அகமுடையார்களை சாதியை விட்டுவிட்டு தேவர் என்ற பட்டத்தில் மற்ற சாதிகளுடன் சேர்த்து இணைக்க முயற்சிப்பதை எதிர்த்து
அகில இந்திய அகமுடையார் மஹா சபை நிறுவனர் & தலைவர் அண்ணன் திரு.பொன்.கரு.ரஜனிகாந்த் அகமுடையார் அவர்களுடைய உரத்த குரலுக்கு ,அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்! (அண்ணனுடைய பதிவை கிழே உள்ள லிங்கில் பாருங்கள்)
(இப்பதிவின் கீழேயும் அவர் எழுதியுள்ளதை எழுத்து வடிவில் கொடுத்துள்ளோம்)
அதே போல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அகில இந்திய அகமுடையார் மஹா சபை சார்பாக மனு அனுப்பவேண்டும் அப்படி அனுப்பினால் அதையும் ப்ரொபலில் பதிவு செய்தால் நாங்கள் அதையும் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம்.
நம் பக்கத்தை பின் தொடர்பவர்களுக்கு:
அண்ணன் வேறு ஓர் பதிவில் இதே கமேண்ட் செய்திருப்பதை பார்த்தேன் அதன் பின் தான் அவருடைய ப்ரோபலை செக் செய்யும் போது அண்ணன் அவர்கள் ஜீலை 28ம் தேதியே இப்பதிவை வெளியிட்டிருப்பது கண்டேன்.
இதுபற்றி எவரேனும் அகமுடையார் ஒற்றுமை பக்கத்திற்கு தகவல் அளித்திருந்தால் அப்போதே இப்பதிவை வெளியிட்டுருப்போம். அகமுடையார் சமுதாயம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
“என் இனம் அகமுடையார் இனம் அதில் தேவர் என்பது ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் பட்டப்பெயரே ஒழிய அது சாதி அல்ல அதை சாதியாக அறிவிக்க சொல்வது அப்பனின் இனிசியலை மாற்றுவதற்கு சமம்
இதனால் முக்குலம் என்று ஏற்கனவே ஏமாற்றப்பட்ட என் மக்கள் இன்னும் ஏமாற்றப்படுவார்கள்
எனக்கு என் சாதி முக்கியம் என் சாதியின் அடையாளம் முக்கியம் அது அகமுடையனாய் பிறந்த ஒவ்வொருவரின் உயிர் மூச்சு
அகமுடையன் அகமுடையனாகவே வாழட்டும்
சில தகுதியே இல்லாத அற்பர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும் எப்படி மீத்தேன் ஹைட்ரோ கார்பனாக மாறியதோ அது போல முக்குலம் என்பதை தேவரினம் என்று மடை மாற்ற செய்யப் பார்கின்றார்கள் சேர்வை முதலியார் உடையார் துளுவவேளாளர் பிள்ளை தேவர் முதலான 153 பட்டங்களால் தமிழகம் முழுவதும் செறிவாய் வசிக்கும் அகமுடையர்களை சில மாவட்டங்களில் வசிக்கும் பிற இரு சாதிமக்களுடன் சேர்த்து தேவரினம் என்று அறிவிக்க நினைப்பது என்னமோ அவர்களுக்கு வேண்டுமானால்.இலாபமாக இருக்கும் அது அகமுடையர்களுக்கு நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.
தேவரினம் என்று அகமுடையார் இனத்தையும் சேர்த்து அறிவிக்க சொல்லி நீதிமன்றம் சென்ற சுய நல கூட்டத்தை அகில இந்திய அகமுடையார் மஹா சபை கண்டிக்கின்றது..
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்