First
தங்க சூரிய பிரபை விழா வீடியோக்கள்- மற்றும் அகமுடையார்களுக்கு என்று தான் விழிப்புனர்வு வருமோ!
———————
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக #அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் தொடங்கி கல்வெட்டு, வரலாற்று தகவல்களை வெளியிட்டு வருகின்றோம். ஒவ்வொரு பதிவிலும் 20-30 பேர் தாண்டி லைக் செய்வதும் இல்லை. 3 பேர் தாண்டி சேர் செய்வதும் இல்லை.
சரி அகமுடையார் தகவல்களை ஒரே இடத்தில் பார்க்க அப்ளிகேசனை உருவாக்கி அனைத்து அகமுடையார் இயக்கங்கள்,சமுதாய தகவல்களை ஒரே இடத்தில் பார்க்க வழி செய்தால் இந்த அப்ளிகேசனை பற்றி சமுதாயத்தவர்கள் அவர்களுக்கு தெரிந்த வாட்ஸ் அப் குருப் ,பேஸ்புக் குருப் ,டெலிகிராம் குருப்களில் சேர் செய்ய பலமுறை கோரிக்கை வைத்தோம் ஆனால் ஒருவரும் சேர் செய்ததாக தெரியவில்லை .அகமுடையார் ஒற்றுமையின் பதிவுகளில் அப்ளிகேசன் பற்றிய தகவல்களை சேர்த்து வெளியிடும் போது அன்று மட்டும் ஒரு சிலர் டவுன்லோட் செய்வது என்று இன்று வரை 300 பேர் டவுன்லோட் செய்துள்ளார்கள் .அதை தாண்டி வேறு யாரும் சேர் செய்ததாக தெரியவில்லை. சேர் செய்திருந்தால் தான் ஆயிரம்,10 ஆயிரம் என டவுன்லோட் சென்றிருக்குமே! ஒருவேளை நான் என்னை பற்றிய தனிப்பட்ட வரலாறை தான் அகமுடையார் ஒற்றுமை பதிவுகளில் வெளியிடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா ? புரியவில்லை!
சரி போன் நம்பர் இல்லாததினால் தான் சமுதாயத்திற்கும் தளம் நடத்தும் நமக்கும் தொடர்பு இல்லாது இருக்கிறது என்று கருதி வாட்ஸ் அப் நம்பரும் வழங்கி அகமுடையார் சமுதாய தகவல்களை சேர் செய்யுங்கள் அவ்வளவு ஏன் அவரவருக்கு தெரிந்த ஏன் அவர்கள் குடும்ப பட்டம், குலதெய்வம் குடும்ப வரலாறு தகவல்களையாவது சேர் செய்யுங்கள் அதன் மூலம் அகமுடயார் சமுதாயத்தின் வரலாற்றை மீட்டெடுக்கலாம் என்றால் ஒருவரும் ஒரு தகவலையும் சேர் செய்வதில்லை.
நேற்று மன்னார்குடியில் நடந்த தங்க சூரிய பிரபை திருவிழா புகைப்படங்கள் ,வீடியோக்களை நமது வாட்ஸ் அப் நம்பருக்கு யாரேனும் உறவுகள் அனுப்புவார்கள் என்று நம்பி ஏமார்ந்தோம்!
என்ன தான்செய்வது உங்களை வைத்து! எதோ பண்ணுங்கள்!
பின் நாங்களாக தேடி ஒருவழியாக ஓரளவிற்கு இருந்த வீடியோக்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.
வீடியோ எடுத்த சம்பந்தபட்டவர்களுக்கு நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்