சொல்வதை விட செயல் முக்கியமானது-வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிட துவங்கி விட்டோம்
———————————————
3 நாட்களுக்கு முன்பு சமுதாயத்தில் நிலவி வரும் வேலைவாய்ப்பு எனும் முக்கிய பிரச்சனைக்கு ஓர் தீர்வாக முக்கிய நாளிதழ்களில் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை திரட்டி சமுதாய இளைஞர்களிடம் கொண்டு செல்ல இருக்கும் முயற்சியை சொல்லி ஆதரவை கேட்டிருந்தோம்.
வழக்கம் போல மக்கள் ரியாக்சன் பதிவின் லைக்கோடு நின்றுவிட்டது. இருப்பினும் மேட்ரிமோனி விசயத்தில் நானே முன்னெடுத்தது போல இதிலும் ஆரம்பித்துவிட்டேன்.
இன்று தினமலர் நாளிதழுக்கு பணம் கட்டி அதில் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை Agamudayarsangam.com தளத்தில் உள்ள வேலைவாய்ப்பு செய்திகள் குருப்பில் பதிவிட ஆரம்பித்துவிட்டோம்.
இனி தினமும் வேலைவாய்ப்பு செய்திகளை அந்த குருப்பில் பார்க்கலாம். நம் சமுதாய மாணவர்களுக்காக பெரு முயற்சி எடுத்து நாம் செய்யும் முயற்சி என்பதால் இந்த குருப்பை பிரைவேட் குருப்பாக மாற்றிவிட்டோம். ஆகவே Agamudayarsangam.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்து Verified மெம்பராக இருப்பவர்கள் மட்டுமே இதில் உள்ள தகவல்களை பார்க்க முடியும்.
ஆகவே இந்த வேலைவாய்பு தகவல்களை பெற விரும்புவோர் முதலில் Agamudayarsangam.com தளத்தில் முதலில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
ரிஜிஸ்டர் செய்த பிறகு 7200507629 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆதார் கார்ட் மற்றும் சாதி சான்றிதழ் அனுப்பி அகமுடையார் தான் என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்போது Verified மெம்பராக மாற்றிவிடுவோம் .பின் வேலைவாய்ப்பு குருப்பில் வரும் செய்திகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம்.
மேலதிக தகவல்கள்
தற்போது 1 நாளிதழில் ஆரம்பித்துள்ளோம் தமிழ்நாட்டில் 5 முக்கிய தமிழ் நாளிதழ்கள் 3 ஆங்கில நாளிதழ்கள் வெளியாகின்றன. இவற்றில் 60க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகின்றன.
இவற்றை எல்லாம் தொகுத்து வெளியிட்டால் வேலை தேடுவோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால் மற்ற வேலைகளுக்கு நடுவில் நாம் மட்டுமே இதை செய்வது கடினமானது.மற்றவர்களும் இப்பணியில் சேர்ந்து கொள்ளலாம் அல்லது வரும் காலத்தில் இதற்காக ஒருவரை வேலைக்கு அமர்த்தி இதை நிரந்தரமாக செய்ய திட்டமிட்டுள்ளோம். பார்ப்போம்!
அதேபோல் நாளிதழ்கள் மட்டுமல்லாமல் வேறு பல தரவுகளிலும் வேலைவாய்ப்பு செய்திகளை திரட்டி வெளியிட இருக்கிறோம். அகமுடையார் தொழில் நடத்துபவர்கள் எங்களை எங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர்களுடன் உறவை பேணி வேலை தேவைப்படுவர்களுக்கு அவர்கள் நிறுவனத்தில் வேலை வாங்கித்தர உதவியாக இருக்கும். ஆகவே அகமுடையாரில் தொழில் வணிகம் நிறுவனம் நடத்துபவர்களும் எங்களை தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
அடுத்து அகமுடையார் ஒருவர் எனக்கு வேலைவாய்ப்பு செய்திகளை எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார் அவரிடம் நீங்களே நமது Agamudayarsangam.com வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து உங்கள் பெயரில் பதிவிட்டால் சமுதாயத்திற்கும் உதவியாக இருக்கும் ,உங்கள் பெயரும் மக்களிடையே சென்றடையும் என்றேன்.
அதற்கு அவர் நான் ஏற்கனவே வேறு ஓர் அகமுடையார் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நீங்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக
சொல்கிறீர்களே! என்றார்.
அப்போது தான் புரிந்தது ! இவரை போல மற்ற அகமுடையார்களும் குழம்பி இருப்பார்கள் என்று. நமது Agamudayarsangam.com என்பது தனிப்பட்ட ஓர் அகமுடையார் சங்கம் அல்ல! இது அகமுடையார்களை ஒருங்கிணைக்க ஓர் சோசியல் தளம் அமைக்க முடிவு செய்த போது sangam என்பது எல்லோருக்கும் தெரிந்த பெயராகவே இருக்குமே என்று இந்த Agamudayarsangam.com என்ற பெயரை தேர்ந்தெடுத்து பெயரில் தளத்தை தொடங்கினோம்.
ஆகவே இது ஒரு தனிப்பட்ட சங்கம் அல்ல. Agamudayarsangam.com தளத்தில் அகமுடையாராக பிறந்த எவரும் ரிஜிஸ்டர் செய்யலாம் .சொல்லபோனால் அகமுடையார் இயக்கங்கள் ,சங்கங்கள் நடத்தும் மற்றவர்களும் Agamudayarsangam.com தளத்தில் இணைந்து தங்கள் இயக்கம், அமைப்பு தகவல்களை வெளியிடலாம். இது அகமுடையார் அனைவருக்குமான தளமாகவே இதை உருவாக்கியுள்ளோம்.
விரைவில் Agamudayarsangam.com தளத்தில் கல்விக்கு உதவும் கல்வி பற்றிய தகவல்களையும், வணிகர்களுக்கு உதவும் வணிக செய்திகளையும் வெளியிட உள்ளோம் என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாற் பல்வேறு வசதிகளை கொண்டு வர உள்ளோம். ஆகவே ரிஜிஸ்டர் செய்யாதவர்கள் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டுகிறோம்.
சில நாட்களாக பேஸ்புக் பக்கம் லாக் ஆனதாலும் நமது அகமுடையார் சங்கம் தளத்தில் தொடர்ந்து பதிவிடுவதாலும் இந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் ஏதும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து அப்டேட் செய்வோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்