First
குருபூஜை செய்திகளுக்கு நடுவே ஓர் பிரேக்!
—————————————
நடிகரும் முன்னாள் முதல்வருமான மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர் அவர்களின் குலதெய்வம் மருதூர் ஐய்யனார்.
திரு. எம்ஜிஆர் -மேனன் பட்டம் கொண்ட அகம்படியர் .இவர்களின் குலதெய்வம் இவர் பிறந்த மருதூர் எனும் ஊரில் உள்ள அய்யனார் ஆகும். .அகம்படிய நாயர்களின் பட்டங்களில் மேனன் பட்டமும் உண்டு! நாயர் சாதியில் அகம்படிய நாயர்கள் அகம்படிய சாதிய மூலத்தைக் கொண்டவர்கள் . மகாபலி காலம் முதற்கொண்டு கேரளாவை ஆண்டு வந்தவர்கள்.வந்தேரிகளான நம்பூதரிகளால் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர்கள்.
எம்ஜிஆர் மலையாளி எனப் பேசப்பட்டபோது அவரை கொங்கு வேளாளர் என்று கூறி கதைகள் புனையப்பட்டது.அன்றைய அரசியலுக்கு எம்ஜிஆருக்கு அது தவிர்க்க இயலாமல் தேவைப்பட்டது.ஆனால் வரலாற்றிஞர்களும்,எம்ஜிஆர் பிறந்த ஊரில் இருந்து வரும் செய்திகள் பட்டங்கள் ,களத்த்தில் இன்றும் எஞ்சி இருக்கும் செய்திகள் என பலவும் எம்ஜிஆரின் மூலத்தை திரும்பிப் பார்க்கும்படி செய்கின்றன.அகமுடையார்கள் வரலாற்று ஆர்வத்தோடு அல்லது வரலாற்றி மீட்பில் கொஞ்சமேனும் அக்கறை கொண்டிருந்தால் அன்றே இச்செய்திகள் அவர் அறியும்படி செய்திருக்கலாம்.ஆனால் எப்போதும் போல் இச்சமூகம் தூங்கவே செய்யும் ஏனென்றால் நமக்குத் தான் வரலாற்றுப் பெருமை தேவையில்லையே,நமக்கு பொருளாதாரத்தை நோக்கி மட்டும் தானே இலக்கு என்று எண்ணி ஓடியதாலேயே நம் வரலாற்று மாற்ற்றார் வரலாறாய் இன்று! இருப்பின் முன்னோர் செய்த தவப்பயனாய் பல்வேறு தரவுகளின் எச்சங்களும் இன்றும் நமக்காக உள்ளன.
தகவல் உதவி: எஸ்.ராமசந்திரன் -வரலாற்றிஞர்(அகமுடையார் அரண் நிறுவனர் -திரு.பாலமுருகன் அவர்களிடம் தெரிவித்த செய்திகள் வழியே )
புகைப்படம் 1 : திரு.எம்.ஜி.ராமச்சந்திரன்
புகைப்படம் 2: கேரளாவை பூர்விகமாகக் கொண்ட விருதுநகர் இராஜகுல அகம்படியர்களுக்கு பாத்தியப்பட்ட மருதூர் அய்யனார் கோவில்
புகைப்படம் 3: கோவில் திருவிழா அழைப்பிதழ்-தலைக்கட்டு வரி
மேலும் பல கோவில் திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
புகைப்படங்கள் உதவி: ஸ்ரீ மருதூர் அய்யனார் கோவில் பங்காளிகள். மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மருது என்ற பெயர் வருவதற்கு எதெய்ட்சையானது அல்ல.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழங்கி வரும் பாரம்பரியத்தின் நீட்சியே இதுவாகும். மருதுபாண்டியர் பிறந்த இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் மருதூர் அய்யனார் போன்ற குலதெய்வங்களும் விருதுநகர் அருகில் உள்ள அகமுடையார்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் மருதங்குடி என்ற ஊர் பெயர்களும் இன்றும் இவற்றை களசாட்சிகளாக இருக்கின்றன.
நன்றி: அடிப்படை தகவல்கள் உதவி திரு.எஸ்.ராமசந்திரன் -வரலாற்றறிஞர்( மேலும் திரு.பாலமுருகன் அகமுடையார்-நிறுவனர்-அகமுடையார் அரண் இயக்கம் -அடிப்படைத் தகவலைப் பெற்றுத் தந்தமைக்காக )
அகமுடையார்களின் கேரள பூர்விகம் பற்றி ஏற்கனவே பலமுறை பேசியுள்ளேன்.இது புதிதல்ல.தொடர்ந்தும் வரும்!
மேலும் விரிவான தகவல்கள் மருதுபாண்டியர் குருபூஜை நிறைவுற்றவுடன் வெளிவரும்!
கூடுதல் செய்தி:
மகாபலி அகம்படியர்களின் கேரள பூர்விகம் பற்றி வராற்றறிஞர்கள் தங்கள் ஆய்வேடுகளை சமர்பிக்க இருக்கிறார்கள்.நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்