சர்வதேச மகளிர் தினம்- சிறப்பு பதிவு: அகம்படியர் பெண்கள் செய்த தானங்கள் தொகுப்பு 1
———————-
நீரின்றி அமையாது உலகு என்பதை போல ,பெண்கள் இல்லாவிட்டால் ஆண்கள் வாழ்வு சிறந்திடாது!
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நாளான இன்று 8 மார்ச் 2023 நன்னாளில் அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்நன்னாளில் அகமுடையார் சமுதாய பெண்கள் வழங்கிய தானம் பற்றிய செய்திகளை வரலாறின் ஊடாக காண்போம்!
தமிழக வரலாற்றில் பெண்கள் நில உரிமை பெற்றிருந்ததோடு தானமும் வழங்கியுள்ளனர். ஆனால் இவர்களில் அகமுடையார் சமுதாய பெண்களே முதலிடம் பெறுகின்றனர். பல்வேறு கல்வெட்டுக்கள் இவர்கள் வழங்கிய தானத்தை சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் குறிப்பாக பெண்கள் பெயரை குறிப்பிடும் போது அவர்களின் தாயார் பெயரும் இடம் பெறுகிறது. இது தமிழ்நாட்டில் கிடைத்த பெண்கள் குறித்த கல்வெட்டுக்களில் காண கிடைக்காத சிறப்பு ஆகும். இது தானம் வழங்கிய பெண்கள் மட்டுமல்ல அவர்களின் தாயாரும் சமூகததில் உயரிய நிலையில் இருந்ததை காட்டுவதோடு அகமுடையார் சமுதாயம் பெண்களுக்கு அளித்த உயரிய இடத்தையும் காட்டுகின்றது.
இவ்வாறு பெண்ணின் பெயரோடு தாயார் பெயரையும் இணைத்து கூறும் இந்த மரபு 1000 ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டுக்களில் காணப்படுவது போல 400 ஆண்டிலான அவணியாபுரம் கல்வெட்டுக்களிலும் தொடர்வதை காணமுடிகின்றது.
சரி இப்போது சில கல்வெட்டு செய்திகளை காண்போம்!
அகம்படி பெண்டுகளில் களாப்பாள நாச்சி
—————————–
அனுபத்தூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு அனுபத்தூர் அகம்படி பெண்டுகளில் களாப்பாள நாச்சி நிலத்தை தானமாக வழங்குகிறார்.
அவருக்கு பின் வந்த களாப்பாள நாச்சியின் மகளான வீரப்பெருமாள் நாச்சி தான் தாய் செய்த தர்மத்தை தொடர்ந்து செய்திட 2000 காசுகள் மகள் தானம் வழங்கிறார்.
வரலாற்றில் தாய் செய்த தானம் தொடர்ந்திட மகளும் தானம் தந்தது உலக வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும். தமிழ்நாட்டு வரலாற்றில் சிறப்பு வாய்ந்த கல்வெட்டுக்களில் இதுவும் ஒன்று!
ஆதாரம்:
தென் இந்திய கல்வெட்டு தொகுதி 7,கல்வெட்டு எண் 104, மத்திய அரசு வெளியிடு
திருவோத்தூர் வரலாறு
ஆசிரியர்: சரித்திர செம்மல் .கிருஷ்ணமூர்த்தி
பக்க எண்கள்: 82,83
வங்கம்மை மகள் பெருமாநாச்சி
————————–
வங்கம்மை மகள் பெருமாநாச்சி காஞ்சிபுரம் அருளாள பெருமாள் கோவிலில் தான் வைத்த விளக்குகள் எரிவதற்காக 32 மாடுகளை தானம் அளித்துள்ளார்.
ஆதாரம்: காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுக்கள் ,கல்வெட்டு எண் 171
இக்கல்வெட்டின் மேலதிக தகவல்கள்: https://www.agamudayarotrumai.com/921/
அகம்படி நங்கை
—————
வடவாயிற் செல்வன் மனைவி அகம்படி நங்கை
மனவில் கோட்டத்தில் அமைந்துள்ள மனவில் நாட்டு செஞ்சியில் உள்ள ஜெயமதீஸ்வரம் உடைய மகாதேவர் கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்க அகம்படி நங்கை என்பவரிடமிருந்து சிவபிராமணர்கள் காசுகள் பெற்றுக்கொண்ட செய்தி பதிவாகியுள்ளது.
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை 1939-1940. கல்வெட்டு எண் 159
இக்கல்வெட்டின் மேலதிக தகவல்கள்: https://www.facebook.com/891728770860514/posts/5212324118800936
அகப்பரிவார பெண்டுகளில் அரையன் உமையாழ்வி
———————
குறிப்பிட்ட இந்த கல்வெட்டு செய்தியில்
விருத ராஜ பயங்கர வளநாட்டு குறுக்கை நாடு என்று சோழர் காலத்தில் வழங்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை திருச்சாமுன்டேஸ்வரர் கோயிலுக்கு “பெரிய அகப்பரிவார பெண்டுகளில் அரையன் உமையாழ்வி ” எனும் பெண் பள்ளியறை நாச்சியார், ஆள் கொண்ட நாயக தேவர் ,நாச்சியார் போன்ற இறைத்திருமேனிகளை வழங்கியுள்ளதோடு இத்திருமேனிகளுக்கு திருப்படி மாற்றுக்கு 120 காசுகளை கோயிலில் உள்ள சிவபிராமணர்களிடம் வழங்கியுள்ளார்.
ஆதாரம்: தமிழ்நாட்டு கல்வெட்டுக்கள் ,வருடம் 2004, கல்வெட்டு எண் 6/1983, தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு.
இக்கல்வெட்டின் மேலதிக தகவல்கள்: https://www.agamudayarotrumai.com/349/
அகம்படி பெண்டு பெரியநாச்சி மகள் நம்பாண்டாள்
——————————
ஆற்றூர் கூட்டத்தில் அமைந்துள்ள ஆறகளூரில் திருப்பைஞீலி உடைய நாயனார் கோவிலுக்கு தேவதானமாக நிலம் வழங்கியுள்ளார்.
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை ( எண் நினைவில் இல்லை மற்றோரு பதிவில் இதை நினைவுபடுத்தி குறிப்பிடுகிறேன்)
பார்க்க இணைப்புகள்:
வெள்ளச்சி மகள் செவனாயி
———————
1000 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல 400 வருடங்கள் முன்பாகவும் அகமுடையார் பெண்கள் தானம் வழங்கியுள்ளனர்.
மதுரை அவணியாபுரம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோயிலின் கருவறை மற்றும் இந்த ஆலயத்தை கட்டியவர் வெள்ளச்சி மகள் செவனாயி (சிவனாயி) என்பவர் என்பதை அறிய முடிகின்றது. இக்கோயிலில் இவரது தாய் தந்தை சிலை அருகே செவனாயி சிலையும் உள்ளது.
ஆதாரம்: பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள், பக்கம் எண் 128 ஆசிரியர் ரா.உதயகுமார்.
மற்றும்
ஆவணம் இதழ் 26,பக்கம் எண் 191
இக்கல்வெட்டின் மேலதிக தகவல்கள் லிங்க்:
https://www.facebook.com/100063919813164/posts/509128084561181
புதிய பதிவு:
இப்பதிவை அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பின் கமேண்ட் வழியே கிடைத்த தகவல்.
மன்னார்குடி திருமக்கோட்டை அருகில் உள்ள கோவிந்தநத்தம் பகுதியில் உள்ள இலுப்பை மரங்களையெல்லாம் அதே பகுதியை சேர்ந்த ராமதேவர் என்பவரது மகள் பெருமாள் கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார்.
ஆதாரம்: ஆவணம் இதழ் 28 ,பக்கம் எண்கள்
தகவல் உதவி: மகேஸ்வரன் தேவர்
இந்த இலுப்பை மரங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கோவில் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை புரிந்துகொள்ளலாம்.
குறிப்பு:
இது போன்று நீங்கள் பார்க்கும் வரலாறு தகவல்களை அகமுடையார் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவதன் மூலம் அவற்றை நாங்கள் ஆராய்ந்து அனைவரும் அறிய வெளியிட முடியும்.
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629
மேலும் அகமுடையார் சமுதாயம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்வுகள் ,அகமுடையார் சமுதாயம் சார்ந்த ஆளுமைகள், பெரியோர்கள் , வரலாற்று செய்திகள் உங்களுக்கு தெரிந்தால் அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் பெயருடன் தகவலை அகமுடையார் சமுதாய மக்கள் மற்றும் பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம்!
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629
இத்தொகுப்பில் சோழ ,வாணாதிராய அரச குல மகளிர் பெயர்கள் தனிநபர்கள் பலரை வேளைபளு காரணமாக குறிப்பிட முடியவில்லை .வரும் காலங்களில் அவற்றையும் திரட்டி விரிவாக வெளியிடுவோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்