இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு ஓர் வழி ——————————————–
நம் அகமுடையார் சமுதாய இளைஞர்களுக்கு எதிரே உள்ள மிக முக்கிய பிரச்சனை .வேலைவாய்ப்பு.
வேலைவாய்ப்பு இல்லாததால் குடும்பத்திலும், சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதை பார்க்கிறோம்.
வேலை கிடைப்பதற்கு முதல்படியே வேலை எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது!
இணையத்தில் வரும் வேலைவாய்ப்பு செய்திகளில் பெரும்பாலானவை போலியானவையாகவும்,ஏமாற்று மோசடியாகவும் இருக்கின்றன.
ஆனால் இன்றளவும் கூட செய்தி தாள்களில் வரும் வேலைவாய்ப்பு செய்திகள் நம்பக்கூடியவையாக உள்ளன( வெளிநாட்டு வேலைவாய்ப்பு செய்திகள் தவிர்த்து)
ஆகவே இச்செய்திகளை சேகரித்து நமது இளைஞர்களுக்கு வழங்கினாலே நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனை பாதியளவு குறைந்துவிடும்.
இதற்கு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் முக்கிய 5 நாளிதழ்களை பார்த்து அதில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம் சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.
தினதந்தி 40 க்கும் மேற்பட்ட ஊர்களில் பதிப்பு செய்கிறார்கள்.
இவ்வாறு 5 நாளிதழ்கள் 70க்கும் மேற்பட்ட நாளிதழ்களை அனுதினமும் பார்த்து ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள வேலைவாய்ப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
வேலைவாய்ப்புக்கு இது போல நிறைய திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று இது. நம் சமுதாய ஆதரவு இருந்தால் இதை நடத்திவிடலாம். பார்ப்போம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்