First
புத்தரின் புனித பல்லை பாதுகாப்பேன் என உறுதி ஏற்கும் அகம்படி இனத்தை சேர்ந்த கண்டி அரசர்கள்
————————————————————-
தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வந்த அகம்படியர் சாதியை சேர்ந்தவர்கள் உருவாக்கியதே இலங்கையின் கம்பளை மற்றும் கண்டி ராஜ்ஜியங்கள் ஆகும் .
இந்த கண்டி அரண்மனையில் தான் இலங்கையின் உயரிய சொத்தாகவும் , புனித சின்னமாகவும் கருதப்படும் புத்தரின் பல் பாதுகாக்கப்படுகிறது.
ஒவ்வொரு கண்டி மன்னன் முடிசூட்டப்படும் போதும் தங்களின் முதல் கடமையாக “தலதா” எனும் புத்தர் பல்லை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறி பதவியேற்கின்றனர்.
Girivassipura என்ற சிங்கள மொழி திரைப்படத்தின் டிரைய்லரில் இதை காட்டியுள்ளனர்.
டிரைலர் வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=m7bj9cn9kVc
கவனிக்கவும்: டிரெயிலரில் வரும் கதை கண்டியில் அகம்படிய அரசர்களுக்கு பின்னால் நாயக்கர்கள் ஆட்சிக்கு வந்த கதையையும் (கண்டி நாயக்கர்) அவர்கள் ஆங்கிலேயர்களால் எப்படி வீழ்த்தப்பட்டனர் என்பது பற்றி பற்றி பேசுகிறது.
முன்னர் கதை
————-
அகம்படியர்கள் வலங்கை வேளைக்காரராக புத்தரின் புனித பல்லை பாதுகாக்கும் பணியில் பலகாலம் முன்பே ஈடுபட்டிருந்தனர் அதனை தாங்கள் ஆட்சிக்கு வந்த போதும் இவ்வகையில் உறுதிமொழி கொண்டனர் என்பதை அறியமுடிகின்றது.
தொடர்பான மேலும் சில செய்திகள்
————-
அரசர் மற்றும் நாட்டையும் வேளை வரும் போது உயிர் கொடுத்தும் பாதுகாப்போம் இல்லையேல் அப்போதே மரணமடைவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு நிறைவேற்றியவர்கள் வேளைக்காரர் ஆவர்.
பொனலுறுவையில் கிடைத்த கல்வெட்டு செய்தியில் இவ்வேளைக்கார்கள் புத்தகோவிலை பாதுகாத்த செய்தியும், ஹிராங்கோடை கல்வெட்டு செய்தியில் அகம்படி சகையர்( அகம்படி இனத்தை சேர்ந்த சகோதர்கள்) புத்தர் கோவிலுக்கு தானம் வழங்கிய செய்திகளும் இடம்பெறுகின்றன.
வேளைக்காரர்களை பல்வேறு சாதியினர் சொந்தம் கொண்டாடினாலும் அகம்படியினர் சாதியினருக்கே வேளைக்காரர் என்ற உறுதியான கல்வெட்டு செய்தி உள்ளது.
ஆகவே புத்தர் பல்லை பாதுகாக்கும் பணியில் அகம்படியர்கள் இருந்தனர் என்பது மிகவும் தெளிவு.
தமிழ்நாட்டை சேர்ந்த அகம்படிய சாதியினர் இலங்கையின் கம்பளை ராஜ்ஜியம் மற்றும் கண்டி ராசவம்சத்தை உருவாக்கினார்கள் என்பதை எங்களது “சோழர்கள் அகம்படியர்களே” என்ற காணொளியில் இலங்கையில் கிடைத்த கல்வெட்டு செய்திகள் கொண்டும் சிங்கள இலக்கியங்கள் கொண்டும் ஆதாரத்தோடு விளக்கியுள்ளோம்
இக்காணொளியை இதுவரை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
https://youtu.be/-xHMJK4x9Sg?t=4073 (சோழர்கள் அகம்படியரே காணொயில் கம்பளை மற்றும் கண்டி ராஜ்ஜியங்கள் பற்றிய செய்திகள் )
இவ்வாறு தமிழர்களான அகம்படியர்கள் பின்னாட்களில் தாங்கள் ஆண்ட பகுதியில் பெரும்பான்மை மதமாக இருந்த புத்த மதத்திற்கு மாறினர் பின்னாளில் அவர்கள் தமிழர் அடையாளத்தில் இருந்து சிங்கள அடையாளத்திற்குள்ளும் தள்ளப்பட்டனர்.
அதற்கும் பின்னால் கி.பி 16ம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்கள் இலங்கையின் மீது படையெடுத்தும் , மதுரை நாயக்கர்கள் கண்டி அரசனுக்கு பெண் கொடுத்தும் கண்டி ராச்சியத்தை தங்களுடையதாக மாற்றிக்கொண்டனர்.
அந்நிய படையெடுப்பு காலங்களில் கண்டி, சப்பிரகாமம் , கொத்தமல்லி போன்ற இடங்களில் புனிதப்பல் மறைத்து வைக்கப்பட்டது.
இலங்கையில் பல்வேறு ராஜ்ஜியங்கள் இருந்த போதும் புத்தரின் புனித பல்லை இன்றுவரை நிரந்தரமாக பாதுகாக்கும் உயரிய அந்தஸ்தினை கண்டி இராசதானி பெற்றனர். இதற்கு முன்னர் அகம்படியர்கள் புனித பல்லை பாதுகாத்து வந்தது காரணம் காட்டிப்பட்டுருக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகின்றது.
இணைப்புகள்
1- Girivassipura திரைப்பட டிரைலர் ஸ்கிரின்சாட்.
2- புத்தர் பல் காட்சிக்கு வைக்கபட்டிருக்கும் விகாரையின் உள்படம்
3 புத்தர் பல் காட்சிக்கு வைக்கபட்டிருக்கும் விகாரையின் வெளிப்படம்
4- பொன்னலுறுவை வேளைக்கார் கல்வெட்டு
5-ஹிராங்கோடை அகம்படிய சகையர் கல்வெட்டு குறிப்பு
6- அகம்படிய சகையர் கல்வெட்டு முழுவரிகளுடன்
7- இலங்கையில் கிடைத்த வேளைக்கார் கல்வெட்டு அகம்படியர் சாதிப்பெயருடன் ( அகம்படி முதலிகளில் அழகியன் மெய் வேளைக்கார பல்லவராயன்) ஆதாரம்- இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை 1964-65
விரிவான தகவல்கள் மற்றோரு சந்தர்ப்பத்தில்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்