அகமுடையார் ஒற்றுமை வேண்டுகோள் ஏற்கப்பட்டது- சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு நன்றி
———————————
சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த அகமுடையார் மாணவ மாணவிகளின் விண்ணப்பங்கள் சமீபகாலமாக புறக்கணிக்கப்படுவதை குறித்து வருந்தி
சென்ற மாதம்(ஜீலை 14ம் நாள்) “தகுதியுடைய அகமுடையார் சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தி சென்னை கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு வேண்டுகோள் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
இந்நிலையில்
சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் (மாண்டியேத் சாலை அலுவலகம்) சார்பில் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (பார்க்க இணைப்பு 1,2)
அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31 பேரில் 4 பேர் வடமாவட்டத்தை சேர்ந்தவர்கள் .
ஆம் ! ஜீலை 14ல் நாம் எழுதிய வேண்டுகோள் கடிதத்தில் எந்த பகுதி அகமுடையார் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நான் குறிப்பிடவில்லை. நான்(மு.சக்திகணேஷ்) ,தென் மாவட்டத்தை சேர்ந்த அகமுடையார் என்பதால் நம் பதிவை பார்த்த பலர் தென் மாவட்டத்தை சேர்ந்த அகமுடையார்கள் தான் புறக்கணிக்கபப்டுகின்றனர் என்றும் அதை வலியுறுத்தி தான் நாம் கடிதம் எழுதினோமோ என்று நினைத்திருந்தார்கள் போலும்.
ஆனால் அகமுடையார் ஒற்றுமையின் நோக்கம் மிகவும் தெளிவானது.அகமுடையார் சமுதாய மக்கள் பட்டங்கள் ,தொலைவுகள் என்ற எல்லைகளை கடந்து அகமுடையாராக இணைய வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.
அன்று எழுதிய கடிதத்திலேயே வடதமிழக அகமுடையார் மாணவ மாணவியரே புறக்கணிக்கப்படுவதாக அறிகின்றோம் என்று எழுதியிருக்கலாம் ஆனால் இதை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி ஒரு சங்கத்தில் நடக்கும் விசயத்தை , எல்லாவிடத்தும் நடக்கும் பொது உதாரணமாக காட்டி நமக்குள் பிரிவினை பேச்சி எழக்கூடாது என்பதற்காகவே அன்று இதை வெளிப்படையாக சுட்டிக்காட்டவில்லை.
ஆனால் இன்று சென்னை கல்வி வளர்ச்சி சங்கம் எந்தவித பாரபட்சமின்றி எல்லா பகுதியில் உள்ள அகமுடையார் மாணவ மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் தலைவர் ,செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் ,சமுதாய பெரியோர்களுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக அகமுடையார் ஒற்றுமை மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றது.
குறிப்பாக கல்வி வளர்ச்சி சங்கத்தின் செயலர் அண்ணன் திரு.V.M. குமார் அகமுடையார் அவர்கள் செய்து வரும் தொடர் முயற்சிகளுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் மட்டுமல்லாது நமது தனிப்பட்ட நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உண்மையில் கல்வி உதவித்தொகை தேவைப்படுவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை தாண்டி அகமுடையாரில் பிரிவினையை ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான் நமது எண்ணம்! ஆம் உதவித்தொகை பெறுவதை கிடைக்க வேண்டும் என்பதை விட அகமுடையார் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதை வலியுறுத்துவது தான் நமது நோக்கம்.
சரி அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
மொத்தமுள்ள 31 பேரில் 4 பேர் மட்டும் தான் வடதமிழக மாணவ மாணவியரா என்று உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம்.
ஆனால் அதற்கு போதிய விழிப்புனர்வு இல்லாததும் , வடதமிழகத்தில் இருந்து வரும் சங்கத்திற்கு வரும் விண்ணப்பங்கள் தனியார் பள்ளியில் படித்தவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் போன்றவை காரணமாகலாம்.
வரும் காலத்தில்
வடதமிழக அகமுடையார் விண்ணப்பங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்பது உண்மை!
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகையில் 13-08-2023 மாலை 3.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு ரூ7000 நிதி ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும்.
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் நடைமுறையை உதாரணமாக கொண்டு அனைத்து அகமுடையார் சங்கங்களும் அனைத்து பகுதி அகமுடையார்களையும் அரவணைத்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
மேலதிக செய்திகள்
———–
சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தில் வடதமிழக அகமுடையார்களும் பெரும் பங்கு வகித்துள்ளனர். இச்சங்கத்தால் 1977ல் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையில் கூட வடதமிழகத்தை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களின் பெயர்களை பார்க்க முடிகிறது.
ஆனால் பின்னாளில் தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் அரசியல் வலுப்பெற சொந்த அகமுடையார் சாதிக்குள்ளேயே பிணக்கு ஏற்ட்டதை புரிந்துகொள்ள முடிகின்றது. அதனால் வடதமிழக அகமுடையார்கள் விலகியதும் புரிகின்றது.
முக்குலத்தோர் அரசியலால் என்ன பாதிப்பு என்று கேட்கும் அறிவாளிகளே! அரசியலில் பாரிய இழப்பை சந்தித்தோம் ஆனால் அதையெல்லாம் தாண்டி
சொந்த அகமுடையார் சாதிக்குள்ளேயே பிரித்து பார்க்கும் மனப்பாங்கை கொண்டு வந்ததே இந்த முக்குலத்தோர் அரசியல் தான்! இதை இன்னோரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம்! அதுவரை சிந்தியுங்கள்!
முன்னர் செய்த பதிவு லிங்க்:
https://www.facebook.com/100063919813164/posts/698309908976330
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்