First
அகமுடையார் இளைஞர் மற்றும் பெண்களுக்கு-அரசுபணி தேர்வுக்கு பயிற்சி தொடங்க உள்ளது- தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்
——————————————————————————–
அகமுடையார் கல்வி மையம் சார்பில் அகமுடையார் இளைஞர் மற்றும் பெண்களுக்கு அரசுபணி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க இலவச சேவை மையம் கடந்த 8 மாதங்களாக மதுரை தல்லாகுளம் பகுதியில் நடந்து வந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நம் அகமுடையார் இனத்தவர்களுக்கு மருதுசேனை அமைப்பு சார்பில் தற்போது இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் தேர்வுக்கு தயார்படுத்த பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே ஏற்கனவே நடைபெற்று வந்த மதுரை தல்லாகுளம் பகுதியில் இடப்பற்றாக்குறை உள்ளதால் மருதுசேனை அமைப்பு ஏற்பாட்டின் பெயரில் காவல்துறை பணி மற்றும் குருப் 4 பணிகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் தொடர்ந்து 70 நாட்கள் நடைபெற உள்ளன.
இதற்காக திருமங்கலம் -விருதுநகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள சாந்தி பவன் ஹோட்டலில் தங்குமிடம் மற்றும் உணவுடன் தகுந்த பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
70 பேர்கள் வரை தங்கி படிக்கும் வகையிலும் அதற்கு மேலான மாணவர்கள் தினமும் வீட்டிற்கு சென்று மையத்திற்கு திரும்பி வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் வழங்கபடவுள்ளதால் விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் வரவை உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம்.
தொடர்புக்கு: 9600 593281 (மருதமுத்து அண்ணன்)
மேலும் விவரங்களை மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.
இப்படிக்கு அகமுடையார் கல்வி மையம்-மருதுசேனை
குறிப்பு:
ஆண்களுக்கு மட்டுமே தங்குமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது.பெண்கள் தினமும் வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.இனிவரும் காலங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்குமிடத்துடன் கூடிய பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.
இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சென்ற காலங்களில் நம் அமைப்பு சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் எடுக்கப்பட்டவையாகும்.
இச்செய்தியை அதிகம் சேர் செய்து நம் அகமுடையார் உறவுகளுகள் பயனடைய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்