மகாபலி வாணர் அரசர்கள் அகம்படியரே -கர்நாடகாவில் இருந்து வரும் சான்று
—————————–
தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்த 8,9ம் நூற்றாண்டு காலத்திய வெவ்வேறு பகுதிகளில் கிடைத்த 3 கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடு ஒன்றில்
“பரமேஸ்வர ப்ரதிஹாரீ க்ருத மஹாவலி குலோத்பவ வாணவித்யாதர”
என்று மகாபலி வாணர்(பாணர்) அரசர்கள் தங்கள் குலத்தையே
பரமேஸ்வரனுக்கு(சிவனுக்கு) வாயிற்காவல் பணிசெய்த (அகம்படி பணி) செய்தவர்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இச்செய்தியை குறிப்பிடும் திருவல்லம் பகுதியில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் கங்க இளவரசி ஒருவர் வாணர் அரசரை மணந்து வாண மஹாதேவியார் என்று குறிக்கப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தோம்.
பார்க்காதவர்கள் பார்க்க லிங்க்(கீழே)
https://www.facebook.com/100063919813164/posts/632505552223433
இதுபோல இன்னும் 2 தமிழ் கல்வெட்டுக்களும்,செப்பேடும் உள்ளன அவற்றையும் விரைவில் விரிவான விளக்கத்துடன் வெளியிடுவோம்.
அதேநேரத்தில்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல
கர்நாடக பகுதிகளை ஆட்சி செய்த வாணர்(பாணர்) அரசர்களும் தங்களை
பரமேஸ்வரனுக்கு(சிவனுக்கு) வாயிற்காவல் பணிசெய்த (அகம்படியர்) குலத்தவர் என்பதாகவே 15க்கும் மேற்பட்ட,வெவ்வேறு காலத்திய கல்வெட்டுக்களில் பதிவு செய்துள்ளனர்.
உதாரணத்திற்கு
கர்நாடகாவின் மைசூர் பகுதியில் உள்ள
முன்பு குல்கன்பொடே
(GulganPode) என்றும் தற்போது ஹரலுகோட்டை(haralukote)கிடைத்த கி.பி 3ம் நூற்றாண்டை சேர்ந்த கன்னட கல்வெட்டில் வியல வித்யாதரா எனும் வாணர்களின் படைத்தலைவன் ஒருவன் மரிகரா அல்லது மாரிகரா எனும் எதிரிகளின் படையை அழிக்க குதிரையில் சென்றுள்ளான். கடுமையான பாதை அல்லது மலைப்பாதை என்பதால் குதிரையில் இருந்து இறங்கி எதிரிகளின் படையை ஓட ஓட விரட்டி அவர்களை களைந்தோட செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது எதிரிகளின் படைகளால் தாக்கப்பட்டு இறந்துள்ளான். இறந்த அந்த வீரனின் குடும்பத்திற்கு குலநெல்லூர் என்ற ஊர் உதிரப்பட்டியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு செய்தியிலேயே நாம் எதிர்பார்த்த முக்கிய தகவல் வருகிறது.
கல்வெட்டின் ஆரம்பத்தில் மன்னரின் ஆட்சியாண்டை குறிக்கும் பகுதியின் சமஸ்கிருத வாசகம் இவ்வாறு தொடங்குகிறது.
“சகல ஜகத்ரய அபிவந்தித சூர அசூர அதீச பரமேஸ்வர ப்ரதிஹாரீ க்ருத மஹாவலி குலோத்பவ ஶ்ரீமகாபலி பாணராச பிரிதிவிராஜ்யகே”
அதாவது
மூன்று உலகங்களாலும் புகழப்படுவரும், சூர(தேவ) ,அசுரர்களின் தலைவர்களின் தலைவருமாகிய பரமேஸ்வரனின் வாயிற்காப்பாளராக பணிபுரியும் மகாபலி குலத்தில் உதித்த மஹாபலி பாணராசா இந்த உலகத்தை ஆளுகின்ற போது
என்று ஆரம்பிக்கிறது
ஆகவே தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடக பகுதியில் ஆட்சி செழுத்திய வாண(பாண ) அரசர்களும் தங்களின் மகாபலி குலமே பரமேஸ்வரரின் வாயிற்காப்பாளராக (அகம்படி பணி ) செய்யும் கணமாக செய்த குலத்தவர் என்று பெருமை கொள்கின்றனர்.
ஒன்றல்ல இரண்டல்ல
கர்நாடக பகுதியில் கிடைத்துள்ள 15க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் இவ்வாறு தங்களை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர் (வரும் காலங்களில் இதே போல் மற்ற கல்வெட்டுக்களையும் வெளிப்படுத்துவோம்.
கல்வெட்டுக்களில் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் கொடியில் கயிலையில் நந்தி வாயிற்காப்பாளராக பின்பற்றி தங்கள் கொடிகளில்
நந்தி சின்னத்தை பயன்படுத்தியதோடு தங்கள் தலைநகருக்கு நந்தகிரி என்ற பெயர் கொடுத்தும் ஆட்சி செய்துள்ளனர் . பாணர்களின் நந்திகொடியையே பல்லவர்கள் பின்னாட்களில் மேற்கொண்டிருக்கலாம்.
கர்நாடக பகுதிகளை ஆட்சி செய்தாலும் வாணர்கள் தமிழையே பேசியுள்ளனர் என்பதும் , வாணர்கள் பேசிய தமிழும் , வேதமொழியான சமஸ்கிருதம் மற்றும் வட்டார வழக்குகளும் இணைந்தே கன்னட மொழி பின்னாளில் உருவாகியிருக்க வேண்டும் என்பதும் பல்வேறு விடயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இதே கல்வெட்டில் வரும் குலநெல்லூர் என்ற தூய தமிழ் பெயரே இதற்கு பெரும் சான்றாகும்.
சொல்வதற்கு நிறைய உள்ளது. தொடர்ந்து பேசுவோம்!
ஆதாரம் மற்றும் இணைப்பு
இணைப்பு 1: GulganPode குலநெல்லூர் உதிரப்பட்டி கல்வெட்டு மூலப்படம்
ஆதாரம்:
indian antiquary vol 10 pageno 36
இணைப்பு 2: GulganPode குலநெல்லூர் உதிரப்பட்டி கல்வெட்டு வரிகள் மற்றும் விளக்கம்
ஆதாரம்:
indian antiquary vol 10 pageno 39
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்