இன்றைய தேவேந்திர குல வேளாளருக்கும் ,இன்றைய வன்னியர் ,முத்தரையர் ,பிராமணர் ,வெள்ளாளர் போன்ற பல்வேறு சாதியினருக்கும் கூட தேவர்/தேவன் பட்டம் உள்ளது. தேவர் என்ற பட்டத்தை சாதியாக மாற்றினால் பெரும் குழப்பம் ஏற்படும். ஆகவே தேவர்,தேவன் பட்டம் கொண்ட மற்ற சமூகங்களும் தேவர் பெயரில் சாதிப்பெயர் அரசாணை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக தமிழக அரசிடம் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தேவன்,தேவர் பட்டம் மற்ற பல சாதிகளுக்கு இருந்ததை காட்டும் முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு சான்றுகள் ஒரு சிலவற்றை கீழே காண்போம்.
“இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்”
ஆதாரம்:
கல்வெட்டு எண்: 339/2005
விருதுநகர் மாவட்ட கல்வெட்டுக்கள்
விசையமங்கலத்து வெள்ளாளன் கொள்ளிகளில் சொக்கன் தேவன்”
ஆதாரம்: கல்வெட்டு எண் 1175/2003
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி III
“வெள்ளாளன் படைத்தலைகளில் தேவன் கூத்தபெருமாளும்”
ஆதாரம்: கல்வெட்டு எண் 1181/2003
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி III
பாண்டி வேட்டுவரில் புலிக்குத்தி தேவன்
கல்வெட்டு எண் 1223/2003
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி III
“கண்ணன் தேவனான உத்தம பாண்டிய சிலை செட்டி”
ஆதாரம்: கல்வெட்டு எண்: 1969/12
கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் தொகுதி V
“துளு நாயக்கமாரில் அத்தெம்பு நாயக்கன் வீரசூரிய தேவன்”
ஆதாரம்: கல்வெட்டு எண்: 826/2003
கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் 1
சிவபிராமணரில் காசிப கோத்திரத்து பெரிய தேவன் பிள்ளயானும்
ஆதாரம்: கல்வெட்டு எண் 92/2005 ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I
சிவப்பிராமணன் கோத்திரத்து சூரிய தேவர்
ஆதாரம்: கல்வெட்டு எண் 1048/2003 ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I
இதுபோல் நூற்றுக்கணக்கான ஆதாரங்களை காட்ட முடியும். பட்டங்களின் பெயரை சாதியாக மாற்றினால் அதனால் பெரும் குழப்பம் ஏற்படும். ஆகவே தமிழக அரசே தேவர் என்ற பெயரின் அரசாணையை உடனே கைவிடு!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
❤️💚