ற பெயரும் அகமுடையார் என்பதன் உட்பிரிவாக 1940களிலேயே குறிக்கப்பட்டுள்ளது.
அன்று முதல் சில நாட்கள் முன்புவரை அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரிசை எண் 1ல் “அகமுடையார் அல்லது துளுவ வேளாளர் அல்லது தொழுவ வேளாளர் ” என்றே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் துளுவ வேளாளர் சங்கம் ,வெள்ளாளர் சங்கம் என்று ஒரு சிலர் மனுக்கள் கொடுத்ததாகவும் அதன் பெயரில் ஒரே எண்ணில் “அகமுடையார் அல்லது துளுவ வேளாளர் அல்லது தொழுவ வேளாளர் ” என்று ஒரே பெயரில் இருந்த சாதிப்பெயரை இரண்டாக பிரித்து
அகமுடையார் என்ற பெயரை வரிசை எண் 1லும், அதே வரிசை எண் 1ல் புது செக்சனில் 1A என்ற பெயரில் புதிதாக சேர்த்துள்ளதாக தெரிகிறது.
இது ஒன்றாக இருக்கும் அகமுடையார் சமுதாயத்தை துண்டாட பெரும் சதி முயற்ச்சியாக அகமுடையார் சமுதாயம் கருதுகிறது.
சாதி போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விசயங்களில் (Sensitive Matters) சம்பந்தபட்ட எல்லோரையும் கலந்து ஆலோசிக்காமல் இவ்வாறு அவசரப்பட்டு அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது ஏன்?
ஒரிருவர் கொடுக்கும் மனுக்களை ஒட்டு மொத்மாக சமுதாயமே கொடுக்கும் மனுவாக எப்படி கருத முடியும்?
சாதி பட்டியலில் மாற்றம் செய்யும் முன் பொதுவெளியில் அறிவிப்பு வெளியிடாமல் சமப்ந்தபட்ட அனைத்து தரப்பினரிடமும் விளக்கம் பெறாமல் மாற்றங்கள் செய்தது ஏன்?
பெயரை மாற்றம் செய்யவோ ,பிரிக்கவோ ,சேர்க்கவோ செய்யும் முன் மானுடவியல் அறிக்கை உள்பட ஆய்வுகள் செய்யப்படவில்லை ஏன்?
போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன!
இவ்வாறான செயல்பாடுகள் அகமுடையார் துளுவ வேளாளர் சமுதாயத்தில் அரசுக்கு எதிரான எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் .
ஆகவே அரசு உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.
ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரவேண்டும்! சாதியை பிரிக்கவோ,சேர்க்கவோ முடிவு செய்வதற்கு முன் முறையாக அறிவிப்பு வெளியிட்டு, எல்லா தரப்பினரையும் அழைத்து ஆலோசனை ,ஆய்வு செய்து அதன் பின் தான் மாற்றங்களை கொண்டுவர வேன்டும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்