First
தேவர் அரசாணைக்கு எதிராக அகமுடையார் சமுதாய மக்களின் எதிர்ப்பை விவரமாக எழுதி வெளியிட்டுள்ள தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம் (TAMS) நிறுவன தலைவர் திரு.M.ராமசந்திரன் அவர்களுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
அதிலும் குறிப்பாக அகமுடையாருக்கும் கள்ளர் மறவருக்கும் இடையே கொள்வினை கொடுப்பினை கிடையாது என்பதையும், வேறுபட்ட கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் கொண்டவர்கள் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதுடன்.
நிறைய ஊர்களில் அகமுடையாருக்கும் கள்ளர் மறவருக்குமிடையே சன்டை சச்சரவுகள் இருக்கின்றது என்கிற உண்மையையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார் .மேலும் தேவர் என்ற பட்டத்தின் பெயரை சாதியாக்க முனைவது சமுதாயங்களுக்குள் பல சமூக பிரச்சனைகளையும் உருவாக்கும் என்பதை கூறியும் தேவர் அரசாணைக்கு எதிராக அகமுடையார் சமுதாயத்தினரின் எதிர்ப்பை விரிவாக பதிவு செய்துள்ளதோடு இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு விரிவாகவும் விவரமாகவும் தேவர் அரசாணை எதிர்ப்பை பதிவு செய்துள்ள
தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம் (TAMS) நிறுவன தலைவர் திரு.M.ராமசந்திரன் அவர்களுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.
கடிதம் உதவி: கும்மிடிப்பூண்டி R.தனசேகரன்.
மாநில ஒருங்கிணைப்பு தலைவர்.
தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Arumai