First
@followers அதியமான் அரசர்களில் எல்லைப் புறத்தை படையெடுப்பாளர்களிடமிருந்து காத்து நின்ற அரும்பாக் கிழான் மலையன் என்கிற அகம்படியர் -கல்வெட்டு குறிப்பு
———
இன்று இப்பதிவில் காண இருக்கும் கல்வெட்டு
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தை சேர்ந்த தடங்கம் எனும் ஊரில் உள்ள விஷ்ணு கோவிலில் கிடைத்த
கி.பி 12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஆகும்.
இக்கல்வெட்டின் குறிப்பை மத்திய அரசு 1968-1969 ம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இக்கல்வெட்டின் குறிப்பின்படி விடுகாதழகிய (விடு காது அழகியன்) பெருமாள் எனும் அரசனிடம் பணியாற்றிய அரும்பாக்கிழான் மலையன் என்கிற அகம்படியர் இனத்தவன் வாயிலை எந்த நிலையிலும் காப்பேன் என்றும் அவ்வாறு காக்கமுடியாமல் போனால் இறப்பேன் என்றும் சத்தியம் செய்துள்ளான்.
சரி அப்படி என்ன வாயில்? இதைக் காப்பேன் என்று சூளுரைத்த அந்த அகம்படியர் சமூகத்தவன் எத்தகையவன் ,விடுகாதழகிய என்பவர் யார் போன்ற விவரங்களை காண்போம்.
கல்வெட்டு கிடைத்த இடம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் என்ற ஊரில் உள்ள விஷ்ணு கோவில் என்று குறிப்பிடோம் அல்லவா? ஆனால் இந்த கல்வெட்டு ,இக்கோவிலில் இருந்து 4 கீ.மீட்டர் தொலைவில் உள்ள அதமன்கோட்டை அதாவது இன்று அதியமான்கோட்டை என்று அழைக்கப்படும் ஊரில் இருந்தே இப்போது கல்வெட்டு கிடைத்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று இக்கல்வெட்டை ஆராய்ச்சி செய்த மத்திய அரசு தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஏனென்றால் இக்கல்வெட்டு குறிப்பிடும் வாயில் ஓர் சாதாரண வாயில் அல்ல. தமிழகத்தின் முக்கிய வட எல்லையாக விளங்கியது தர்மபுரி பகுதியாகும். முக்கிய வணிகப்பாதையாகவும்,வடபகுதியில் இருந்து தமிழ்நாட்டில் நுழையும் முக்கிய எல்லைப் பகுதியாகவும் இப்பகுதி விளங்கியது தகடூர் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய தர்மபுரி பகுதியாகும்.
தகடூரை ஆண்ட அதியமான் அரசர்கள் மிகுந்த வீரத்தோடு இப்பகுதியில் எல்லை காத்து வடுகர்(தமிழகத்தின் வடபகுதியில் வாழ்ந்தவர்கள்) தமிழகத்தில் நுழையாமல் காத்து நின்றார்கள் .அத்தகைய சிறப்பு மிக்கது தகடூர் என்ற இந்த தர்மபுரி பகுதியாகும்.
இதில் முக்கிய விசயமென்றால் தமிழகத்தின் முக்கிய எல்லையான இத்தகடூர் அதியமான் அரசர்களைன் எல்லை காவலில் இருந்தது என்றால் அதை பொறுப்போடு பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் அகம்படியர் சாதியினர் அதாவது இன்று அகமுடையார் என்று அழைக்கப்படும் சாதியின் முன்னோர்கள் ஆவர். அதை உணர்த்தும் சிறப்பு மிக்க கல்வெட்டே இதுவாகும். அப்படி இரு அதி சிறப்பு வாய்ந்த செய்தியையே இக்கல்வெட்டு தாங்கி நிற்கிறது.
ஆம் இக்கல்வெட்டு குறிப்பில் அரும்பாக்கிழான் மலையன் எனும் அகம்படியார் சாதியை சேர்ந்தவன் அந்த எல்லைப்புற கோட்டையை காத்து நிற்பேன் என்றும் அப்படி காக்க முடியாது போய் விட்டால் (எதிரிகள் நுழைந்துவிட்டால்) உயிர் துறப்பேன் என்று சத்தியம் செய்துள்ளார். இந்த கல்வெட்டு குறிப்பிடும் அரசன் விடுகதாழகிய பெருமான் எனும் அதியமான் அரசரின் வழிவந்தவர் என்பதால் குறிப்பிட்ட இந்த அகம்படியர் அதியமான் அரசருக்காகவே இந்த எல்லைகளை பாதுகாத்துள்ளான்.
சரி இப்படி பாதுகாப்பேன் என்று சொன்னவன் என்ன தனிமனிதனா என்று கேட்டால் ,நிச்சயமாக இல்லை.
நிச்சயமாக பெரும் படையுடன் வரும் படைகளை எதிர்த்து ஓர் தனிநபர் போராட முடியாதிருக்காது ஆனால் எல்லைப்புறமே இவனை நம்பி இருக்கிறதென்றால் இவன் யாராக இருக்க முடியும்??? நிச்சயமாக எல்லைப்புறத்தை பாதுகாக்கும் தளபதியாகவே இவன் இருந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல இவன் பெயரில் உள்ள அரும்பாக்கிழான் என்பதில் உள்ள கிழான் என்பது இவன் ஆட்சிப்பகுதிக்குரியவன் என்பதை காட்டுகிறது. அதுமட்டுமல்ல இவன் பெயரிலும் உள்ள மலையன் என்ற பெயரும் ஆராய்ச்சிக்குரியது .
மேலும்
அரும்பாக்கிழான் என்ற பெயரை வரலாற்றை படித்தவர்கள் ஏற்கனவே கேள்வியுற்றிருக்கலாம்.
ஆம்! அரும்பாக்கிழான் மணவில் கூத்தனான காலிங்கராயன் நரலோகவீரன் என்பவன் சோழர்களின் படைத்தலைவனாகவும், தொண்டை மண்டலத்தின் பகுதியின் ஆட்சியாளனாக விளங்கியவன் கோவில்களுக்கு பல்வேறு தானங்களை வழங்கியவன், தேவார பாடல்களை செப்பு பட்டயங்களில் பொறித்தவன் போன்ற நீண்ட புகழுக்குரியவன் .அவருக்கும் இக்கல்வெட்டு குறிப்பிடும் அரும்பாக்கிழானுக்கும் உள்ள தொடர்பு ஆராயத்தக்கது.
ஆதாரம்: இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை, வருடம் 1968-1969 ,கல்வெட்டு எண் : 170, மத்திய அரசு வெளியீடு
குறிப்பு:
இக்கல்வெட்டின் குறிப்பு மட்டுமே கிடைத்துள்ளது முழுகல்வெட்டு வரிகள் கிடைக்காததால் இன்னும் வேறு செய்திகள் இருப்பின் அதை அறிய முடியவில்லை.இக்கல்வெட்டின் முழுக்கல்வெட்டு வரிகளையும் விரைவில் பெற வேண்டும்.
விடுகாதழகிய பெருமாள் எனும் அதியர் அரசர்- மற்றும் தர்மபுரியை ஆண்ட அகமுடையார்கள்
——————-
விடுகாதழகிய (விடு காது அழகியன்) பெருமாள் என்பவர் தர்மபுரியை ஆண்ட அதியர் என்றும் அதிகமான் அரசர்கள் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற மரபில் வந்த கடைசி அரசர் ஆவார்.
அதியர் என்போர் சேர மன்னர்களின் கிளை பிரிவினர் என்பதை அதியமான் அரசர்களின் கல்வெட்டுக்களே எடுத்துக்காட்டாய் நிற்கின்றன. எனினும் சேரர்களுக்கும் ,அதியர்களுக்கும் உள்முரண்பாடு தோன்றி அது போராகவும் வெடித்துள்ளது.
சேரர் ,அதியர் இவர்கள் இருவருமே வாணர் குலத்தில் இருந்து கிளைத்தவர்கள் இதை பற்றி விரிவாக மற்றொரு பதிவில் விளக்க இருக்கின்றோம்.
அதேபோல்
தர்மபுரி பகுதியை அகமுடையார் சாதியினர் 2000 வருடங்களுக்கு முன்பே ஆட்சி செய்ததோடு அல்லாமல் அதே பகுதியில் இன்று வரை வசித்து வருகின்றனர். வரலாற்றில் தர்மபுரி பகுதியில் அகமுடையார்கள் புகழோடு வாழ்ந்து ஆட்சி செய்தமைக்கு பல்வேறு கல்வெட்டுக்கள் ஆதாரமாக விளங்குகின்றன. குறிப்பிட்ட இந்த கல்வெட்டும் தர்மபுரி பகுதியில் கிடைத்த கல்வெட்டு என்பது இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
தர்மபுரி பகுதியில் கிடைத்த அகமுடையார் கல்வெட்டுக்களை பெரிதும் முயன்று சேகரித்துள்ளோம்.
தர்மபுரி அகமுடையார் வரலாறு குறித்த விரிவான வரலாற்று குறிப்புகள் விரைவில் நூலாக வெளிவரும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்