First
பிள்ளைப் பட்டத்தின் வரலாறு-
அகமுடையார்கள் பிள்ளைப் பட்டத்தினை 2000 வருடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.இதற்கு ஆயிரம் வருடத்திற்கு மேற்பட்ட பல்வேறு முதல்நிலை கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.இதே கருத்தை பல்வேறு வரலாற்று ஆசிரியர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்..ஆனால் வெகு சமீபத்தில் இப்பட்டத்தை கைகொண்ட பிள்ளைமார் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் இப்பட்டம் தங்களுகே உரியது என்றும் ஏதோ அகமுடையார் இப்பட்டத்தை சமீப காலம் தான் பயன்படுத்தி வருவது போலவும் திரித்தும் மறைத்தும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.
வெறுமனே அவர்களுக்கே உரியது என்று எழுதி வருவதை கூட நாம் பொருட்டாக இதுவரை கருதி வந்ததில்லை என்றாலும் கூட சமீபகாலங்களில் அகமுடையாரின் உட்பிரிவான துளுவ வேளாளர்களை ,அகமுடையார் சாதியிலிருந்து வேறு சாதி போல திரித்து குழப்பம் ஏற்பட எழுதி வருவதை கண்டிக்கவும்.#பிள்ளை,#பிள்ளைமார் பட்டத்தின் உண்மை வரலாறை உணர்த்தவும் இந்த வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது நமக்கு கடமையாகிறது.ஆகவே வரும் காலங்களில் பிள்ளை,பிள்ளைமார் பட்டத்தைப் பற்றி தொடராக தொடர்ந்து எழுத உள்ளோம்.அதன் முதல் முயற்சியே இந்த முதல் தொடர்.
சங்ககாலத்தில் பிள்ளைப் பட்டம்
————————————
பிள்ளைப் பட்டம் என்பது ஏதோ சமீபத்தில் தோன்றியதல்ல.2000 வருடங்களுக்கு முன்பாகவே சங்காகாலம் தொட்டே இப்பட்டம் வழங்கப்பட்டு வந்தமைக்கு மிகுந்த சான்று உள்ளது.
இதற்கு ஒர் சான்றாக பிள்ளைப் பெயர்ச்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்று உள்ளது. இது கரந்தைத்திணையைச் சேர்ந்த துறை. இந் துறைப் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் சொல் பருவ மகனை உணர்த்தும்.
கரந்தைப் போரில் ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வரும் வீரன் ஒருவன் தான் மீட்டுவந்த ஆனிரைகள் தன் இல்லத்துக்குச் சென்ற பின்னரும் இலைதழைகளுக்கு இடையே தன் தலையை மறைத்துக்கொண்டு ஒளிந்திருந்தானாம். மீண்டும் யாரேனும் ஆனிரைகளைக் கவர வந்தால் போரிட்டழிக்க அவ்வாறு ஒளிந்துகொண்டிருந்தான். முன்னின்று போராடிய வீரனை வேந்தன் விருது தந்து பாராட்டுவது பிள்ளைப்பெயர்ச்சி என்னும் துறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
கரந்தைப் போரைச் செய்யும் மறவர்(வீரை) குறிக்கும் சொல்லாகவே பிள்ளை துறை கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கரந்தைப் போரை செய்யும் வீரரையே பிள்ளைமார் என்று அழைக்கும் வழக்கமும் வந்தது.
கரந்தை தமிழசங்கத்தை நிறுவிய தமிழவேள் கரந்தை உமாமகேஸ்வரன் பிள்ளை அவர்கள் இந்த கரந்தைப் போர் செய்த அகமுடையார் இனத்தில் உதித்தவர் ஆவார்.இதற்கு நிரம்ப சான்றுகளைத் தருவோம் .இப்போது சங்க கால செய்தியைப் பார்ப்போம்.
இவ்வாறு பிிள்ளைப் பெயர்ச்சி என்பது இவ்வாறு ஆநிரைகளை மீட்டலையும்,பாதுகாவலையும் செய்யும் மறவர்களை குறிக்கும் பெயராக குறிப்பிட்டு வந்துள்ளது. இத்துறைக்கு பிள்ளைப் பெயர்ச்சி என்பதைத் தாண்டி ஆளெறிபிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு ,பிள்ளைதமிழ் போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
சான்று: புறநானூறு-பிள்ளைப் பெயர்ச்சி
http://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280544-127081
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/50
பிள்ளையாட்டு-
பிள்ளை + ஆட்டு = பிள்ளையாட்டு. பிள்ளை –
மேல் வரும் விளைவுக்கு அஞ்சாத பிள்ளைத் தன்மையை
உடைய ஒரு கரந்தை மறவன் ஆடிய கூத்துப்
பற்றியதாகலின் பிள்ளையாட்டு எனப் பெற்றது.
ஆதாரம்
http://www.tamilvu.org/courses/diploma/d021/d0212/html/d02123b5.htm
வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டும்-(ஆகோளல்லாத வெட்சிப் போரில் வாளால் பொருது வென்று வந்தவனை உவந்து முரசொலிக்க நாட்டை அவனுக்குப் பரிசிலாய் அளிக்கும் பிள்ளை யாட்டென்னும் துறையும்.
ஆதாரம்
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/98
எல்லாம் ஆநிரை( கால்நடைச் செல்வத்தை கவர்தல் ,மீட்டலில் சம்பந்தமுடைய) மறவர்(வீரர்க்கு) வழங்கும் பெயர். பிள்ளை என்பது வேளான்மை சம்பந்தப்பட்ட பெயர் அல்ல.
தொடர்ந்து எழுதுவோம்.
பிள்ளைப் பெயர்ச்சி | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்