திருப்பூர் கிறிஸ்துவ அகமுடையார் சங்க குடும்ப விழா நிகழ்வு ———————-…

Spread the love
0
(0)

First
திருப்பூர் கிறிஸ்துவ அகமுடையார் சங்க குடும்ப விழா நிகழ்வு
———————————————————-
அகமுடையார் சமுதாயத்தில் கிறிஸ்துவ சமுதாயத்தினர் கணிசமான அளவில் வாழ்கின்றனர். மருதுபாண்டியர் காலத்திலேயே சருகணி ஒட்டிய பகுதிகளில் கிறிஸ்துவ அகமுடையார்கள் இருந்ததும் இதற்காக சருகணி மாதா கோவில் தேர் திருவிழாவிற்கு மருதுபாண்டியர்கள் பனக்கரை என்ற ஊரை மானியமாக சின்ன மருதுபாண்டியர் வழங்கியிருந்தார்.

ஒவ்வொரு வருடத்தின் போதும் தேர் திருவிழாவின் போதும் உறுதிக்கோட்டை ஜமீன் சின்ன மருதுபாண்டியர் கலந்து கொண்ட பின்னரே தேர் திருவிழா நடக்கும்.சின்ன மருதுபாண்டியர் மறைவிக்குப் பின்னரும் அவர் வாரிசுதாரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததும் வரலாறு,

இன்றும் சருகணி பகுதியில் மருதுபாண்டியர் காலத்தில் கிறிஸ்து மதத்தை தழுவிய அகமுடையார்களின் வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள்.அங்கு மட்டுமின்றி மதுரை புதூர் பகுதியில் பெரும் அளவிலும் அதே போல் கோவை ,திருப்பூர், நீலகிரி பகுதிகளில் பெரும்பான்மையாக வசித்து வருகின்றார்கள்!

அந்த வகையில் திருப்பூரை சுற்றியுள்ள ஊர்களில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் குடும்ப விழா நிகழ்வு நேற்று (28-01-2018 ) அன்று திருப்பூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ அகமுடையார் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்,மேலும் நிகழ்வில் குழந்தைகள்,இளைஞர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.மேலும் அகமுடையார் அரண் சார்பில் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

திருமண தகவல் மையம்
—————————
அகமுடையாரில் கிறிஸ்துவர்கள் கணிசமான அளவில் இருந்த போதிலும் தொடர்ந்து இவர்களுக்குள் திருமண வரன் தேடும் முயற்சியில் எப்போதும் இடர்பாடு இருந்து வந்துள்ளது. இதனை போக்கும் வகையிலும் அகமுடையார் பெண்களை வேறு சமுதாயத்தினருக்கு திருமணம் செய்யும் போக்கு நிகழாமல் இருப்பதற்காகவும் அகமுடையார் கிறிஸ்துவர்களுக்கு சிவாமேட்ரிமோனி சார்பில் திருமண வரன் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டது!

இதன் ஒரு கட்டமாக நேற்று நடைபெற்ற குடும்ப விழா நிகழ்ச்சியில் சிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையத்தின் புஞ்சை புளியம்பட்டி கிளை ஜேஜே
சக்சஸ் அமைப்பு சார்பில் இலவச வரன்பதிவுகள் செய்யப்பட்டன.

வேலைவாய்ப்பு
—————–
அதே போல் அகமுடையார் மாணவ/மாணவியர் கல்வி,வேலைவாய்ப்பில் முன்னேறும் பொருட்டு அகமுடையார் மாணவ/மாணவியருக்கு agamudayarwebsite.com தளத்தில் வேலைவாய்ப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இதனை மக்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாகவும், விண்ணப்பங்களைப் பெறும் முகமாகவும் நேற்றைய நிகழ்வில் மாணவ/மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொழில் முன்னேற்றம்
——————–
அகமுடையார் தொழில் நிறுவனங்களை பரந்த அகமுடையார் சமூகத்திடம் அறிமுகப்படுத்தும் விதமாகவும்,புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தொழில்முனைவோர் செய்திகளை ஒரே இடத்தில் வழங்குவதற்காகவும் நமது agamudayarwebsite.com தளத்தில் வணிகம்/தொழில் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இதனை அகமுடையார் தொழில்முனைவோர்களுக்கு அறிமுகம் செய்யும் முகமாக நேற்றைய நிகழ்வில் அகமுடையார் தொழில்முனைவோரிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. திருப்பூர் தொழில் நகரம் என்பதாலும் திருப்பூரில் கிறிஸ்துவ அகமுடையார்களில் பெரும்பாலானோர் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்ற காரணத்தாலும் குறிப்பிட்ட நிகழ்வில் தொழில்முனைவோர்கள் ஆர்வத்துடன் தகலல்களை அளித்துள்ளனர்.

மேலும் அகமுடையார் தொழில் நிறுவனங்களில் அகமுடையார் சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னிரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நேற்று நடந்த நிகழ்வில் மட்டும் மூன்று தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அளிக்க முன்வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

வரும் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களை நெட்ஒர்க் செய்து பெரிய அளவில் அகமுடையார்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட திட்டமிட்டுள்ளோம்!

வரலாறு அறிவித்தல்
அதே போல் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கிறிஸ்துவ அகமுடையார் உறவுகளுக்கு அகமுடையார் வரலாறு (கல்வெட்டு,செப்பேடு ) போன்றவற்றின் வழியாக அறிமுகம் செய்யப்பட்டது.

நன்றி
நமது நோக்கத்தைச் சொன்னவுடன் இடம் ஒதுக்கி, தேவையான பர்னிச்சர்களை ஏற்பாடு செய்து , உதவிக்கு சங்கத்தின் சார்பில் இருவரையும் ஸ்டாலில் உதவவும் முன்னேற்பாடு செய்த திருப்பூர் கத்தோலிக்க அகமுடையார் சங்கத்தின் நிர்வாகிகள் ,பெரியோர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
இதற்காய உழைத்த அன்புச் சகோதரர் திரு. ஜான் பிரிட்டோ அகமுடையார் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!

குறிப்பு:
அகமுடையார் மாணவ/மாணவியரிடமிருந்து பெறும் விண்ணப்பங்கள் சேகரித்து இணையத்தில் பார்வைக்கு வைக்கப்படும்!
மாணவ/மாணவியரின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வரும் நல் இதயங்களுக்கு இத்தகவல்கள் கொடுக்கப்படும்!
இம்முயற்சி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படுகின்றது. சொந்தப் பணம்,நேரம்,உழைப்பு இதற்கு செலவிடப்பட்டிருந்தாலும் இனியும் செலவிடப்படவிருக்கின்றது என்ற போதிலும் சமுதாயத்திற்கு இதனால் எள்ளளவு நன்மை நடந்தால் அதுவே நமக்கு கிடைத்த பெரும் மகிழ்ச்சியாகும்!

அகமுடையார்களே! உங்கள் பகுதியில் நடைபெறும் அகமுடையார் சங்க நிகழ்விலும் இது போல் ஓர் ஏற்பாடு செய்தால் இம்முயற்சி பலப்பட்டு நிறைய அகமுடையார் உறவுகளுக்கு உதவமுடியும்! விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்!

இயக்கம்/சங்கம் அல்லாத தனிநபர்கள் இம்முயற்சியை ஆதரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இத்தகவலை மற்ற அகமுடையார் உறவுகளிடம் கொண்டு போய் சேர்ப்பது தான்! முதலில் முகநூலில் சேர் செய்யுங்கள், முடிந்தவர்கள் முடிந்த இடத்தில் சொல்லுங்கள்! ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்! அகமுடையாராக ஒன்றினைவோம்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?