தேவர் அரசாணை எதிர்ப்பு- அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன் பிஏ பிஎல் அவர்களின் மனு
—————
அகமுடையார் சமுதாயத்தை கள்ளர் மறவருடன் இணைத்து தேவர் என்ற பட்டத்தின் பெயரை சாதி பெயராக கொடுக்கும் முயற்சியான தேவர் அரசாணை என்பது அகமுடையார் சாதியையே முற்றிலும் அழிக்கும் முயற்சி ஆகும். இதுகுறித்து நீதிமன்றம் ,தமிழக அரசிடம் கருத்து கேட்டு அதற்கு தமிழக அரசு 4 வாரம் காலக்கெடு கேட்டிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏற்கனவே ஒருவாரம் கடந்துவிட்ட நிலையில் அகமுடையார் சமுதாயத்தை இல்லாமல் செய்துவிடும் இந்த தேவர் அரசாணையை எதிர்த்து அகமுடையார்கள் ,அகமுடையார் சங்கங்கள் இயக்கங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் .
இந்நிலையில் தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அண்ணன் திரு. அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன் பிஏ பிஎல் அவர்களின் மனுவாக
—————அவர்கள்
அகமுடையார் சமுதாயத்தின் கருத்தை கேட்காமலேயே
அகமுடையார் சமுதாயத்தை கள்ளர் மறவருடன் இணைத்து தேவர் இனம் என்று சிலர் அறிவிக்க செய்யும் முயற்சிகளை கண்டித்தும் அகமுடையாரை கள்ளர் மறவருடன் இணைத்து உருவாக்கப்படும் தேவர் அரசாணையை எதிர்த்து
தமிழக முதலைமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் மேற்குறிப்பிட்ட துறையின் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு மனுவை தபாலில் அனுப்பியுள்ளார். அதற்காக அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இதேபோல் மற்ற அகமுடையார் சமுதாய இயக்கங்கள்,சங்கங்கள் தங்களது எதிர்ப்பை இப்பதிவில் குறிப்பிட்டுள்ள தமிழக முதலைமைச்சர்,பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர் அவர்களுக்கு மனுவாக அனுப்ப வேண்டும். அனுப்புவீர்கள் என்று நம்புகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்