இன்று(18-02-2024) மட்டும் 178 நிறுவன வேலைவாய்ப்புகள் – அகமுடையார் சமுதாயத்தில் …

Spread the love

First
இன்று(18-02-2024) மட்டும் 178 நிறுவன வேலைவாய்ப்புகள் – அகமுடையார் சமுதாயத்தில் 600 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
—————————————
நமது AgamudayarSangam.com தளத்தில் உள்ள வேலைவாய்ப்பு செய்தி குருப்பில் தினமும் முக்கிய நாளிதழில் வெளிவரும் வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம் என்பது நீங்கள் அறிந்த்தே.

இன்று(18-02-2024) ஓர் நாள் மட்டும்தமிழ்நாடு முழுவதும் 178( 95+83) நிறுவனங்களில் ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறு பதவிகளுக்கு என சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு செய்திகளை திரட்டி வெளியிட்டுள்ளோம்.

இதில் 5ல் ஒருவர் நம்மவர்களாக இருக்கும் பட்சத்தில் இன்று மட்டும் சுமார் அகமுடையார் சமுதாயத்தில் 600 பேருக்கு வேலை கிடைக்கும்.

இது ஒரு நாளிதழில் மூலம் செய்த பணியினால் கிடைக்கும் நன்மை!
ஆகவே அகமுடையார் உறவுகள் AgamudayarSangam.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்து தினமும் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

விரைவில் மீதமுள்ள 6 க்கும் மேற்பட்ட நாளிதழ்களில் இருந்து வேலைவாய்ப்பு செய்திகளை தொகுத்து வெளியிட உள்ளோம்! ஆகவே அப்போது நம் சமூகத்தவர்களுக்கு வேலை கிடைப்பது 3 முதல் 6 மடங்கு வரை அதிகரிக்கும்.

பெரும் செலவில் சொந்த பணத்தில்
AgamudayarSangam.com தளத்தை நம் அகமுடையார் சமுதாயத்திற்காக உருவாக்கியுள்ளோம்.
அதுமட்டுமல்ல செய்திதாள்களுக்கு மெம்பர்சிப் பணம் செழுத்தி மணிக்கணக்கான செய்திகளை திரட்டி என சமுதாயம் பயன்பெற வேலை செய்து வருகிறோம்.

இதற்கு பதிலாக நாம் சமுதாயத்திடம் எதிர்பார்ப்பது என்னெவென்றால் இந்த தளத்தை நன்கு பயன்படுத்திக்கொள்வது தான்!

ஆகவே அகமுடையார் உறவுகள் அனைவரும் நமது AgamudayarSangam.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும். அதே போல் மற்ற உறவுகளிடமும் வாட்ஸ்அப்,பேஸ்புக், டெலிகிராம்,இன்ஸ்டாகிராம் குருப்களில் இச்செய்தியை பகிர்ந்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு மட்டுமல்ல AgamudayarSangam.com வெப்சைட்டில் வணிகம்,கல்வியை மேம்படுத்த அகமுடையார்களுக்கு கிடையே உறவுப்பாலமாக செயல்படும் அத்துணை விடயங்களும் உள்ளன. அவற்றை வரும் காலங்களில் விளக்குவோம்!

மேலதிக தகவல்:
நினைத்திருந்தால் எந்த செலவும் இல்லாமல் வாட்ஸ்அப் குருப் ஒன்றை உருவாக்கி அதில் இச்செய்திகளை பதிவிட்டுருக்கலாம்.

ஆனால் அகமுடையார்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள, நட்பாக பழக, பிணைப்பை ஏற்படுத்துக்கொள்ள, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு உதவ என பேஸ்புக் போன்ற சிறந்த மாடலை பின்பற்றி அதை போன்றதொரு தளத்தை அகமுடையார் சமுதாயத்திற்காக உருவாக்கி உள்ளோம். உருவாக்கி அதை தேடி பிடித்து பதிவிட்டும் வருகிறோம். இனி இதை பயன்படுத்திக் கொள்வதும் மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதும் அகமுடையார் சமுதாயத்தவர்காகிய உங்கள் பணி!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo