இராக்காயி அம்மன் தெய்வ பாடல்கள்
வரும் காலங்களில் இந்த பக்கத்தில் இராக்காயி அம்மன் குறித்த புதிய புதிய பாடல்கள் சேர்க்கப்படும்.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள்(கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
ராக்காயி அம்மா!
ரட்சிக்கும் அன்னையே!
ராக்காயி தாயே!
எம் குலம் காக்கும் குல தெய்வமே!
கொடுமையை அழிக்கும் கோபத்தின் கூற்றமே!
கொற்றவேலேந்தி, குலத்தைக் காத்தவளே!
தடுக்கமுடியாத தாயின் சக்தியே
தலைநிமிர்ந்து நிற்கும் தெய்வீக வல்லமையே!
ராக்காயி தாயே!!
ராக்காயி அம்மா!
ரட்சிக்கும் அன்னையே!
ராக்காயி தாயே!
எம் குலம் காக்கும் குல தெய்வமே!
முன்னோர் தெய்வமே!
எம் குலம் காப்பவளே!
மண்ணின் துயர் தீர்க்கும் மாதாவே!
பாரில் துன்பம் தீர்க்கும் பராசக்தியே
பக்தர்க்கு அருள் பாலிக்கும் பரமே!
ராக்காயி தாயே!!
ராக்காயி அம்மா!
ரட்சிக்கும் அன்னையே!
ராக்காயி தாயே!
எம் குலம் காக்கும் குல தெய்வமே!
நீதியின் தெய்வமே!
நீடித்த வாழ்வு தரும் நித்திய சக்தியே!
கருணையின் மாதாவே!
கற்பகம் போல் தருவாயே!
அச்சம் அகற்றும் அன்னையே!
அபயம் தரும் மாதாவே!
ராக்காயி அம்மா!
ரட்சிக்கும் அன்னையே!
ராக்காயி தாயே!
எம் குலம் காக்கும் குல தெய்வமே!
கோடி சனம் கூடுதம்மா உன் கோவிலிலே!
எந்த தீவீனையும் அழியும் உன் வாசலிலே!
கொடும் துன்பம் தீர்க்கும் குல தெய்வமே!
திருமண தடை நீக்கி மணமாலை அருள்வாயே!
குழந்தை வரம் அருளும் அன்னையே!
வாழ்வில் வளம் சிறக்க வந்து உதவுவாய் தாயே!
ராக்காயி அம்மா!
ரட்சிக்கும் அன்னையே!
ராக்காயி தாயே!
எம் குலம் காக்கும் குல தெய்வமே!
பொன்னோடு புகழ் தந்து,
நீடித்த நிம்மதியும் தந்தருள்வாய் தெய்வமே!
நாளேல்லாம் துதித்திருப்போம்!
நலம் அருள்வாய், நாயகியே ! அன்னையே!
ராக்காயி அம்மா!
ரட்சிக்கும் அன்னையே!
ராக்காயி தாயே!
எம் குலம் காக்கும் குல தெய்வமே!
வாட்ஸ்அப் குருப்
இராக்காயி அம்மனை குலதெய்வமாக கொண்ட அகமுடையார் சமூகத்தவருக்காக தனிப்பட்ட குருப் உருவாக்கியுள்ளோம். அவர்கள் மட்டும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் குருப்பில் இணைந்து கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்க்க வேண்டுகிறோம்.
https://chat.whatsapp.com/CcXs2aQbiMgCiGen2sMRvJ
அகமுடையார் சமுதாய பாடல்கள் கிழே!
அகமுடையார் ஒற்றுமை தளத்தால் உருவாக்கப்பட்ட அகமுடையார் சமுதாய பாடல்கள் கிழே!
அகமுடையார் தனிப்பேரினம் பாடல் எம்பி 3 -கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பாடலை கேட்கலாம்.
பாடலை டவுன்லோட் செய்ய லிங்க் : டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க
மற்றொரு பாடல்:
அகமுடையார் அரசர்கள் பாடல் 2 எம்பி3
குறிப்பு:
இப்பாடல்களை அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த இயக்கங்கள், அமைப்புகள்,தனிநபர்கள் தாரளமாக தங்கள் பயன்பாட்டிற்கு நேரடியாகவோ அல்லது உங்களுக்கு ஏற்படி எடிட் செய்தபடியோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
யாதொரு தடையும் இல்லை.