தென் மாவட்டத்தில் சோழர் தொடர்பான ஊர்களும் அகமுடையார்களும் ———————-…

Spread the love

First
தென் மாவட்டத்தில் சோழர் தொடர்பான ஊர்களும் அகமுடையார்களும்
——————————————————-
சோழர்கள் எச்சாதியினர் என்பதை கண்டறிவதற்கு சோழர்கள் சென்ற இடங்களும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

சோழர்கள் எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் அகமுடையார்கள் நிறைந்து காணப்படுகின்றனர் என்பதுடன் அவ்வூர்களில் அகமுடையார்களின் கல்வெட்டு செய்திகளும் கிடைக்கின்றன.

சிலர் சோழர் தங்கள் சாதியினர் என்பார்கள் ஆனால் சோழர் ஆட்சி செய்த தஞ்சையில் கூட பெரும்பான்மையாக இருக்க மாட்டார்கள்! அதே போல் சோழர்கள் வென்ற பல இடங்களில் (சோழர் கல்வெட்டுக்கள் காணப்படும் ஊர்களில்) அந்த சாதியினர் ஊருக்கு ஒரு ஒருவர் ஏன பேருக்கு கூட இருக்க மாட்டார்கள்.

உதாரணத்திற்கு தென் தமிழகமான பாண்டி மண்டலத்தில் சோழர்கள் பல காலம் ஆட்சி நடத்தியுள்ளனர். சோழர்களின் கல்வெட்டுக்கள் தென் மாவட்டத்தில் ஏராளம் கிடைக்கிறது . அதுமட்டுமல்ல சோழர்களின் எச்சமாக பாண்டி மண்டலமான தென் மாவட்டத்தில் சோழர் மற்றும் சோழர் குடிப்பெயர் தாங்கி பல்வேறு பெயர்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன.

இவற்றில் சில பெயர்களை நாம் ஆராய்ந்தோம் . இந்த ஊர்கள் அனைத்தும் அகமுடையார்கள் நிறைந்து வாழும் கிராமங்கள் .சில ஊர்கள் அகமுடையார்கள் மட்டுமே வாழும் ஊர்களாகவும் உள்ளன. அதுமட்டுமல்ல இவ்வூர்களில் அகமுடையார்களின் கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு

சோழ மன்னான விசாயாலயன் பெயரை தாங்கி
விசாலயன் கோட்டை என்ற ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

சோழபுரம் என்ற ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

சோழம்பட்டி என்ற ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

சோழர்களின் குடிப்பெயரான
சூரிய குலப்பெயரை தாங்கி சிவகங்கை மாவட்டத்தில்
சூரியன் கோட்டை என்ற ஊர் உள்ளது

சோழர்களின் ஏழு என்ற அடையாளத்தை தாங்கி
எழுவன்கோட்டை என்ற ஊர் இதே சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது

சோழர்களின் துணைப்படையினரான பழுவேட்டரையரின் ஊரான பழுவூர் என்ற பெயரை தாங்கி
சிவகங்கை மாவட்டத்தில் பழுவூர் என்ற ஊர் உள்ளது. ஏற்கனவே திருச்சி-ஜெயங்கொண்டம் சாலையில் ஓர் பழூவ்ர் உள்ளது குறிப்பிடத்தக்கது

மேலே குறிப்பிட்ட சோழம்பட்டி என்ற பெயரில் விருதுநகர் கள்ளிக்குடி அருகிலும் ஊர் உள்ளது.

இதே கள்ளிக்குடி அருகில் சோழர் குடிப்பெயர் தாங்கி ஆதனூர் என்ற ஊர் உள்ளது

மேற்குறிப்பிட்ட அனைத்து ஊர்களும் அகமுடையார்கள் நிறைந்து வாழும் ஊர்களாகும்..

அதே போல் இராஜபாளைய அருகில்
சோழபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் அகமுடையாரின் சோழர் கால கல்வெட்டு கிடைத்துள்ளது. பார்க்க இணைப்பு 7,8 . அதே போல் இந்த சோழபுரம் என்ற ஊருக்கு அருகில் சிதம்பரபுரம் என்ற ஊரும் உள்ளது! என்ன பொருத்தம்!

மேலும் கமுதி அருகில் வீரசோழன் என்ற ஊர் உள்ளது. இங்கு சோழர்களின் அரண்மனை இருந்துள்ளது சோழர்கள் பாண்டிய நாட்டை வென்று சோழ பாண்டியர் என்ற பெயரில் ஆண்டு வந்தனர்.

பாண்டிய நாட்டை சில காலம் சோழர்கள் ஆண்ட போது இவ்வூரில் சோழர்களும் அவர்குடியினரும் அரண்மனை அமைத்து தங்கியிருந்துள்ளனர்.

நூல்: விருதுநகர் மாவட்ட வரலாறு பக்கம் 119-தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு .பார்க்க : படம் 1 (பார்க்க இணைப்பு 9)

வீரசோழன் என்ற ஊரில் சோழன் மாளிகை இருந்துள்ளது அதனால் சோழர்களின் நிலைப்படை அம்மாளிகையை பாதுகாத்துள்ளது. சோழர் ஆட்சி வீழ்ந்த பின் நிலைப்படையினரான அகமுடையார்கள் இவ்வூரிலேயே பூர்வீகமாக கொண்டு தங்கிவிட்டனர்..

இன்றும் கூட இவ்வூரில் முஸ்லீம்களை அடுத்து பெரும்பான்மையானோர் அகமுடையார்களே!

இவ்வாறு தென் மாவட்டத்தில் சோழர்களின் பெயரையும் குடிப்பெயரையும் ,அடையாளத்தையும் தாங்கி பல்வேறு பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள் மற்றும் அகமுடையார் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ள ஊர்களாகும்.

ஆனால் மேலே குறிப்பிட்ட ஊர்களில் ஊருக்கு ஒரு ஒருவர் ஏன பேருக்கு கூட இல்லாத சாதியினர் எல்லாம் தாங்கள் தான் சோழர் சாதி என்பது மிகவும் வேடிக்கையானது என்பதை சற்றே சிந்தித்தால் உங்களுக்கே விளங்கும்.

மேலதிக செய்திகள்
குறிப்பிட்ட வீரசோழன் என்ற ஊரில் சோழன் மாளிகை இருந்துள்ளது அதனால் சோழர்களின் மூலப்படையான நிலைப்படை அம்மாளிகையை பாதுகாத்தது . அகமுடையார்கள் நிலைப்படையாக இருந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. அகம்படியரான நந்திபன்மனின் நிலைப்படை கல்வெட்டை ஏற்கனவே வெளியிட்டோம் (இப்பதிவிலும் இணைத்துள்ளோம்) மேலும் ஆதாரங்களை எதிர்வர உள்ள காணொளியில் வெளியிடுவோம்.

அது போல் சோழ கங்க தேவன் என்ற பெயரில் தென் மாவட்டத்தில் பல கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. இந்த சோழ கங்க தேவன்கள் சோழர்களின் உறவினர்களான இவர்கள் சோழா அரசப்பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டதையும் இவர்கள் அகம்படியர் என்பதற்கான கல்வெட்டுக்களையும் “சோழர் சாதி என்ன? பாகம் 1” காணொளியில் வெளியிட்டிருந்தோம்.

பார்க்காதவர்கள் கீழ்கண்ட இணைப்பில் அக்காணொளியை காணலாம்.

மேலும் இக்காணொளி பெரிதாக நீளமாக இருப்பதாக உணர்வதால் சற்றே சுருக்கமாகவும் அதே நேரம் வேறு தரவுகளையும் உள்ளடக்கிய புதிய காணொளி விரைவில் நமது அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிடப்படும்.

தென் மாவட்டத்தில் தெலுங்கு பேசும் மக்களின் குடியேற்றத்தால் நிறைய பூர்விக பெயர்கள் மாற்றம் பெற்றுள்ளதால பழம் பெயர்களை நாம் அறிய முடியவில்லை இருப்பினும் இப்போது கூட சோழர் பெயர் தங்கிய பெயர்கள் தென் மாட்டத்தில் கிடைக்கின்றன.

மேலும் இன்னும் நிறைய ஊர்களை நாம் ஆராயவில்லை ,நம் கவனத்திற்கு வரவில்லை. அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் விவரங்கள் தெரிந்துகொள்ள முடியும்.







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo