தந்தையை இழந்த பிளஸ் 2 மாணவி பவானி அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் 2ம் இடம் பெற்…

Spread the love
First

தந்தையை இழந்த பிளஸ் 2 மாணவி பவானி அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் 2ம் இடம் பெற்ற செய்தியையும் அவருடைய நிலையையும் நேற்றைய பதிவில் தெரிவித்திருந்தோம்.

அவருக்கு உதவ விரும்புவதாக சிலர் தெரிவித்தனர். அதனால் அந்த மாணவியின் வங்கிக்கணக்கை திரு.இராஜசேகர் அகமுடையார் அவர்கள் மூலமாக பெற்றோம். ஆனால் சம்பந்தப்ட்ட வீட்டார் பொதுவெளியில் வங்கிக்கணக்கை சொல்லி பணம் கேட்க விருப்பமில்லை என்றதால் விருப்பமுள்ளவர்கள் 920050 7629 என்ற அகமுடையார் ஒற்றுமை எண்ணிற்கோ செய்தி அனுப்பி அந்த பெண்ணின் வங்கிக்கணக்கை பெற்று பணம் அனுப்பலாம் என்று சொல்லியிருந்தோம்.

பதிவை 217 பேர் லைக் செய்திருந்தாலும் அண்ணன் அருள் அகமுடையார் (சிதம்பரம் ஊர்) அவர்கள் மட்டுமே நம்மிடம் அந்த பெண்ணின் வங்கிக்கணக்கை கேட்டுப்பெற்றார் .பெற்றதோடு மட்டுமல்லாமல் ரூ1000 அந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக செழுத்திவிட்டார். அவருக்கு அகமுடையார் ஒற்றுமையின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் அண்ணன்…

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?