அகமுடையார்களுக்கு திருப்பரங்குன்ற கோவில் காவல் உரிமையும் பரிவட்ட மரியாதையும் —…

Spread the love

First
அகமுடையார்களுக்கு திருப்பரங்குன்ற கோவில் காவல் உரிமையும் பரிவட்ட மரியாதையும்
———————————

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு என சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம் திருத்தலமாகும்.

இத்திருத்தலத்தில் குறிப்பிட்ட அகமுடையார் இனத்தின் வாரிசுகளுக்கு நெடுங்காலமாக வாசல் மானியம் மற்றும் பரிவட்ட மரியாதை வழங்கப்படுகிறது.

குறிப்பாக கோவிலின் ஆறுகால் பீடத்துக்கதவு ,மடைப்பள்ளி பக்கத்து கதவு(மேலவாசல்) , வாகன அறை, அரசர்கள் கட்டளை அறைகள், ஆறுமுகசாமி மண்டப அறை போன்றவற்றின் காவல் இந்த அகமுடையார் இனத்தவர்களான குறிப்பிட்ட வாரிசுதார்களால் பன்னெடுங்காலமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து திரு.நாச்சியப்பன் எழுதிய “திருப்பரங்குன்றம் கோவில் வேற்கோட்டம் ” நூல் வழியாக அறிந்துகொண்டோம்.

நேற்று( 22-03-2022) அன்று முருகன்-தெய்வயானை திருக்கல்யாண தினம் என்பதால் திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறிப்பிட்ட வாரிசு வாசல் மானியம் வாரிதார்களுடன் ,அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் மற்றும் அண்ணன் திரு. வெங்கடேஷ் (திருப்பரங்குன்றம்) அவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

நிகழ்வுக்கு முன்னதாக குறிப்பிட்ட வாரிசுதார்களுக்கு மாலை,பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

பின்பு தேர் கோவில் முன்பு நிலைக்கு வந்தவுடன் இறைவனின்(முருகனின்) கீரிடத்தை மேற்கூறிய அகமுடையார் இன வாரிசுதார்கள் கோவிலில் இருந்து பெற்று தலையில் எடுத்து சென்று தேரில் உள்ள அர்ச்சகரிடம்(நம்பியார்) அளித்தார்.

இதற்காக தென் கால் கண்மாயில் ஒன்றரை ஏக்கர் நிலம் கோவில் சார்பாக மானியமாக அளிக்கப்படுள்ளதாக தெரிகிறது.

இது போன்ற பல்வேறு செய்திகள் மேற்கூறிய “வேற் கோட்டம்” நூலில் பதிவாகியுள்ளது. படிக்க விரும்புவர்கள் இணைப்பில் உள்ள படங்கள் வழியாக படித்துக்கொள்ளலாம்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட நூலில் சுவாமி திருவீதி உலா நடைபெறும் போது தீவெட்டி பிடிப்பார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த வாரிசுதார்கள் தங்களுக்க்கு கோவிலுக்குள் மட்டுமே தீவெட்டி பிடிக்கும் வழக்கம் உள்ளதாகவும், கோவிலுக்கு வெளியே தீவெட்டி பிடிப்பதற்கு வேறு நபர்கள் உள்ளதாகவும் அகமுடையார் அரண் பாலமுருகன் அவர்களிடம் தெரிவித்தனர்.

அகமுடையார்களுக்கு வரலாற்று அக்கறையின்மை

—————————
அகமுடையார்களுக்கு வரலாறு மீது பெரிதாக ஈடுபாடு இல்லை என்பதும் அவர்களின் வரலாற்று அக்கறையின்மை இன்று வரை தொடர்வது தெளிவாக தெரிகின்றது.

இணையம்,சோசியம் மீடியா பெரிதாக வளர்ந்துள்ள இந்த காலத்திலும் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பரிவட்ட உரிமை குறித்து எவரும் இதுவரை இணையத்தில் பதிவிட்டதாக தெரியவில்லை. பதிவிட்டுருந்தால் நம் பார்வைக்கு வந்திருக்கும்.

இதை தற்செயலாக நாம் நூலில் படித்து அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அவர்களுக்கு கூறியவுடன் அவர் குறிப்பிட்ட வாரிசுதார்களை தொடர்புகொண்டு முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவிற்கு நேரடியாக களத்திற்கு சென்று புகைப்படம் மற்றும் நிகழ்வின் வீடியோக்களை நம் பார்வைக்கு அனுப்பினார்(குறிப்பிட்ட வீடியோ மற்றோரு நாளில் அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிடப்படும்)

இது ஒரு நிகழ்வு அல்ல. தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான கோவில்களில் அகமுடையார்களுக்கு பாரம்பரியமாக பல்வேறு உரிமையும் ,மரியாதையும் அளிக்கப்படுக்கின்றது.ஆனால் இதுவெல்லாம் பெரும்பாலும் பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வருவதேயில்லை.

இன்று நிறையபேர் கோவில்களில் புதிதாகவோ அல்லது சிலகாலம் முன்போ உரிமை வாங்கின்றனர்.

ஆனால் அகமுடையார்கள் தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா, கேரளா, இலங்கை மற்றும் அயல்நாடுகளில் கோவில்களுக்கு நிரம்ப தானங்கள் வழங்கியதாக தமிழ் கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இதுவரை 150க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் அகம்படியர் எனும் இன்றைய அகமுடையார் இனத்தவர்கள் கோவிலுக்கு அளித்த தானங்கள் பற்றியும் கோவிலில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பற்றியும் பேசுகின்றன.

ஆம் தனி சமுதாயமாக கணக்கிட்டால் வேறு எந்த சமுதாயத்தையும் விட அகமுடையார்கள் மிக அதிக எண்ணிக்கையில் கோவில்களுக்கு கொடைகளை வழங்கியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக அகமுடையார் பெண்கள் ,தமிழக பெண்களில் மற்ற எந்த சமுதாயத்தினரையும் விடவும் அதிக கொடைகளை வழங்கியுள்ளனர்( இந்த தானங்களின் முழுப்பட்டியலும் பின்னாளில் நம் பக்கத்தில் வெளியிடப்படும்) .

ஆனால் இன்றோ இந்த உரிமைகள் பல நம்மிடம் இல்லை அப்படியே உரிமைகள் இருந்தாலும் அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைப்பதில்லை.

இனிமேலேனும் அகமுடையார்கள் தங்கள் பெருமையை காக்கும் வண்ணமும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணமும் இச்செய்திகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

மேலதிக செய்தி
————–
கோவில்களை பாதுகாவல் செய்வது அகமுடையார்களுக்கு புதிதான தொழில் அல்ல.

தங்கள் உறவினர்களான அரசர்களை பாதுகாத்த அகம்படியர்கள் பின்னாளில் அரசர்களின் கோட்டைகளை பாதுகாத்தனர், அரசுக்கு வருவாய் அளிக்ககூடிய வணிகப்பாதைகளை பாதுகாத்து வணிகர்களுக்கு பாதுகாவல் வழங்கினர். அஞ்சினான் புகலிடம் உருவாக்கி பாதுகாவல் தேடியவர்களுக்கு ஆசிரியம் வழங்கினர்.

பின்னர் தேவகோட்டம் எனும் கோவில்களையும் பாதுகாக்க தொடங்கினர்.

பூலாங்குறிச்சியில் கிடைத்த கி.பி 3 அல்லது 5ம் நூற்றாண்டு கல்வெட்டு செய்தியில் “உள்மனையார் ” என்ற பெயரில் கோவிலை பாதுகாத்தல் செய்ததை காண்கின்றோம்.

இலங்கையில் கூட அகம்படியார்கள் புத்தரின் புனிதப்பல்லை பாதுகாக்கும் உயரிய கெளரவத்தை அந்நாளில் பெற்றிருந்தனர்.

இப்படி பல்வேறு செய்திகள் தொடர்ச்சியாக காணக்கிடைக்கின்றன.

இதுபற்றி விரிவாக பேசவேண்டும் தான் ஆனால் கணிப்பொறியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிக நேரம் எழுத முடியவில்லை என்பதால் இத்தோடு முடிக்கின்றோம்.

மற்றோரு சந்தர்ப்பத்தில் இதனை விரிவாக பேசலாம்.







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo