சித்தூர் கங்கினேனி ஏரியில் மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு சிலை அமைக்க அரசு உத்தரவ…

Spread the love

First
சித்தூர் கங்கினேனி ஏரியில் மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு சிலை அமைக்க அரசு உத்தரவு முதலியார் கார்ப்பரேஷன் சேர்மன் அறிவிப்பு

சித்தூர் ஆந்திர மாநில முதலியார் சங்க தலைவர் மற்றும் முதலியார் கார்ப்பரேஷன் சேர்மன் புல்லட் சுரேஷ் அவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் ஆந்திர மாநில முதலியார் கார்ப்பரேஷன் சேர்மன் புல்லட் சுரேஷ் தனது அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில் மருதுபாண்டி சகோதரர்களின் நினைவாக சித்தூர் மாநகரத்தில் சிலையை நிறுவ வேண்டுமென சித்தூர் மாநகர முதலியார் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மருது பாண்டியர் சகோதரர்களின் சிலையை அமைக்க கடந்த மாதம் மாநில அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, ராஜம்பேட்டை எம்பி மிதுன் ரெட்டி ஆகியோரிடம் மருது பாண்டியர் சகோதரர்களின் சிலை அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டோம் எங்கள் கோரிக்கையை ஏற்று மாநில அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, ராஜம்பேட்டை எம்பி மிதுன் ரெட்டி அவர்கள் உடனடியாக மருது பாண்டி சகோதரர்களின் சிலை அமைக்க இடம் ஒதுக்குவதாக உறுதி அளித்தனர் அதன்படி, கங்கினேனி ஏரி கரை அருகே உள்ள பூங்காவில் மருது பாண்டியர் சகோதரர்களுக்கு சிலை அமைக்க, மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகவே மாநில அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி மற்றும் ராஜம்பேட்டை எம்பி மிதுன் ரெட்டி அவர்களுக்கு முதலியார் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அதே போல் மருது பாண்டி சகோதரர்கள் சிலையை அமைக்க அனுமதி வழங்கி ஒத்துழைத்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கும், எம்எல்ஏ ஆரணி சீனிவாசலு அவர்களுக்கும், சித்தூர் மேயர் அமுதா அவர்களுக்கும், சுடா சேர்மன் புருஷோத்தம் ரெட்டி அவர்களுக்கும், சித்தூர் மாவட்ட கலெக்டர் சண் மோகன் அவர்களுக்கும், மாநகராட்சி ஆணையர் அருணா அவர்களுக்கும் ஆந்திர மாநில முதலியார் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Suresh Bullet Bullet Suresh Sai Appu Bullet Yuvasena Andhra Pradesh

திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #அகமுடையார் #திருத்தணி



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo