வாணர் அரச குலத்தவர் அகமுடையாரே! பொன்பரப்பினான்
————————
வாணர் குலத்தவர் இன்றைய அகமுடையார் சாதியினர் என்பதற்கு 100 க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் ஒன்று இவற்றையெல்லாம் திரட்டி காணொளி, மின்-நூல் பொதுவெளியில் வெளியிட உள்ளோம்.
ஆனால் அதுவரை பேசாமல் இருக்க கூடாது என்பதற்காக அவ்வப்போது ஆதாரங்களை வெளியிட்டு வருகிறோம்.
இது ஏற்கனவே நாம் வெளியிட்ட கல்வெட்டு செய்தி ஆனால் இது வாணர் குலத்தவர் அகம்படியர் தான் என்பதை நிரூபிக்கும் கல்வெட்டு சான்று என்பதால் இக்கல்வெட்டை வாணர் ஆய்வுக்கோணத்தில் வெளியிடுகின்றோம்.
இன்றைய பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் திருவாலீஸ்வரம் உடையார் கோவிலில் கிடைத்த சோழர் கால
மூன்றாம் இராசராசனின்(கி.பி 1219ம் ஆண்டு) கல்வெட்டு செய்தியில் அகம்படியர் இனத்தை சேர்ந்தவர்
மேற்கூறிய கோவிலுக்கு செய்த கொடைகளை விவரிக்கிறது.
.
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை 1939-44
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவர் பெயரில் அடங்கியுள்ள பல்வேறு செய்திகளாகும். அதாவது இந்த கல்வெட்டு செய்தியில்
“வண்ணாட்டார் பேரிட்டேன் நாயனார் சாமந்த முதலிகளில் மீனவன் வத்தராயன் அகம்படியாரில் கோவன் தெற்றி பொன்பரப்பினான திருஞானசம்பந்தனேன்” வரிகள் வருகின்றது.
இதனை கொண்டு கோவன் தெற்றி என்பவர் அகம்படியார்(இன்றைய அகமுடையார்) சாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்துகொள்வதோடு இவர் நாயனார்(சோழருக்கு) சாமந்த முதலி(படைத்தலைவனாக) இருந்தவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆனால் இதையெல்லாம் விட முக்கிய விடயம் என்னவென்றால் இந்த கல்வெட்டு குறிப்பிடும் கோவன் தெற்றி திருஞானசம்பந்தன் எனும் அகம்படியர் வாணர் குலத்தை சேர்ந்தவர்.
இதை இவர் பெயரில் உள்ள பல்வேறு அடையாளங்கள் இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது ஒன்று “பொன் பரப்பினான் ” என்கிற அடைமொழி . பொன்பரப்பினான் என்பது ஆறகளூர் பகுதியை தலைநகராக கொண்டு ஆண்ட வாணர் குல அரசர்களின் பட்டப்பெயராகும். மேலும் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் திருவாலீஸ்வரம் ஊரும் குறிப்பிட்ட ஆறகளூருக்கு அருகில் இருக்கும் பகுதியாகும்.
அதுமட்டுமல்ல இவர் பெயரில் உள்ள வத்தராயன் எனும் பெயரும் வாணர் குலத்தவர்களை குறிக்கும் பெயர்களில் ஒன்றாகும். வாணர் வித்யாதரர்,விச்சாதிரர் எனும் பெயர்களே வத்தராயர் என்று மாறி வழங்கி வந்துள்ளது. இன்றும் இந்த வத்தராயர் பட்டத்தில் அகமுடையார்கள் வாணர் ஆண்ட பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல கல்வெட்டில் கோவன் தெற்றி அகம்படியாரை, மீனவன் என்றும் கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. அகம்படியர்கள் பலர் சோழ அரசர்களால் அவர்கள் வென்ற பகுதிகளில் அரச பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டதை பல்வேறு கல்வெட்டுக்களில் முன்னர் பார்த்தோமல்லவா? அதில் பெரும்பாலும் வாணர் குலத்து அகம்படியர்களே பாண்டிய பகுதிகளில் சோழ அரச பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் இதற்கு ஏற்கனவே அரகண்ட நல்லூர் கல்வெட்டு சான்று பகர்கிறது.
இதில் பெரிய பெருமாள் பாண்டியராயன் என்ற அகம்படிய இனத்தவன் பாண்டிய நாட்டு அரசனாக (சோழ அரசபிரதிநிதியாக) இருந்துள்ள செய்தி தெரியவந்தது. அதைப்போலவே அகம்படியனும் மீனவன் ( பாண்டியர்களை குறிக்கும் மீனவன் என்ற பெயரில்) குறிப்பிடப்பட்டுள்ளான். இதன் மூலமாகவும் இந்த திருவாலீஸ்வரம் கல்வெட்டு குறிப்பிடும் அகம்படியர் வாணர் குலத்தவன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஒரே கல்வெட்டில் உள்ள பல்வேறு தரவுகளின் அடிப்படியிலும் வாணர் குலத்தவர் அகம்படியர் (இன்றைய அகமுடையார் இனத்தவர் ) என்பதை புரிந்துகொள்ளலாம்.
குறிப்பு:
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஒருவரை இரு வேறு நபராக படிப்பார்கள்.
அதாவது நாயனார் சாமந்த முதலி மீனவன் வத்தராயன் என்பவன் வேறு என்றும் அகம்படியாரில் கோவன் தெற்றி பொன் பரப்பினான் என்பவர்கள் இரு வேறு நபர்கள் என்றும் பொருள் சொல்லக்கூடும். ஆனால் அப்படி மாற்றி பொருள் அறிந்துவிடக்கூடாது என்பதற்காகவே அகம்படியாரில் கோவன் தெற்றி பொன் பரப்பினான் என்பதும் வாணர் குலத்து குடும்பத்தினன் என்பதையும், வத்தராயன் என்கிற வாணர் பட்டப்பெயரையும் குறிப்பிட்டு இக்கல்வெட்டு குறிப்பிடுவது ஒருவனையே என்பதை நிரூபிக்கிறது.
இதுபோல் வாணர் அரசகுலத்தவர் அகமுடையார்கள் என்பதற்கு 100க்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. வரும் காலங்களில் இதை வெளிப்படுத்துவோம்.
அதேபோல் பெரம்பலூர் பகுதியில் கிடைத்த அகமுடையார் கல்வெட்டுக்கள் குறித்தும் ,பெரம்பலூர் அகமுடையார் குறித்தும் வரும் காலத்தில் அகமுடையார் ஒற்றுமை தளத்தால் வரலாறு பதிவிடப்படும்.
#vanar
#vaanar
#vanathirayar
#vanaathirayar
#bana
#banakings
#banar
#வாணர்
#வாணர்குலம்
#வாணாதிராயர்
#வாணாதிராயன்
#பாணஅரசர்
#பாணர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்