First
சொந்த ஊரிலே அறியப்படாத அகமுடையார் ஆளுமைகள் – அறியாமையின் உச்சம்
——————————-
சேதுபதி செப்பேடுகளிலும் ,புதுக்கோட்டை கல்வெட்டுக்களிலும்
கமால் என்பவர் தனது “சேதுபதி செப்பேடுகள்” என்ற நூலில்
ஆங்கிலேயரை முதன்முதலில் போரில் வென்ற தமிழரான வெள்ளையன் சேர்வை , சேதுக்கரையை கண்போல் காத்த வைரவன் சேர்வை போன்றோர் பற்றிய அறியமுடிகின்றது என்றும் அதே நேரம்
சேதுபதிகளின் அரசியல் பிரதிநிதிகளாக(ஆளுநர்) போன்று விளங்கிய
பெருமாள் சேர்வை மற்றும்
சொக்கப்பன் சேர்வை பற்றி பெரிதாக அறிந்து கொள்ள முடியவில்லை என்று அதே நூலில் குறிப்பிடுகின்றார்(பார்க்க இணைப்பு 3)
உண்மையில் வெள்ளையன் சேர்வை மற்றும் வைரவன் சேர்வை பற்றி கூட தென் மாவட்ட அகமுடையார்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதே கசப்பான உண்மை.
இவர்களை பற்றிய குறிப்புகள் ஆங்கிலேயரின் ஆவணங்களிலும் , தனியா குறிப்புகள், தல குறிப்புகளிலும் ,கல்வெட்டுக்களிலும் இடம் பெறுவதின் மூலம் மட்டுமே சிறிதளவாவது தகவல் அறியப்படுகின்றது.
இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால்
பெருமாள் சேர்வை மற்றும்
சொக்கப்பன் சேர்வை பற்றி அவர்கள் பிறந்த ஊராக அறியப்படும் இராமநாதபுரம் அருகில் உள்ள பாண்டியூரில் கூட தகவல்களை பெற முடியவில்லை என்கிறார்.
இந்த நூல் வெளியான 1992ம் வருடத்திலேயே தகவல் ஏதும் அறிந்துகொள்ள முடியவில்லை என்றால் 20 வருடத்திற்கு பின் அந்த ஊரில் தகவல் சொல்ல ஆள் இருப்பார்களா என்ன???
இது தான் இந்த அகமுடையார் இனத்தின் சாபக்கேடு!
கல்வெட்டுக்கள்,இலக்கியங்கள்,செப்பேடுகள் என்பன போன்ற வரலாற்று தரவுகளில் பெரும் ஆளுமையோடும், புகழோடும் குறிப்பிடப்படும் அகமுடையார் இனத்தவர்கள் பற்றி அவர்கள் சொந்த ஊரில் கூட எந்த தகவலையும் நம்மால் பெற முடியாது!
ஏன் என்றால் அகமுடையார்களுக்கு வரலாற்றை மதிக்க வேண்டும் ,வரலாற்று தரவுகளை பாதுகாத்து வெளிப்படுத்த வேண்டும் என்ற எந்த விதமான குறைந்தபட்ச ஆர்வமோ,ஈடுபாடோ இல்லை. தங்கள் தனிப்பட்ட குடும்ப வரலாற்று பெருமை என்று கூட அவர்கள் பாதுகாத்து வைக்கவில்லை ,இருக்கும் ஒரு சிலர் கூட அதை வெளிப்படுத்தவில்லை.
இப்படியே போனால் இருந்த இடமும் ,சுவடும் தெரியாமல் வரலாறு முன்னர் அழிந்து போனது போல் இனியும் நடக்கும்.
இராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும்
உடையப்பன் சேர்வை,,ரகுநாதன் சேர்வை,திண்ணப்பன் சேர்வை , இளமனூர் சோளகை சேர்வை இன்னும் பல அகமுடையார்கள் ஆவணங்களில் இடம் பெறுகிறார்கள்.இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அகமுடையார்கள் பற்றியும் அகமுடையார் ஒற்றுமை யீடிப் சேனலில் காணொளி விரைவில் வெளியிடப்படும்.
ஆதாரம்:
நூல்: சேதுபதி மன்னர் செப்பேடுகள்
பக்க எண்கள் 964,965,966
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்