கோர்லே எனும் ஐரோப்பியர் எழுதிய “மருது” நூலின் தமிழாக்கத்தை பெற தொலைபேசி: 94429 38890
——————————————————
மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருச்சியில், சூன் 16 ஆம் நாள் வெளியிட்ட,
“ஜம்புத்தீவுப் பிரகடனம்” நினைவு நாளான (16-06-2023) வெள்ளிக்கிழமை, காலையில்….
மருது திருப்பத்தூரில் அமைந்துள்ள அரசு நினைவு மண்டபத்தில், மருதரசர்களின் திருப்பாதங்களில் வைத்து,
1813 ஆம் ஆண்டு, இலண்டனில் இருந்து ஜே.கோர்லே அவர்கள் எழுதிய “MAHRADU” ஆங்கில நூல்,
பேராசிரியர் நா.தர்மராஜன் அவர்களால், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “மருது” நூல் “அகமுடையார் அரண்” சார்பாக மருதரசர்களின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை பெரிய மருதுவின் வழித்தோன்றலான த.இராமசாமி சேர்வை அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பின்னர் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இன்றைய திருப்பத்தூர் பேருந்துநிலையம் எதிரே அமைந்துள்ள நினைவிடம் சென்று மரியாதை செய்யப்பட்டது.
அதன் பின்னர் சின்னமருதுபாண்டியரின் மகன் துரைச்சாமி அவர்கள் நினைவிடம் அமைந்துள்ள காளையார்கோவில் சென்று
மருதரசர்களின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி வெளியிடப்பட்டது.
நிகழ்வில், பெமினார் நாகராஜன் அவர்கள், இராஜசேகர் அவர்கள், உறுதிக்கோட்டை சின்னமருது வாரிசுதாரர் சுகுமார் அவர்கள், அம்மா பானுமதி அவர்கள், மதுரை தீபக் அவர்கள், மதுரை அசோக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நூலை பெறவிரும்புவர்கள் அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களை 94429 38890 என்ற அவரது தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மருது என்ற இந்நூல் இந்தியர்கள் எழுதிய நூல் அல்ல,நம்மை அடக்கவந்த ஐரோப்பிய அதிகாரியில் ஒருவரான கோர்லே தான் பார்த்து அனுபவித்த மருதுபாண்டியரின் வீரம் செறிந்த போராட்டத்தையும் அதன்பலானாய் அவரும் அவர் குடும்பத்தினரும் சந்தித்த துயர் மிகுந்த முடிவையும் பேசுகின்ற உண்மை நூலாகும். எதிரியும் வியந்து பாராட்டிய மருதுபாண்டியரின் வீரமிக்க வாழ்க்கை தான் எத்தகையது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்