First
சின்னமருதுபாண்டியரின் மகன் துரைச்சாமி சேர்வையின் புஞ்சை நிலம் ??? துரைச்சாமி அவர்களின் நினைவுதின சிறப்பு பதிவு
——————-
1806ம் ஆண்டு காலத்திய ஓலை சாசனம் சிவகங்கை ஜமீனை சேர்ந்த மங்களேசுவரி நாச்சியார், அய்யனார் கோவிலுக்கு பூலங்குடி கிராமத்தை தானம் அளித்தை பற்றி பேசுகின்றது.
ஆதாரம்: ஆவணம் இதழ் 18,பக்கம் எண் 125
இதில் கொடுக்கப்பட்ட நிலத்திற்கான எல்லைகளை குறிப்பிடும் போது அதில் ஓர் எல்லையாக வாணியக்குடி கிராமத்தில் துரைச்சாமி சேர்வாறன் புஞ்சை என்பதும் ,துரைச்சாமி சேருவை புஞ்சை என்பதுவும் எல்லைகளாக காட்டப்படுகின்றன.
இதில் குறிப்பிடப்படும் துரைச்சாமி சேர்வை நமக்கு சின்ன மருதுபாண்டியரின் மகனான துரைச்சாமி சேர்வையை நினைவூட்டுகின்றது.
ஏன் துரைச்சாமி சேர்வை என்ற பெயரில் வேறு ஏதேனும் அகமுடையார் இருந்திருப்பார் அவரது பெயராக கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம் .
ஆனால் இந்த ஆவணத்தின் காலம் கி.பி 1806ம் ஆண்டு அதாவது சின்னமருதுபாண்டியரின் மகன் துரைச்சாமி சேர்வை வாழ்ந்த சமகாலம் ஆகும் என்பதோடு துரைச்சாமி சேர்வை நாடுகடத்தப்பட்ட காலத்தை ஒட்டியது .மிகவும் பிற்காலம் என்றால் கூட இதில் குறிப்பிடப்படுவது வேறு யாராகவும் இருக்கலாம் என்று ஒதுக்கிவிடலாம்.
மேலும் சிவகங்கை வாணியக்குடியில் சின்னமருதுபாண்டியரின் மகன் துரைச்சாமி பெயரை அறியாதவர்கள் அந்நாளில் இருந்திருக்க முடியாது அப்படி இருக்கையில்
மற்றொரு அகமுடையார் துரைச்சாமி பெயரை வைத்திருக்கவும் வாய்ப்பு மிக குறைவு. இதற்கு முன்னரும் இந்த பெயரை வேறு எவரும் வைத்திருந்ததாகவும் தெரியவில்லை.
ஆகவே இதில் குறிப்பிடப்படும் துரைச்சாமி சேர்வை சேர்வை சின்ன மருதுபாண்டியரின் மகனாகவே இருக்கவேண்டும்.
துரைச்சாமி நாடுகடத்தப்படுவதற்கு முன்பு அவருக்கு உரியதாக இருந்த நிலத்தின் எல்லையையே பின்னால் சில காலம் வரை ஆவணங்களில் குறித்திருக்கலாம்.
வாணியக்குடி வாழ் அகமுடையார்கள் அல்லது இதுபற்றி தெரிந்தவர்கள் கமேண்டில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!
குறிப்பு:
இன்று மே 22- சின்னமருதுபாண்டியரின் மகன் துரைச்சாமி இறந்த தினம்(நினைவுதினம்). இதே நாளில் 1820 ம் வருடம் சிவகங்கையில் அவர் துரைச்சாமி அவர்கள் காலமானார்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்