குன்றக்குடி மருதுபாண்டியர் பூங்காவை பராமரிக்க வலியுறுத்தி நாளை குன்றக்குடி அடிகளாரை சந்திக்க -காரைக்குடி அகமுடையார் சங்கம் அழைக்கிறது
————————–
குன்றக்குடி முருகன் கோவில் மருதுபாண்டியர்களின் பல்வேறு கொடைகளால் முழுமை பெற்றது.
இக்கோவிலுக்கு எதிரே மருதுபாண்டியர் பெயரால், மருதுபாண்டியர் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா நீண்ட நாட்களாக , பராமரிப்பின்றி இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
ஆகவே மருதுபாண்டியர்கள் பூங்காவை சுத்தம் செய்து, முறையாக பாராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி குன்றக்குடி ஆதினம் அவர்களுக்கு காரைக்குடி அகமுடையார் சங்கம் சார்பில் போஸ்டர்கள் மற்றும் பல்வேறு வகையில் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இக்கோரிக்கை குறித்து பேச குன்றக்குடி அடிகளார் அவர்கள் இசைந்துள்ளார்கள். காரைக்குடி அகமுடையார் சங்கத்தினர் நாளை (22-11-2023) அன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் குன்றக்குடி அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்கள்.
ஆகவே அகமுடையார் உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிப்பதோடு , குன்றக்குடியில் மருதுபாண்டியர்களின் அறப்பணிகளையும் , கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் கம்பீர சிலைகளைகளையும் தரிசித்து வணங்கி இன்புற அழைக்கின்றார்கள்.
இவன்: காரைக்குடி அகமுடையார் நலச்சங்கம் பதிவு எண் 62/2013
புகைப்படங்கள் உதவி: திரு . செந்தில் சேர்வை (அகமுடையார்) ,செயலாளர் , காரைக்குடி அகமுடையார் நலச்சங்கம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்