First
மதுரை ஆவியூரை சேர்ந்த சோழ கங்க தேவன்
—————————–
சோழ கங்க தேவன் கல்வெட்டுக்களில் சாதியை குறித்த கல்வெட்ட்டுக்கள் அனைத்தும் சோழ கங்கன்,சோழ கந்த தேவன் என்பவை எல்லாம் அகம்படியர் சாதியை காட்டியே நிற்கின்றன.
உதாரணத்திற்கு
அகம்படியாரில் சிங்காந்தி சோழ கங்க தேவன்
ஆதாரம்: திருவண்ணாமலை கல்வெட்டுக்கள், கல்வெட்டு எண் 330
சோழ கங்கனேன் படைப்பற்றான அகம்படிபற்றுக்கும்…
ஆதாரம்: அத்திவெட்டி கல்வெட்டு ,காலம் கி.பி 1061
இப்படிப்பட்ட சோழகங்கன் கல்வெட்டுக்கள்
இன்றும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மதுரை,சிவகங்கை,இராமநாதபுரம் பகுதியில் கிடைக்கின்றன.
அந்த வகையில்
மதுரை, அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஆவியூர் கிராமத்தில்
அழகன் அருளாளப்பெருமாள் சோழ கங்க தேவர் , ஆவியூர் கிராமத்தில் உள்ள இராசேந்திர சோழீஸ்வரமுடையார் மற்றும் நாச்சியாருக்கு நிலமளித்த செய்தியை கி.பி 1250ம் ஆண்டு காலத்திய கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
கோவிலின் இறைவன் பெயர் இராசேந்திர சோழீஸ்வரமுடையார் என்பதால் இக்கோவில் இராசேந்திர சோழன் நினைவாக அல்லது அவர் காலத்தில் உருவாக்கப்பட்ட கோவிலாக இருந்திருக்க வேண்டும்.
இக்கல்வெட்டு பாண்டியர் ஆட்சியாண்டை குறிப்பிடுவதாலும் , கல்வெட்டு வழங்கியவர் சோழ கங்கன் என்ற பட்டப்பெயர் கொண்டுள்ளதால் இவர் சோழர்களின் வழியில் வந்த இவர் பாண்டியர்களிடம் அதிகாரியாக பணியாற்றிய செய்தி தெரியவருகின்றது.
சோழகங்கன்,சோழ கங்க தேவன் போன்றவர்கள் அகம்படியர் சாதி என்றே கல்வெட்டுக்களில் குறிக்க்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும் இக்கல்வெட்டு குறிப்பிடும் ஆவியூர் இன்றும் அகம்படியார்கள் நிறைந்து வாழும் அகம்படியர்களின் ஆளுமைக்குட்பட்ட ஊராகும் என்பதில் இருந்து இக்கல்வெட்டு குறிப்பிடும் சோழ கந்த தேவன் என்பவர் அகம்படியர் இனத்தை சேர்ந்தவர் என்பது தெளிவாகும்.
குறிப்பிட்ட சோழ கங்க தேவர் தனக்கு சொந்தமான இரண்டு மாகாணி நிலத்தை கோவிலுக்கு அளித்ததோடு பல்வேறு வரிகளையும் அளித்துள்ளார். மேலும் சோழ கங்க தேவர் கல்வெட்டின் 15ம் வரியில் ஆவியூரார் என்று குறிப்பிடப்படுவதால் சோழ கங்க தேவர் குறிப்பிட்ட இந்த ஆவியூரை பூர்வீகமாக கொண்டவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஆவியூரில் மற்றோரு கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த இரண்டு கல்வெட்டுக்களை பற்றியும் மற்றோரு நாள் விரிவாக பேசலாம்.
ஆவியூரில் சில விவரங்கள் தெரிவதற்கு ஊர்காரர்கள் தொலைபேசி எண் கேட்டிருந்தோம். கிடைத்திருந்தால் விரிவாக செய்தியை பதிவு செய்திருக்கலாம்.
அகமுடையார் இனத்தில் வரலாற்று ஆர்வம் இருப்பவர்கள் இலட்சத்தில் ஒருவராகவும் , வரலாற்றில் தேர்ச்சி பெற்றவர் கோடியில் ஒருவராகவும் இருக்கின்றனர் என்பது நமக்கே தெரிகிறது.
சரி பார்ப்போம்.
இணைப்பு
1,2- ஆவணம் இதழ் 4
3- அகம்படியாரில் சிங்காந்தி சோழ கங்க தேவந் ஆதாரம் திருவண்ணாமலை கல்வெட்டுக்கள் தொகுதி,கல்வெட்டு எண் 330
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்