First
கங்குவா திரைப்படம்- மக்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்யாதது ஏன்?
——————-
பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வெற்றியடைந்து கங்குவா படம் தோல்வியடைந்ததற்கு காரணம் , மேற்கூறிய படங்களில் ஹிரோவை ஆளுமையானவரகவும் , ஈர்ப்பு மிக்கவராகவும் அழகாகவும் காட்டியது தான் ,கங்குவா படத்தில் நாகரீகம் குறைவான கூட்டம் போலவும் ஆதிகாலத்து மனிதன் போல் காட்டியது தான் முக்கிய காரணம் .இது போன்ற கதைகளுக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் சினிமா வருவது கமர்சியல் காரணங்களுக்காகவே மற்ற படங்கள் என்றால் கவர்ச்சி, நகைச்சுவை,சென்டிமென்ட்,ஆக்சன் எதிர்ப்பார்பார்கள், வரலாற்று படங்கள் என்றால் பிரம்மாண்டம் ,மாஸ் ஆக்சன், நடை உடை அலங்காரம் போன்றவற்றில் கம்பீரம் போன்றவற்றை அது இல்லாததால் தான் கங்குவா படம் மக்கள் மனதில் எதிர்மறை அம்சங்களை உருவாக்கியது(ஏனென்றால் மக்கள் நினைத்து வந்தது வேறு அல்லவா
சுருக்கமாக சொன்னால்: பாகுபலி போன்ற நாயகனை எதிர்பார்த்து வந்த மக்களுக்கு காலகேயர் கதாபாத்திரத்தை நாயகனாக காட்டினால் மக்கள் ஏற்பார்களா என்ன?
அது இல்லாத்தால் மக்கள் நிறைய ரியாக்ட் செய்துவிட்டார்கள். அதை பலர் பயன்படுத்தவும் செய்துவிட்டார்கள்.
குறிப்பு:
காலகேயர் மக்கள் ஏற்காதது என்று கூறியதால் காலகேயர்கள் குறைவானவர்கள் என்று அர்த்தம் அல்ல, காலகேயர்கள் தான் இந்த நாட்டின் பூர்வகுடிகள். ஆனால் காலகேயர் பற்றிய தரப்பு நியாயத்தை சரியாக எடுத்தால் காலகேயர்களை மையமாககொண்ட படமும் வெற்றியடையும் ஆனால் அதற்கு காலகேயரை மையப்படுத்திய கதையை உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
இன்று இரவு முடிந்தால் நம்மை பற்றிய ஓர் வரலாற்று பதிவை செய்கின்றேன்.அறிந்துகொள்வதற்கு நிறைய உண்டு.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்