First
வள்ளிமலை முருகன் கோவில் மண்டகப்படியும்
————————————-
வேலூர் மாவட்டம்,காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வள்ளிமலை கோவில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது.
முருகன் வள்ளியை மணந்த திருத்தலமாக இது நம்பப்படுகிறது.
இத்திருதலத்தில் மாசி மாத பிரம்மோச்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழா நிகழ்வில் வள்ளியின் சார்பாக அவர் பிறந்த நம்பிராசன் எனும் குறவர் மக்கள் சார்பாக சீர் செய்யப்படுகிறது.
அதே போல் வள்ளிமலை வாழ் அகமுடையார் துளுவ வேளாளர் சமுதாயத்தினர் முருகன் சார்பாக சீர் செய்கின்றனர்.
மேலும் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் அகமுடையார் துளுவ வேளாளர் சமுதாய மக்கள் சார்பாக சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
அதே போல் வள்ளிமலையில் அகமுடையார் துளுவ வேளாளர் மண்டபமும் இயங்கி சேவை புரிந்து வருகின்றது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்: விருஞ்சபுரம் ரோலக்ஸ் ஜீவா
குறிப்பு:
கல்வெட்டுக்களில் தானம் அளித்ததாக கல்வெட்டு ஒன்று கூட இல்லாத சிலர் இன்று கோவில் என்றாலே தாங்கள் தான் என்று போலியாக விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள்! ஆனால் நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களில் கோவில்களுக்கு தானங்களை வழங்கியதாக குறிப்போடும் இன்றும் கோவிலில் முக்கிய மற்றும் முதன்மை நாள் திருவிழா நடத்தும் உரிமையை பெற்றுள்ள அகமுடையார் இனம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளமலேயே இருப்பதால் நமது வரலாறு மறைக்கபட்டுக்கொண்டே இருக்கிறது. இனியாவது விழிப்புனர்வு அடையவேண்டும்.
இது போன்ற அகமுடையார் சமுதாயம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்வுகள் ,அகமுடையார் சமுதாயம் சார்ந்த ஆளுமைகள், பெரியோர்கள் , வரலாற்று செய்திகள் உங்களுக்கு தெரிந்தால் அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் பெயருடன் தகவலை அகமுடையார் சமுதாய மக்கள் மற்றும் பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம்!
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629
#துளுவவேளாளர்
#அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்