சலுகைக்காக சாதி சான்றிதழ் மாற்றி விட்டால் வாழ்க்கை மாறிவிடுமா?
——————————–
இரு நாட்கள் முன்பு மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள்பதிய வராதீர்கள் என்று பதிவிட்டோம். இருப்பினும் தினமும் மாற்று சாதி சான்றிதழ் வாங்கிய இருவர் வந்து கொண்டு தான் உள்ளனர். இன்று கூட அப்படியே நடந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால்
தினமும் குறைந்தபட்சம் 2 பேர் என்றால் 6 மாத காலத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு மாற்று சாதி சான்றிதழ் வாங்கியதாக வந்துள்ளார்கள், வந்தவர்களில் ஒருவர் கூட அரசு வேலையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சரியான படிப்பு கூட இவர்களிடம் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் நமது அகமுடையார்மேட்ரியில் அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்களில் குருப் 1,குருப் 2 வேலையில் இருப்பவர்கள் IIT,IIM,Bits Pilani போன்ற இந்தியாவின் உச்ச பட்ச கல்வி நிறுவனங்களில் உலகம் முழுக்க பெரு நிறுவனங்களில் வேலை செய்யும் படித்த மணமகன், மணமகள்கள் உள்ளார்கள்.
ஆக ஒன்று புரிகிறது. தகுதியை உயர்த்திக் கொண்டால் நமக்கு நிச்சயம் கிடைக்கும். சலுகைக்காக மாற்றி கொள்ள வேண்டும் என்று முயற்சித்தால் சர்டிபிகேட்டை மட்டும் தான் மாற்ற முடியும். வாழ்க்கையை அல்ல. இதற்கு நிறைய உதாரணங்களையும் ,விளக்கத்தையும் உதாரணங்களுடன் கூற முடியம். ஆனால் அதை மற்றொரு நாள் பதிவிடுகிறேன். மொத்தத்தில் மாற வேண்டியது நாம் தான். இதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
போடிநாயக்கனூரில் நூற்றுக்கு மேற்பட்ட அகம்படியர் குடும்பங்கள் அரசு சலுகைக்காக மறவர்சாதி சான்றிதழ் வாங்கியிருப்பதாகவும்…தற்போது நாங்கள் அகம்படியர்கள்தான் என்று ஆதாரத்துடன் அரசு அதிகாரிகளை சந்தித்து சாதியை மாற்றி தரச்சொல்லிகேட்டு வருவதாக இன்று கேள்விப் பட்டேன்