அகம்படியர் சாதியினரின் தலைவர்களே அகம்படி முதலி என்பவர்கள்,தென் மாவட்டம் வடமாவட்ட…

Spread the love

அகம்படியர் சாதியினரின் தலைவர்களே அகம்படி முதலி என்பவர்கள்,தென் மாவட்டம் வடமாவட்டம் அனைவரும் ஒன்றே- 3க்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆதாரங்கள்.
———————————————-
பிழைப்புக்காக சொந்த சாதியையே( அகமுடையார் சாதியையே) ஏமாற்றி பிழைக்க நினைக்கும் சிலர் தென் மாவட்டத்தில் இருப்பவர்கள் அகம்படியர் என்றும் வடதமிழகத்தில் இருப்பவர்கள் அகமுடைய முதலியார் என்றும் இல்லாத ஒன்றை சொல்லி அகமுடையார் சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்து வந்துள்ளார்கள்.

உண்மை என்னவென்றால்
அகமுடையார் என்று இன்று அறியப்படும் சாதியினருக்கு 100 வருடங்களுக்கு முன்பு வழங்கி வந்த பெயர் அகம்படியர் என்பதாகும்.
இது தென் மாவட்டத்தில் உள்ள எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

தென்மாவட்டம் மட்டுமல்ல தஞ்சை ,மேற்கு ,கிழக்கு ,வடக்கு என தமிழகத்தில் வாழ்ந்த அகமுடையார் சமுதாயத்தினர் அனைவரும் 100 வருடங்களுக்கு முன்பு அகம்படியர் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். அகம்படி அல்லது அகம்படியர் என்று அழைக்கப்பட்ட இவர்களுக்கு வடதமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பட்டமே முதலி என்ற பட்டமாகும். பழமையான எந்த கல்வெட்டிலும் அகமுடைய முதலி என்று வருவதில்லை, அகம்படி முதலி என்றே வருகின்றது.அதாவது அகம்படியர் சாதியினரின் பட்டமாக முதலி பட்டம் வருகின்றது. ஆகவே வடதமிழகத்தில் உள்ளவர்கள் அகம்படியர் என்ற சாதியில் முதலி பட்டம் உடையவர்கள் ஆவர்.

இந்த உண்மையை விளக்கும் வரலாற்று ஆதாரமாக 5க்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் 3 கல்வெட்டுக்களை இப்பதிவில் எடுத்துக்காட்டுகிறோம்.

இந்த 3 கல்வெட்டுக்களும் 3 உண்மைகளை நமக்கு எடுத்துகாட்டுகின்றது.

1) அகம்படியர் இனத்தில் முதலி பட்டம் கொண்டவர்கள் அகம்படி முதலி என்று அழைக்கப்பட்டனர் .அவர்கள் அகம்படியர் சாதியை சேர்ந்தவர்கள்
2) தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அகம்படியர்களே, வட மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அகம்படியர்களே!
3) அகம்படி முதலி என்பது அகம்படியர் சாதியை சேர்ந்தவர்களின் தலைவர்களுக்கும் சிறப்பான தகுதியுடவர்களுக்கு வழங்கப்படும் பட்டமே அது அகம்படி இனத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டது. என்பதை உறுதி செய்யும் கல்வெட்டாகவும் இக்கல்வெட்டுக்கள் விளங்குகின்றன.

முதல் கல்வெட்டு சான்று
—————-
இன்றைய திருவண்ணாமல மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மடம் எனும் ஊரில் உள்ள தடாகபுரிஸ்வரர் கோவிலின் கருவறை சுவற்றில் கிடைத்துள்ளது .பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனின் 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டு செய்தியில்

“அகம்படியாரும் அகம்படி முதலிகளும்” என்ற வரிகள் காணப்படுகின்றன.

இதன் மூலம் அகம்படியர் என்ற சாதியினரின் தலைவர்களே அகம்படி முதலிகள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அகம்படியர் சாதியினரின் தலைவர்கள் என்பதால் இவர்களுக்கு முதலி(முதன்மையானவன்) என்ற பட்டம் வழங்கி வருவது தெரிகின்றது.

இரண்டாவது கல்வெட்டு சான்று
———————–
இரண்டாவதாக வரும் கல்வெட்டு மேற்குறிப்பிட்ட இதே பகுதியில் ஆனால் மற்றொரு பாண்டிய மன்னர் (விக்ரம பாண்டியன் ) காலத்து கல்வெட்டு செய்தியாகும்.

இந்த கல்வெட்டு செய்தியிலும் அகம்படியாரும் (அகம்படியர் இன மக்களும்) ,அகம்படியர் இனமக்களின் தலைவர்களும் (அகம்படி முதலிகளும் இணைந்து திருவக்க்னீஸ்வர முடியார் கோவில் திருவிழா பூசைகள் நடைபெற மற்ற சமுதாயத்தவருடன் இணைந்து மழவூர் ,கோதண்டபுரம் என்ற ஊர்களை தானமாக வழங்கியுள்ளனர்.

மூன்றாம் கல்வெட்டு சான்று
——————-
இன்றைய விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் வட்டத்தை சேர்ந்த தேவனூர் திருநாகீஸ்வரமுடையார் கோவிலில் கிடைத்த
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கி.பி 1290ம் ஆண்டு காலத்திய கல்வெட்டு செய்தியில் அகம்படியாரும் (அகம்படியர் இன மக்களும்) ,அகம்படியர் இனமக்களின் தலைவர்களும் (அகம்படி முதலிகளும் ) மற்ற தலைவர்களுடன் இணைந்து திருநாகீஸ்வரமுடையார் கோவில் திருப்பணி நிமந்தத்திற்கு நிலதானம் வழங்கி அதன் நில எல்லைகளை குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இந்த கல்வெட்டு குறித்து ஏற்கனவே வெளியிட்ட விரிவான பதிவு லிங்க்:
https://www.facebook.com/100063919813164/posts/4298920116808012

ஆதாரங்கள்
———
முதல் கல்வெட்டு :
கல்வெட்டு காலம்: 1264
ஆதாரங்கள்:
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் தொகுதி 13, பக்கம் எண் 212,213 தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை, எண்: 240/1919 ,மத்திய அரசு வெளியீடு

இரண்டாம் கல்வெட்டு
——-
கல்வெட்டு காலம் : கி.பி 13ம் நூற்றாண்டு
ஆதாரங்கள்:
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் தொகுதி 13, பக்கம் எண் 220,221,தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை, எண்: 230/1919 ,மத்திய அரசு வெளியீடு

மூன்றாம் கல்வெட்டு
————–
கல்வெட்டு காலம் : கி.பி 1290
ஆதாரம்: ஆவணம் இதழ் 28, பக்கம் எண் 65,66

விரைவில் மற்ற கல்வெட்டுக்களையும் எடுத்து வெளியிடுவோம்.






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo