First
ஒருபக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் வருத்தம்- நமது மக்களின் வரலாற்று ஆர்வம்
———————-
நேற்று கல்வெட்டு துறையில் பணியாற்றிய திரு.எஸ்.இராமசந்திரன் அவர்கள் பேசிய 30 நிமிட நேர்காணலில் அவர் நம்மை பற்றி குறிப்பிட்ட 1 நிமிடத்திற்கு குறைவான வீடியோ கிள்ளை வெளியிட்டோம்.
வரலாற்றை ஆதாரங்களை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருடக்கணக்காண உழைப்பில் நாம் கட்டுரை செய்து வெளியிட்டால் கிடைப்பது 10-20 லைக்குகள்.
ஆனால் நம்மை பற்றி ஆதாரமே குறிப்பிடாமல் யாரவது ஒருவர் ஒருவர் பேசினால் அதற்கு 100க்கும் மேல் லைக்குகள் அதே வீடியோவை நம்மவர்களே சேர் செய்யும் போது 1000க்கு மேல் லைக்குகள் ,500க்கும் மேற்பட்ட பகிர்வுகள் .பேஸ்புக் ,வாட்ஸ்அப் குருப்களில் தொடர்ந்து வருகிறது… இது தான் மேற்குறிப்பிட்ட திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வீடியோவிலும் நடந்தது.
நம்மக்கள் ஆதாரங்களுடன் பேசினால் கவனிப்பது இல்லை. எந்த மேற்கோளும் குறிப்பிடாமல் சும்மா பேசினால் அதை பிரபலமாக்குகின்றனர். இருப்பினும் இதில் நமக்கு மகிழ்ச்சியே.எப்படியோ நமது வரலாறு இந்த வகையிலாவது வெளியில் செல்கிறதே என்று உண்மையில் மிகவும் மகிழ்ச்சி தான்.
அதேநேரம் இப்படி வருடக்கணக்கான உழைப்பில் நாம் வெளிக்கொணர்ந்த கட்டுரைகளின் மீதான சமுதாயத்தின் பாராமுகம் காரணமாகவே அண்மை காலமாக வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளை பெரிதாக வெளியிடவே இல்லை.
ஆனால் பொதுவாகவே பார்க்கிறேன். ஆதாரங்களோடு வரலாறு பேசுபவர்களுக்கு லைக்குகளோ சேர்களோ நடப்பது இல்லை.
ஆனால்
அதே எந்த ஆதாரமும் இல்லாமல் பேக்கிரவுண்ட் மியூச்சிக்குடன் அண்ட புளுகு ஆகாச புளுகு செய்தால் அதற்கு மில்லியன் கணக்கில் பார்வைகளும் , கமேண்ட்களும் குமிகின்றன.
அது சரி இதே நாட்டில் தானே புனைவுகளான பொன்னியின் செல்வன் 40 இலட்சத்திற்கு மேலான பிரதிகள் விற்றது .அதேநேரம் சோழர் வரலாற்று நூல்கள் விற்பனை ஆயிரத்தை தாண்டி இருக்குமா என்பது சந்தேகமே.
மேலே சொன்னது போல வருடக்கணக்கான உழைப்பில் ஆதாரங்களுடன் நாம் வெளியிடும் வீடியோக்களை மக்கள் பார்க்க போவதில்லை. ப்ரமோட் செய்ய போவதும் இல்லை. ஆகவே மக்களின் ரசனையை புரிந்து கொண்டு அவர்களுக்கு புரியும் வகையில் வரலாற்றை நம் மக்களிடம் கொண்டு செல்ல வரும்காலங்களில் முயற்சி செய்வோம்.இதை இருமுறை அகமுடையார் வரலாற்று நூல் எழுதிய தஞ்சாவூரை சேர்ந்த அண்ணன் அவர்களும் இது போன்று குறும் வீடியோக்கள் மூலம் நம்மக்களிடம் நம் வரலாற்றை கொண்டு செல்லுங்கள் என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினார் . அதுமிகச்சரி என்பது தொடர்ந்து வரும் அனுபவங்கள் மூலம் புரிகிறது.அதையே வரும் காலங்களில் சோதனை அடிப்படையில் செய்து பார்க்க இருக்கிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
உண்மை வரலாற்றுப் பதிவில் ஈடுபாடு இல்லை
பொய்யான வரலாற்றில் கவர்ச்சி விளம்பரம் அரசியல் இருந்தால் போதும் .. அதில் தான் மக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்
நம்மவர்களைப் பற்றி அவதூறு பரப்பினால் அதை மூலை முடுக்கு எல்லாம் கொண்டு செல்ல பல கும்பல்கள் சுற்றித் திரிகின்றன என்பதே நிதர்சனம்
மனம் தளர வேண்டாம் உறவே