அரசுகள் எந்த நிலத்தில் தோன்றின -அடிப்படை புரிதலுக்காக சில வார்த்தைகள்
————————————-
பாண்டிய மன்னர்கள் ஆயர் இனத்தவர்கள் என்பதை விளக்கி நமது அகமுடையார் ஒற்றுமை சேனலில் பதிவிட்டோம். இதை பார்த்து மாற்று சாதியை சேர்ந்தவர்கள் நமது யீடிப் வீடியோவிலும் , பேஸ்புக் பதிவிலும் அது எப்படி “ஆடு மாடு மேய்த்தவர்களையெல்லாம் அரசர் என்று சொல்லுகிறீர்கள்” என்று கேள்விகள் கேட்டிருந்தனர்.
இவ்வாறு கேட்பவர்களை கண்டு சிரிப்பதா அல்லது பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று அவர்கள் வரலாற்றை ஆழ்ந்து படிக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
ஆனால் அவர்களுக்கு இந்தியாவிலேயே நூற்றுக்கணக்கான உதாரணங்களை எடுத்துக்காட்டலாம் ஆனாலும் இங்குள்ள மன்னர்களை எல்லாம் அவர்கள் வேறு வேறு சாதி/இனக்குழு என்று வகைப்படுத்திவிடுவார்கள் என்பதால் இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் உள்ளவற்றை உதாரணமாக கொள்வோம்!
உலகத்தின் சிறந்த நாகரீங்களில் ஒன்றாக கருதப்படும் எகிப்து நாட்டை ( கி.மு 1650–1550 ) காலப்பகுதிகளில் ஆண்ட ஐக்சோஸ் (Hyksos) அரசர்கள் ஆடு வளர்ப்பவர்களே
அதை போல உலகின் பெரும் நாகரீகங்களை சேர்ந்த சுமேரிய அரசர்கள்( பாபிலோனிய ) அரசர்கள்
உலகத்தின் பெரும்பகுதியை பிடித்த செங்கிஸ்கான் , போன்றவர்களும் ஆடு மேய்த்தவர்களே
இது போல் நூற்றுக்கணக்கான உதாரணங்களை சொல்லலாம்.
அவ்வளவு ஏன் ஆரியர்கள் கூட ஆநிரை மேய்த்து வந்த ஆயர்கள் தானே! அவர்கள் தானே இன்று வரை இந்தியாவை ஆள்கின்றனர்.
அடுத்து
வணிகர்கள் நாட்டை ஆள்வார்களா என்று கேட்பார்கள்! இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தையே ஆண்டிருக்கின்றனர்.
உலகத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்த சூரியன் மறையாத நாடு என்று அழைக்கப்படும் இங்கிலாந்து உலக ஆட்சியை பிடித்தது கிழக்கிந்திய கம்பெனி (ஈஸ்ட் இண்டியா கம்பெனி) எனும் வணிக நிறுவனத்தால் தானே !
அதன் வழியே டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் என பல்வேறு வணிக கம்பெனிகள் உலகையே காலனியாக்கி ஆட்சி புரிந்தனரே! அதை புரிந்து கொள்ள வேண்டும்!
மீன் பிடிப்பவன் ஆட்சி செய்வார்களா? என்று கேட்பார்கள்!
ஐரோப்பா முழுவதையும் கொள்ளை நிகழ்த்தி ,அச்சுறுத்தி பெரும் பணம் சேர்த்து ஸ்காண்டிநேவியா,டென்மார்க்,நார்வே ,ஸ்வீடன் நாடுகளை ஆட்சி செய்த வைகிங்கள் கடலோடிகளே!
அதைப்போலவே
வேடர்கள் , உலகின் முதல் அரசு தோன்றிய இடம் குறிஞ்சி நிலம் தான்.
ஆனால் அரசுகள் இங்கு பேரரசாக வாய்ப்பு குறைவு அதற்கு இவர்களுக்கு இருந்த பொருளாதார தடையும், படைகளுக்கு வழங்க தேவையான உணவு உற்பத்தியும் கட்டுப்பட்டது என்பதால் இங்கு அரசுகள்
குறிப்பிட்ட பகுதியோடு நின்று பேரரசாக மாறாமல் நின்று விட்டன.
உலகத்தில் உள்ள எல்லா அரசுகளுக்கும் முன்னோடி வேட்டுவர் சமூகத்தில் இருந்தே தோன்றின என்றால் மிகையில்லை. ஆனால் இந்த வேட்டுவ சமூகங்களில் மற்ற பகுதிகளுடன் தொடர்பும், அதன் வழியாக பொருளீட்டுதல், தரவுகளை சேகரித்தல் போன்றவற்றில் முன்னேறிய சிலரே அரசை தாண்டி பேரசாகவும் உயர்ந்தன.மற்றவை பழங்குடி நிலையிலேயே நின்றன.
ஆகவே அரசு என்பது எந்த நிலத்திலும் தோன்றும்! பேரரசுகள் தோன்ற பெரும் பணம் அல்லது உற்பத்தி பொருள் முதல் தேவையாகும்.
அது ஆயர்களிடமும் ,வணிகர்களிடமும் நிரம்ப இருந்தது.
வெளிநாட்டை பொறுத்தவரை கடலோடிகளிடம் வணிகத்தின் மூலமும் கொள்ளையின் மூலமும் பெரும் செல்வம் கிடைத்தது அதை வைத்து அவர்கள் அரசாண்டார்கள்.
மேலும்
ஊர் விட்டு பல்வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் ஆயர்கள், வணிகர்கள், கடலோடிகளிடம் பல்வேறு நாடுகளை பற்றிய பட்டறிவு இருந்தது( உணவு கிடைக்கும் இடம், வழியில் உள்ள ஆபத்துகள், காலநிலை மாற்றம் ,நாடுகளின் பலம் மற்றும் பலவீனங்கள் போன்ற பல்வேறு செய்திகள்) இருந்தன.
இவை தங்கள் ஆட்சி பகுதியை தாண்டி மற்ற நாடுகளை பிடித்து எல்லையை விரிவாக்கவும் செய்ய பெரிதும் உதவின.
இவ்வாறு வரலாற்றை புரிந்து கொள்வதன் மூலம் ஆட்சி,அதிகாரம் போன்றவற்றை எப்படி பெறுவது என்பதை பற்றிய அடிப்படை புரிதல் தோன்றும். இன்றைய வாழ்விற்கும் ,நாளைய முன்னேற்றத்திற்கும் நேற்றைய வரலாற்றை தேர்ந்து தெளிவடைவது அவசியாகும்.
இணைப்பு படம் 1: எகிப்திய அரசன் அக்கெனதேன் (Akhenaten) , ஆடு மேய்க்கும் துரட்டியுடன் (பாண்டியர்கள் வைத்திருந்த அதே சென்டை எனும் துரட்டியுடன்)
இணைப்பு படம் 2 : ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பெனி , இந்திய அரசுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு பற்றிய ஓவியம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்