ஆசிரியம் கல்வெட்டு 2- ஞானசம்பந்த அகமுடி ———————————— செ…

Spread the love

First
ஆசிரியம் கல்வெட்டு 2- ஞானசம்பந்த அகமுடி
————————————
சென்ற பதிவில் சொன்னது போல தமிழ்நாட்டில் ஆசிரியம் கல்வெட்டுக்கள் மொத்தமே 70 வரை தான் கிடைத்துள்ளன. இது போன்ற அரிதிலும் அரிதான ஆசிரியம் கல்வெட்டுக்களில் கூட அகம்படியர் ஆசிரியம் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன.

சென்றமுறை புதுக்கோட்டை பகுதியில் 13ம் நூறாண்டு காலத்திய “அகம்படியான் அகத்தியான் பிள்ளை நாடாழ்வான்” என்ற அசிரியம் கல்வெட்டினை பார்த்தோம்.

இப்பதிவில் அகமுடையார் சமுதாயத்தின் இரண்டாவது ஆசிரியம் கல்வெட்டினை பார்ப்போம்.

ஆசிரியம் என்பது என சென்ற பதிவிலேயே குறிப்பிட்டிருந்தோம். ஆசிரியம் என்பது என்னவென்று அறியாதவர்களுக்காக :
ஆசிரியம் என்பது புகலிடம் அல்லது பாதுகாப்பு தருவது என்று பொருளாகும். சத்திரியர்களின் உயர்ந்த தர்மாகிய ஆசிரியம் தருதலைப்பற்றி பேசுகின்ற கல்வெட்டுக்களே ஆசிரியம் கல்வெட்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பதிவில் நாம் காண இருக்கும் கல்வெட்டு

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் உள்ள ஆலத்தூர் ஊர் கண்மாயில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு காணக்கிடைக்கின்றது. அக்கல்வெட்டில் கீழ்கண்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திஶ்ரீ
திரு ஞான சம்பந்த
அகமுடி கு
டுத்தார் ஆசி
ரியம் உ

ஆதாரம்: ஆவணம் இதழ் 13, பக்கம் எண் 92

கல்வெட்டு குறிப்பு:
அதாவது இக்கல்வெட்டு அமைந்துள்ள ஆலத்தூர் பகுதி மக்களுக்கு அகமுடி இனத்தை சேர்ந்த திரு ஞானசம்பந்தன் என்பவர் ஆசிரியம் கொடுத்துள்ளார் என்பதாகும்.

இக்கல்வெட்டில் உள்ள அகமுடி என்பது நாம் கல்வெட்டில் நாம் நிறைய கண்ட அகம்படி என்பதன் சொல்வழக்கு திரிபு ஆகும். இன்றும் இந்த சொல் திரிபு வழக்கத்தில் உள்ளது என்பதற்கு சில ஆதாரங்களையும் இப்பதிவின் இணைப்பில் வழங்கியுள்ளோம். இதை பார்த்தால் சந்தேகம் இருப்பவர்கள் தெளிவடையலாம்.

ஏற்கனவே சொன்னபடி தமிழ்நாட்டில் மொத்தமே 70 ஆசிரியம் கல்வெட்டுக்களே கிடைத்துள்ளன.இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் சாதி அடையாளங்கள் இடம்பெறவில்லை.
இவ்வளவு அரிதான கல்வெட்டுக்களிலும் 5 முதல் 10 ஆசிரியம் கல்வெட்டுக்களில் அகம்படியர் இனத்தினர் இடம்பெறுவதை கவனிக்கும் போது அகம்படியர் இனம் எத்தகைய உயரிய சத்திரிய,போர்குடி மரபினர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இன்று பல்வேறு சாதிகளும் சத்திரியர் அந்தஸ்திற்கும் ,போர்குடி என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள் அவர்கள் எல்லாம் இது போன்ற ஆசிரியம் கல்வெட்டுக்களில் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

மீதமிருக்கும் ஆசிரியம் கல்வெட்டுக்களையும் வரும் காலங்களில் நம் பதிவில் வெளிப்படுத்துவோம்.

கட்டுரையாளர்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமைக்காக

இணைப்பு 1: ஆலத்தூர் ஆசிரியம் கல்வெட்டு நூல்: ஆவணம் இதழ் 15,பக்கம் 92

இணைப்பு 2: சென்ற பதிவில் பார்த்த ஆலங்குடி வட்டம் திருக்கட்டளை ஆசிரியம் கல்வெட்டு ,நூல்: ஆவணம் இதழ் 28 , பக்கம் 134

இணைப்பு 3: ஆந்திர பிரதேசத்தில் உள்ள அகமுடியர் சாதியின் உட்பிரிவுகள் துளுவ வேளாளர்,ஆற்காடு வேளாளர்,ஆற்காடு முதலி,அகமுடையன்,அகமுடி,அகமுடி ரெட்டி,அகமுடி முதலியார்
நூல்: Socio-economic Status of Widows Pageno72

இணைப்பு 4: 1824ம் ஆண்டு காரைக்காலில் மக்கள் தொகை எண்ணிக்கை .. நூல்: ஆவணங்களில் காரைக்கால் ,பக்கம் எண் 22
இடங்கை வலங்கையர் வரலாறு – Page 167

இணைப்பு 5: வலங்கையரான அகமுடியர் இடங்கையர் மீது நடத்திய அத்துமீறல்கள் . ஆவண நூல்: ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு: சிரீமுக ஆண்டு (1753-1754) நூல் பக்கம் 342

இணைப்பு 6: வலங்கையரான அகமுடியர் பெற்றிருந்த உரிமைகள் . நூல்: இடங்கை வலங்கையர் வரலாறு பக்கம் எண் 167







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo