First
அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதுவும் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் மாறி மாறி கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அறிகின்றோம்.
இதனால் வாழவேண்டிய வயதில் இளைஞர்கள் இறந்து போவதும், சம்பந்தப்பட்ட மற்றவர்கள் வழக்கை சந்தித்து வாழ்க்கையை இழப்பதும் .
இறந்தவர்கள் தரப்பிலும், வழக்கை சந்திப்பவர்கள் என இரு தரப்பு குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு நிற்பது எப்போது தான் நிற்குமோ!
இங்கு மட்டுமல்ல விருதுநகர், இராமநாதபுரம் போன்ற பல இடங்களில் அகமுடையார் சமுதாயத்திற்குள்ளேயே மாறி மாறி தொடர் கொலைகள் நடப்பதாக அறிகின்றோம். .
இது தடுக்கப்பட வேண்டும்!
அகமுடையார்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனையே பேசி தீர்க்க வழி இல்லாததும். நாம் ஒன்றாக பேசி உறவை பலப்படுத்த வழி இல்லாததும் தான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.
இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அந்தந்த பகுதியில் உள்ள அகமுடையார் சமுதாய பெரியவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் இதுபோன்ற விசயங்களில் நம்மிடம் சில யோசனைகள் உள்ளன. சமுதாய மக்கள் அதை கேட்டு அவரவர் பகுதிகளில் செயல்படுத்தினாலே உறவுகள் பலப்படும் இதுபோன்ற குடும்பங்கள் பாதிக்கப்படுவது நிற்கும்.
வரும் காலங்களில் சமுதாயத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி உறவை பலப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்