தானவ குலத்தில் தோன்றிய காலகேயர்கள்
——————–
பாகுபலி படத்தில் காட்டப்பட்டிருக்கும் காலகேயர்கள் என்போர் வரலாற்றில் உண்மையிலேயே வாழ்ந்தவர்கள் என்பதும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இவர்கள் ஆரியர்களின் எதிரிகளாக காட்டப்படிருப்பது குறித்தும் ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா?
இதோ அதன் ஆதாரம்
வியாசர் எழுதிய மகாபாரதத்தின் ,
“கிருதா யுகத்தில் கடவுள்களுக்கு எதிரான, அச்சமில்லாத, தோற்கடிக்கப்பட முடியாத ,பேய் போன்ற காலகேயர் எனும் தானவ குலத்தவர் வாழ்ந்தனர்
விரித்ரா(விரித்ரா அரசனின்) தலைமையில் அவர்கள் ஆயுதம் பூண்டனர், மகேந்திரன்,இந்திரன் போன்ற கடவுள்களை எல்லா புரங்களிலும் இருந்து தாக்கினர்”
ஆகவே காலகேயர் என்போர் தானவ குலத்தில் தோன்றியவர் என்பதை தெளிவாக அறியலாம்.
அதுமட்டுமல்ல காலகேயர்கள் என்போர் அதே தானவ குலத்தை சேர்ந்த இராவணனிடம் கோட்டை காவல் பணி செய்தவர்கள் என்பதும் தெரிகின்றது.
தானவ குலத்து மகாபலி சிவனுக்கு காவல் பணி செய்தது போலவும், ஜெயா விஜயா என்போர் விஷ்ணுவிற்கு காவல் பணி செய்தது போலவும் இது ஓர் மரபு ரீதியான அடையாளமாக தொடர்கிறது எனலாம். நாம் சொன்ன விடயங்களுக்கு இது போல் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன.
சரி இதெல்லாம் நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? ஏனென்றால் சிறப்பு மிக்க அசுரர்களான தானவ குலத்தில் தான் அகமுடையார் சமுதாயம் தோன்றியது. 3000 வருடத்திற்கும் முன்பாகவும் 3000 வருடத்திற்கும் மேலாகவும் இந்திய நிலப்பரப்பின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்தவ பெருமைக்குரியவர்கள் ,இந்த மண்ணின் மைந்தர்கள் இவர்களே. குறிப்பிட்ட இந்த காலா எனும் கருப்பு எனும் பெயரில் தான் அகமுடையார்கள் வணங்கும் கருப்பசாமி அவரின் தங்கை இராக்காயி இருளாயி போன்ற இருளை அல்லது கருமையை காட்டும் அசுர குல தெய்வங்கள் தோன்றின. அதைத்தான் இன்றும் நாம் வழிபடுகிறோம்.
இதை வரும் காலங்களில் விளக்குவோம்.
காலகேயர் என்றால் யார் என்பது குறித்து ஏற்கனவே நாம் எழுதிய சிறு குறிப்பை கீழ்கண்ட பதிவில் காணலாம்.
https://www.facebook.com/100063919813164/posts/875646674575985
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்