மாவலி வாணனை, வாளுக்கு வேலி என்று மாற்ற முயலுதலும் -வாணர் குல அகமுடையார் -மானாமது…

Spread the love

மாவலி வாணனை, வாளுக்கு வேலி என்று மாற்ற முயலுதலும் -வாணர் குல அகமுடையார் -மானாமதுரை பகுதி தகவல்களும்
———————-
சிவகங்கை சரித்திர கும்மி அல்லது கும்பினியார் அம்மானை என்ற ஓலை பாடல் குறிப்புகளானது தமிழக அரசால் நூலாக்கம் செய்யப்பட்டது.
படைகள் திரண்டு போருக்கு செல்லும் வர்ணனை வருகிறது.

இந்நூலின் 151ம் பக்கத்தில் 15ம் வரியில்
“மருவத்த மன்னன் மாவேலி வாளனுடன்” என்ற வரிகள் வருகின்றன. இதை கண்ட சிலர்
மாவேலி வாளன் என்பது பாகனேரி அம்பலக்காரர் என்பவரை சுட்ட சிலர் பயன்படுத்தும் வாளுக்கு வேலி என்பதாக சிலர் கதை மாற்றம் செய்ய முற்படுகின்றனர்.

உண்மையில் அந்த குறிப்பிட்ட 15ம் வரிக்கு உடன் முன்னரும்,உடன் பின்னரும் உள்ள வரிகளை பார்த்தாலே உண்மை புரிந்துவிடும்.

உடன் முன்னதான 13,14ம் வரியில்

“மானாமதுரை வளர் நாகலிங்கமுடன்
சேனை மிகுசனமும் திரண்டு நடந்துவர
மருவத்த மன்னன் மாவேலி வாளனுடன்”

என்பதில் இருந்தே மானாமதுரை படையுடனேயே மாவேலி வாளன் வருவது புரியும். ஆகவே மாவேலி வாளன் மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் என்பது புரியும்.

பார்க்க படம் : 1

அதுமட்டுமல்ல மானமதுரை பகுதியை மாவலி வாணாதிராயர்கள் கோட்டை கட்டி ஆண்டார்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன(அதை இக்கட்டுரையின் பின்பகுதியில் காண்போம்)

இத்தகைய மாவலி வாணன் என்பதையே இந்நூலில் மாவேலி வாளன் என்று குறித்துள்ளனர் ((ஒருவேளை இது ஓலையை படித்தவர் தவறாக இருக்கலாம் ,மாவலி வாணன் என்பதையே மாவேலி வாளன் என்று படித்திருக்கலாம்) .இதை வரும் செய்திகளில் உறுதி செய்துகொள்ளலாம்.

மானாமதுரையில் கோட்டையும்,அரண்மனையும் கொண்டிருந்த மாவலி வாணன்
—————————————————

இந்த வாணர் குலத்தவர்கள் மாபலி வாணர் என்றும் மாவலி வாணர் என்றும் அழைக்கப்பட்டனர்.
இந்த மாவலி வாணரை தான் சிவகங்கை சரித்திர கும்மியில் “மாவேலி வாளன்” என்று குறித்துள்ளது.

மானாமதுரையில் மாவலி வாணன் குறித்து நிறைய சான்றுகள் இருந்தாலும் ஓரிரு சான்றுகளை ,, குறிப்பாக மானாமதுரையில் மாவலி வாணர்களின் அரண்மனையும்,கோட்டையும் இருந்ததை பற்றி காண்போம்.

மதுரை நாயக்க மன்னர்களிடம் படைத்தளபதியாக இருந்த இராமப்பையன் பெயரில் அமைந்த
“ராமப்பையன் அம்மானை” என்ற நூலில் மாவலி வாணனின் கோட்டை இருந்தது பற்றிய குறிப்பு.

ஆதாரம்: இராமப்பையன் அம்மானை, பக்கம் எண்கள் 9,10
பார்க்க படம்: 2,3

வாணர் குல அகமுடையார்- மானாமதுரை பகுதி தகவல்கள்
—————————————————-

வாணர் குல அரசர்கள் “இராக்காயி ” அம்மனை தங்கள் குலதெய்வமாக கொண்டிருந்தார்கள். அழகர்கோவிலில் நூபுர கங்கை என்ற பழம் தீர்த்தபகுதியில் “இராக்காயி ” அம்மனை பிற்காலத்தில் நிறுவியவர்கள் இவர்களே!

அழகர்கோவில் உள்ள இராக்காயி அம்மன் சிலை (பார்க்க படம்: 4
நடிகர் சூரி அகமுடையார் ,இராக்காயி அம்மன் கோவில் கும்பாபிசேகத்தின் போது (பார்க்க படம்: 5

அழகர்கோவில் மட்டுமல்ல , வாணர் ஆண்ட பல பகுதிகளில் இந்த “இராக்காயி” அம்மனை நீங்கள் காணலாம்.

முக்கியமாக
வாணர்கள் ஆண்ட மானமாதுரையிலும் வாணாதிராயர்கள் இராக்காயி அம்மனுக்கு கோவில் கட்டியுள்ளனர்.
பார்க்க படம்:: 5
பட உதவி: தம்பி .கார்த்திகேயன் அகமுடையார்

மேலும்
மானமதுரை பகுதியில் உள்ள தஞ்சாக்கூர் என்ற ஊர் தஞ்சை வாணன் எனும் வாணர் அரசனின் தலைநகராக இருந்த ஊராகும். இவ்வூரில் அகமுடையார் சமூகத்தவர்களே உள்ளனர்( வண்ணார்,அம்பட்டர் என்ற பணிசெய் சமுகத்தவர் தவிர வேறு சமூகத்தவர் இல்லை ) ..

தஞ்சாகூர் ஊரின் நடுவே மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயரால் அமைந்த கலையரங்கம்.
பார்க்க படம்: 7

இந்த ஊரில் உள்ள “காவேரி அய்யனார்” கோவிலில் இராக்காயி அம்மன் சிலை அமைந்துள்ளது.

பார்க்க படம் : 8

அழகர்கோவில் என்ற முக்கிய தலத்தில் அமைந்துள்ளதால் இன்று ராக்காயி அம்மனை மற்ற சமூகத்தவரும் குலதெய்வமாக கொண்டு மாறிவிட்டனர். ஆனால் வாணாதிராயர் ஆண்ட ஊர்களிலும் , தென் மாவட்டம் முழுவதும் அகமுடையார்கள் ராக்காயி அம்மனை தங்கள் குலதெய்வமாக கொண்டுள்ளனர். பெரும் எண்ணிக்கை அடிப்படையிலும் ,பாரம்பரியமாகவும் இராக்காயி அம்மனை வழிபட்டு வருபவர்கள் அகமுடையார் இனத்தவரே!

அதிலும் முக்கியமாக தென் மாவட்டத்தில் அகமுடையார் சமூகத்தவர்கள் வேறு குலதெய்வமாக வணங்குபவர்களாக இருந்தாலும் அங்கும் இராக்காயி அம்மனுக்கு பரிவார ( உறவு) தெய்வம் என்ற வகையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். ராக்காயி அம்மனை குலதெய்வமாக கொள்ளாத அகமுடையார் குலதெய்வ கோவிலாக இருந்தாலும் அங்கு 70% நிச்சயமாக இராக்காயி அம்மனுக்கு சிலையும் ,வழிபாடும் இருக்கும்.

இராக்கப்ப ராசா
————–
மானாமதுரை வாண அரசர்களின் கடைசி காலகட்டத்தில் “ராக்கப்ப ராசா” என்ற பெயரில் மற்றோரு அகமுடையார் இன தலைவர் இப்பகுதியை ஆண்டிருப்பது வாணாதிராயர்களை குறிப்பிட்டு ராக்கப்ப ராசர் வழங்கிய செப்பேட்டு தகவல்கள் மூலம் உறுதியாகின்றது.

ஆதாரம்: நூல்: வாணாதிராயர்கள், பக்கம் எண் 158,159, ஆசிரியர்: திரு.வேதாச்சலம்
பார்க்க படம் : 9,10

மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அகமுடையார்கள் ராக்கப்ப்பன் ,ராக்காயி என்ற பெயரில் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

மாவலி வாணனின் படையாக வந்த அகமுடையார்கள்
———————————–
சிவகங்கை சரித்திர கும்மியின் 115ம் பக்கத்தில் பல்வேறு படைகளை குறிப்பிடும் போது
மாவலி வாணனுடன் இணைந்து வந்த அத்தனை படையும் அகமுடையார் இனத்தை சேர்ந்த படைத்தொகுதி என்பது விளங்கும்

அதாவது
சிறுவயல் நாகலிங்க சேர்வை
திருப்பத்தூர் வயிரவன் சேர்வை
மானாமதுரை நாகலிங்கம்
வெரிமருது சேர்வை வேந்தன்
அருங்குளத்து மன்னன் ஆறுமுகம் சேர்வை
தாண்டியப்பன் சேர்வை

என மாவேலி வாளனுடன் வந்தவர்கள் அனைவருமே அகமுடையார்கள் தான்,அகமுடையார் படைகள் தான். இதில் இருந்தே வாணாதிராயர் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அகமுடையார் படைகளில் நிறைய அகமுடையார் தலைவர்கள் சொல்லப்பட்டாலும்
அதிலும் குறிப்பாக வெரிமருது சேர்வை வேந்தன் என்று குறிக்கப்படும் மருதுபாண்டியர்கள் வாணாதிராயரின் பெயரால் அமைந்த சமஸ்கிருத நூலை” வானர வீர மதுரை புராணம் ” என்ற பெயரில் தமிழ்ப்படுத்தி இலக்கண சுவைமிகுந்த நூலை சுப்பிரமணியன் என்ற கவிஞரை கொண்டு இயற்றியுள்ளார்.

மானமதுரை என்ற இவ்வூரின் முற்பெயர் “வானர வீர மதுரை” என்பதாகும்
வாணாதிராயர்கள் ஆண்டதாலேயே அவர்கள் பெயரால் இது அமைந்தது.

ஆதாரம்: நூல்: வானர வீர மதுரை புராணம் ,பக்கம் எண் 1
பார்க்க படம் : 11

இந்நூலில் மருதுபாண்டியர்களின் தந்தையான உடையார் மொக்க பழனியப்பன் சேர்வை அவர்கள் வேள் என்றும் உடையார் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்(வடதமிழகத்தில் அகமுடையார்கள் வேள் ,வேளான்,உடையார் என்ற பதத்தில் அழைக்கப்பட்ட அதே பதத்தில் மருதுபாண்டியர்களின் தந்தையும் அழைக்கப்பட்டுள்ளார்) .

வாணர்களின் ஊர்களில் அகமுடையார்கள்
—————————
அன்றும் சரி! இன்றும் சரி! வாணர்கள் ஆண்ட ,வாணர்கள் பெயரால் அமைந்த அனைத்து ஊர்களிலும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.

மானாமதுரை அருகே உள்ள மாரநாடு(மாறநாடு) அருகே உள்ள தஞ்சாகூர் குறித்து மேலே சொன்னோம் அந்த ஊரிலும் அகமுடையார்களே உள்ளனர்.

சிவகங்கை ,மானமதுரை பகுதியில் வாணர் பெயரில் அமைந்த பல ஊர்கள் அமைந்துள்ளன.
அவ்வூர்களிலும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் என்பதோடு சில ஊர்களில் அகமுடையார் சமுதாயத்தினர் மட்டுமே வாழ்கின்றனர்.

குறிப்பாக சிவகங்கை பகுதியில் வாணக்கருப்பு என்ற ஊர் வாணர் பெயரில் அமைந்த ஊராகும்.
ஆதாரம்: நூல்: வாணாதிராயர்கள், பக்கம் எண் 112, ஆசிரியர்: திரு.வேதாச்சலம்
பார்க்க படம் : 12

இந்த வாணக்கருப்பு((வானக்கருப்பு) ஊரும் அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் ஊராகும்.
பார்க்க படம் : 13

இவ்வாறு பல்வேறு தகவல்கள் மூலம் சிவகங்கை சரித்திர கும்மி அல்லது கும்பினியார் அம்மானை நூல் குறிப்பிடும் மாவேலி வாளன் என்பது மாவலி வாணன் எனும் அகமுடையார் அரசகுடியினன் என்பதை அறிந்துகொள்ளலாம்.

அறிவிப்பு:
பொதுவாக இது போன்று உண்மைக்கு மாறாக போலியாக சொந்தம் கொண்டாடுவர்களின் பதிவுகளுக்கு நாம் பதில் போடுவது கிடையாது. ஏனென்றால் வாணாதிராயர்கள் ,சோழர்கள், அறந்தாங்கி தொண்டைமான்கள், தென் தமிழக பல்லவராயர்கள் .சூரைக்குடி அரசர்கள் என பல்வேறு அகமுடையார் அரசர்களை பல்வேறு சாதிகளும் ஆதாரமே இல்லாமல் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
சிலர் அறிந்தும் பொய்யான புகழுக்காக செய்கிறார்கள் ( உண்மையை சொன்னாலும் அவர்கள் புரிந்துகொள்ள போவது கிடையாது)
அதற்கு பதில் சொல்வது நமது நோக்கம் அல்ல ,அது காலவிரயமான வேலை .ஆனால் அதற்கு பதில் சொல்லுகிறோம் என்ற வகையில் நம் சொந்த அகமுடையார் சமுதாயத்திற்கு வரலாற்றை எடுத்துக்காட்டுவதே எப்போதும் நமது நோக்கமாக இருக்கின்றது.

வாணர் குறித்து பல்வேறு ஆதாரங்கள் உள்ளன அவற்றை தொகுத்து வரும் நாட்களில் வெளியிடுவோம். உங்களுக்கு தெரிந்த செய்திகளையும் நம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo