பேராசிரியர் பொன்முடி அவர்களுக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது- அகமுடையார் சமுதாயத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது!
——————————————–
நமது அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பேராசிரியர் கா. பொன்முடி MLA அவர்களுக்கு இன்று திமுக கழக துணைபொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்காக திமுக கட்சியின் தலைவரும் ,தமிழக முதல்வருமான திரு.ஸ்டாலின் அவர்களுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக நன்றிகள்!
விரைவில் அண்ணன் பொன்முடி அவர்களுக்கு அமைச்சர் பதவியையும் திரும்ப வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்!
முன்னதாக தேவையில்லாத பிரச்சனையை காரணம் காட்டி திறைமை வாய்ந்த நமது அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களை கட்சிபணிகளில் ஒதுக்கப்பட்டு இருந்த போது
அகமுடையார் ஒற்றுமை சார்பில் முக நூல் வழியாக முதன்முறையாக இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம்.
இதையே வலியுறுத்தி
செப்டம்பர் மாதத்தில் மதுரை திருமங்கலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. மேலும் இராமநாதபுரம் நகரத்தில் அகமுடையார் புலிப்படை சார்பிலும் ,திருவண்ணாமலை நகர் அகமுடையார்கள் சார்பில் திருவண்ணாமலை நகரிலும் கோரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அகமுடையார் மக்களுக்கு
————–
அகமுடையார் எனும் தனிசாதியாகவே நாம் கோடிக்கணக்கான மக்கள் தொகையில் உள்ளோம்! ஆகவே மாற்று சாதிகளை
சேர்த்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் அகமுடையார் சமுதாயத்திற்கு இல்லை!
நம் சமுதாயத்தில் ஒரு சதவீத மக்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்தால் நமக்கான வேலைகள் தன்னாலே நடக்கும்! ஆகவே அகமுடையார் சமுதாயமே ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!
அரசியல் கட்சிகளுக்கு
——————
அகமுடையார் சாதி ஒரு கோடி மக்கள் தொகையில் உள்ள பேரினமாகும் ,அகமுடையார் சாதியை புறக்கணித்தால் அது அந்த கட்சிக்குத்தான் பின்னடைவாக அமையும் என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும்!
அகமுடையார் என்பது தனிப்பேரினம். அகமுடையார் சாதிக்கு கொடுக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை அகமுடையார் சாதிக்கு என்று தனியே தான் வழங்க வேண்டும். வேறு சாதிகளை அகமுடையார் சாதியுடன் இணைத்து கொடுத்து விட்டோம் என்றால் அது அகமுடையார் சாதிக்கு கொடுத்ததாக ஆகாது .இனியும் அகமுடையார்கள் ஏமாற மாட்டார்கள்.
இணைப்புகள்
1) தமிழக முதல்வரை பேராசிரியர் அவர்கள் சந்தித்த போது எடுத்த படம்.
2) திருமங்கலம் பேருந்து நிலைய நுழைவுவாசலில் ஒட்டப்பட்ட போஸ்டர்
3) ஒட்டப்பட்ட போஸ்டரில் உள்ள செய்தி
பொன்முடி அவர்கள் அகமுடையார் சமுதாயத்திற்கு என்ன செய்தார் என்று கேட்கும் அகமுடையார் சமுதாயத்தவருக்கு
—————
இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறோம்.
பொன்முடி அவர்கள் நிறைய அகமுடையாருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதை தென் மாவட்டத்தை சேர்ந்த தலைவர் ஒருவரே என்னிடம் கூறினார். சிவகங்கையில் உள்ள அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர் அரசு வேலை நேர்காணலுக்கு சென்ற போது அதை நடத்துபவர் நீங்கள் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவரா அப்படியென்றால் உங்களுக்கு இந்த இந்த வேலை கிடைத்துவிடும் எனேன்றால் பொன்முடி அவர்கள் அகமுடையார்களுக்கு வேலை வழங்குவதில் தீவிரமாக உள்ளார் என்று சொன்னதாக அந்த பெண்ணின் தந்தையே தென்மாவட்டத்தை சேர்ந்த தலைவரிடம் கூறினாராம்.
நிகழ்ச்சி இரண்டு-
பாமக பொது செயலாளர் திரு. ராமதாஸ் அவர்கள் ஒருமுறை பொன்முடி அவர்கள் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளை ஒதுக்குகிறார் என்று கூறி பத்திரிக்கை ஒன்றில் பொன்முடி அவர்களை கண்டித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளாராம். இதுவும் அதற்கு ஒர் ஆதாரம் ஆகும்
எனக்கு தெரிந்த விசயங்களை மட்டும் இங்கு கூறியுள்ளோம். எனக்கு தெரிந்தவரை பொன்முடி அவர்களால் நிச்சயமாக நூற்றுக்கணக்கான அகமுடையார்கள் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். இது ஆயிரக்கணக்கான அகமுடையார்கள் வரை கூட போயிருக்கலாம்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அண்ணா இது தேர்தல் வரக்கூடிய நேரம். அரசியல் வாதிகள் ஐஸ் வைக்கும் நேரம்.
உங்கள் பதிவு எப்போதும் நேர்மையான பதிவு என நினைக்கிறேன்.
மேலூர் அகமுடையார் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.💐💐💐
நாகை மாவட்ட அகமு டையர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
நான் அப்பவே சொன்னேன் ஒருத்தருங்கள் நல்லதை செய்வார் என்று சொல்லி இருக்கிறேன் இதை நிரூபித்து விட்டார் திராவிட நாடு திமுக ஸ்டாலின் வாழ்க வளமுடன் வெல்க ஒற்றுமையாக ஒற்றுமை அகமுடையர் இனம்
மிக சிறப்பு 👍
வாழ்த்துக்கள் அய்யா
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் உடையார் என்று சொன்னார்களே எது உண்மை
TRB. ராஜா அகமுடையார்தான், TR பாலு அகமுடையார்தான்.. ஆனால் எள் அளவுக்கும் யாருக்கும் எதுவும் செய்தது இல்லை… நண்பரே