First
“போலி சுவரோட்டிகள்”
மதுரை பகுதியில் ஒட்டப்பட்ட ஒரு சுவரோட்டியை கண்ட அகமுடையார் உறவுகளில் ஒருவர், அச்சுவரோட்டியை படம் எடுத்து எனது புலனம் எண்ணிற்கு பகிர்ந்தார்.
அச்சுவரோட்டியை பார்த்து கோவப்படுவதா! நகைப்பதா! என தெரியவில்லை. சுவரோட்டியில் இருப்பதோ நாலு வரிகள், அதிலும் எழுத்துப்பிழை.
ஏனெனில், அச்சுவரோட்டியை அச்சடித்து ஒட்டியது “அகமுடையார் அரண்” அமைப்பு அல்ல!
தனது சொந்த பெயரில் அச்சடித்து ஒட்டுவதற்கு மனமில்லாத “நிழல் மனிதர்கள்”
அகமுடையார் அரண் அமைப்பின் பெயரை குறிப்பிட்டு ஒட்டிய செயலை கண்டிக்கவே இந்த பதிவு.
அகமுடையார் அரண் அச்சிட்டு ஒட்டும் அனைத்து சுவரோட்டிகளிலும், அமைப்பின் தொடர்பு எண் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேலும், அந்த சுவரோட்டியின் கண்டன வாசகங்களும் மிக கடுமையாக இருக்கும். இந்த மாதிரி, பொருள் புரியாத அர்த்தத்தில் இருக்காது.
திமுகவிற்கு வாக்களித்த அகமுடையார் இனமே!
என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு
தமிழகத்தில் வாக்களித்த அகமுடையார் இனமே!
என்று ஆளும் கட்சியை குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதை தவிர்த்ததின் மர்மம்?
மேலும், 21 மேயர்கள் ஒருவர் கூட அகமுடையார் இல்லை என்பதே தவறான வாதம். வட மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் அகமுடையார் தானே! அவரை மறைக்கும் நோக்கம்!!
—————————————————–
திமுக தலைமையே!
சட்டமன்ற தேர்தலில்,
தென்மாவட்ட அகமுடையார் பேரினம் புறக்கணிக்கப்பட்டதின் தொடர் கதையாக, மேயர், துணை மேயர், நகர மன்றம், பேருராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளில்….
மதுரை, தஞ்சை மாநகராட்சி
மேயர் தேர்விலும்,
இராமநாதபுரம், இராமேசுவரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகரமன்றத் தலைவர் தேர்விலும்….
திருமங்கலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பேரூராட்சித் தலைவர் தேர்விலும்…
பெரும்பான்மை அகமுடையார் பேரினம் புறக்கணிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசியல் பழகு! அதிகாரத்தை கைப்பற்று!!
அகமுடையார் அரண் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 94429 38890.
———————————————————
இந்த மாதிரி கண்டன சுவரொட்டி ஒட்டிவதுதான் “அகமுடையார் அரண்” வழக்கம்,
தங்களின் உண்மையான பெயரில் சுவரொட்டி ஒட்ட மனம் இல்லை எனில், எனது தொடர்பு எண் : 94429 38890. தொடர்பு கொண்டு கூறினால் நாங்கள் சுவரொட்டி அடித்து ஒட்ட தயார்.
இந்த போலி சுவரோட்டியை கடந்து செல்ல தான் நினைத்தேன். ஆனால், இதுபோன்ற தவறான செயலை கண்டிக்காமல் இருந்தால், இதுபோல போலி சுவரொட்டிகள் ஒட்டும் நிழல் மனிதர்களின் செயல் தொடர் கதையாக விடும். அதை தடுக்கவே இந்த பதிவு.
———————————————-
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
தொடர்புக்கு : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்