கொத்தனார் வேலை செய்யும் அகமுடையார் ஒருவரின் பணி- என்னை வியப்பில் ஆழ்த்திய வரலாற்…

Spread the love
0
(0)

First
கொத்தனார் வேலை செய்யும் அகமுடையார் ஒருவரின் பணி- என்னை வியப்பில் ஆழ்த்திய வரலாற்று மீட்பாளர்.
———————————————
ஒரு வாரத்திற்கு முன் அதலை அகமுடையார் ஓலை ஆவணங்கள பற்றி நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

அதை பார்த்துவிட்டு ஒருவர் நமது வாட்ஸ் அப் நம்பருக்கு ஓர் ஓலைச்சுவடி படங்களை அனுப்பியிருந்தார். இதுவரை நாம் வெளியிட்டதெல்லாம் நாமாக தேடி சேகரித்த தகவல்களும் ,அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அவர்கள் மூலமாக பெற்ற தகவல்களுமேயாகும்.

முதன்முறையாக ஒருவர் ஓலைச்சுவடிகளை நம் பார்வைக்கு அனுப்பியிருந்தார் என்பதால் ஆர்வமாகி அவருக்கு போன் செய்தோம்.

போன் செய்து பேசிய பிறகே பல விசயங்கள் தெரியவந்தது. பேசியவர் , மதுரை இரும்பாடி கருப்பட்டி ஊரின் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த திரு.முரளி என்பவர் .

பேசிய அவர் , அவரது முன்னோர்கள் எழுதி வைத்த 150 வருடங்கள் முன்பான ஓலைச்சுவடிகள், , 120 வருடங்களுக்கு முன்பான டைரி குறிப்புகள் ,100 வருடங்கள் முன்பான கணக்கு புத்தங்கள் ,நில ஆவணங்கள் போன்றவற்றை நமது பார்வைக்கு அனுப்பினார்.

ஆனால் நான் வியந்து பார்த்த முக்கியமான விசயம் என்னவென்றால், இதுவரை எந்த அகமுடையாரும் (ஏன் மற்ற சாதிகளில் உள்ளவர்கள் ) கூட செய்யாத வரலாற்று விழிப்புனர்வு பிரச்சாரத்தை இன்றைய டிஜிட்டல் ஊடகத்தை கொண்டு வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது நடப்பு வருடத்தின் பிப்ரவரி மாதம் நடந்த அவர் ஊர் திருவிழாவின் போது தனது முன்னோர்களின் வரலாற்றை விளக்கமாக சொல்லி அதற்கு ஆதாரங்களாக ஆவணங்களின் படங்களையும் இணைத்திருந்தார்.
அந்த பிளக்ஸ் படத்தை பார்த்தாலே உங்களுக்கே இது தெரியவரும்.

ஆனால் இதைவிட ஆச்சர்யமான விசயம் என்னவென்றால்
இப்படி எல்லா ஓலைச்சுவடிகள் ,ஆவணங்களையெல்லாம் அக்கறையோடு சேகரித்து ,அதில் உள்ள செய்திகளையெல்லாம் படித்து ,புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திய திரு.முரளி அவர்கள் படித்த படிப்போ,பத்தாம் வகுப்பு மட்டும் தான் ,அதை விட ஆச்சர்யம் அவர் கொத்தனார் வேலை பார்ப்பவர் என்பது தான் .

ஏன் படிப்பை குறிப்பிடுகிறீர்கள்? படிப்பு குறைவானவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று கேட்கிறீர்களா என்று நீங்கள் கேட்கலாம்.ஆனால் அப்படியல்ல.

பொதுவாகவே அதிகம் படிக்க படிக்கவே வாசிப்பு பயிற்சி வரும் , பெரிய முயற்சி இல்லாமல் செய்திகளை விரைவாகவும் அதை புரிந்து கொள்ளும் திறனும் வளரும் . அதிலும் இவர் சேகரித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் குறைந்தது 120 வருடத்திற்கு முன்பான ஆவணங்கள் ,அக்காலத்திய கூட்டெழுத்து ஆவணங்கள் , டைரிகளை படிப்பதற்கும் ,ஓலைச்சுவடிகளை படிப்பதற்கு அசாத்திய திறமை வேண்டும்.

அதுமட்டுமல்ல 3,4 டிகிரி படித்தவர்களே வரலாறு நமக்கெதற்கு என்று பேசுவதும், ஆவணங்களை முறையாக பராமரிக்காமல் செல்லரிக்கவும், காணாமல் போகச்செய்வது , பழைய ஒலைகள்,ஆவணங்கள் என்று சொல்லி அடுப்பெரிக்க பயன்படுத்துவது ,எடைக்கு போடுவது என்று விழிப்புனர்வு அற்ற நிலையில் இருக்கும் நிலையில் குறைவாக படித்திருந்தாலும் மிகவும் நிறைவான மற்றும் அற்புதமான பணியை செய்துள்ளார். ஆகவே செயற்கரிய பணியை செய்த அவரை அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பாக அவரது பணியை மனமார்ந்து பாராட்டுகின்றோம்!

அதுமட்டுமல்ல வெறுமனே அவர் தனது ஊர் மற்றும் முன்னோர் வரலாற்றை வெறுமனே பிளக்ஸில் எடுத்து வெளியிடவில்லை.

ஆவணங்களை ஆலசிப்பார்த்து தனது 7 தலைமுறைக்கு முன்னான பெயர்கள் வரை ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல ஊரில் நடந்த விவரங்களை எண்கள் கொண்டு வரிசைப்படுத்தி ஓர் டைம்லைன் போல வெளிப்படுத்தியிருந்தார்.

ஒவ்வொரு ஆவணத்தையும் ஆராய்ந்து அந்த ஆவணத்தின் சாராம்சத்தை சரியான தலைப்பை கொடுத்து அதற்கான ஆவண ஆதாரத்தையும் பிளக்ஸில் காட்டியிருந்தார் (இந்த தலைப்பிடுதலே இவருடைய வரலாற்று நுண்ணறிவை புலப்படுத்துகின்றது என்பதை எனது 30 வருடத்திற்கு மேலான வரலாற்று வாசிப்பில் உறுதியாக சொல்லமுடியும்)

இதுமட்டுமல்ல திரு.முரளி அவர்கள் தனது உறவினர்கள் வீடுகள் மற்றும் அவர்களது ஊர்களில் உள்ள செப்பேடுகள்,ஓலைச்சுவடிகள் போன்ற பல்வேறு வரலாற்று தரவுகளை தான் பார்த்ததாகவும் அவற்றையும் திரட்டி நமது பார்வைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அகமுடையார் வரலாற்று மீட்புக்கு அவரது அரிய முயற்சியை வியந்து பாராட்டுவதோடு மற்றவர்களும் அவரவர் குடும்பம் மற்றும் ஊர்களில் உள்ள வரலாற்று தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு அகமுடையார் வரலாற்று மீட்பிற்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அகமுடையார் ஒற்றுமை தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் : 92000 50 7629

திரு.முரளி அகமுடையார் அனுப்பிய தகவல்கள்
————————————
பல்வேறு தரவுகளை ஆராய்கின்ற காரணத்தால் பாலகிருஷ்ணாபுரம் திரு.முரளி அவர்கள் அனுப்பியுள்ள முழுத்தகவல்களையும் முழுதாக படிக்கவில்லை என்றாலும் அதில் உள்ள முக்கிய கருத்துக்கள் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

அகமுடையார்களுக்கு சில ஊர்களில் எஜமானர் என்ற பட்டமும் இருப்பதை நாம் பார்த்திருப்போம். மறையூர் மற்றும் புல்வாய்க்கரை ஊர்களில் அகமுடையார் சமுதாயத்தினருக்கு முதலாளி என்ற பட்டம் இருந்துள்ளதை திரு.முரளி குறிப்பிடுகின்றார்.

தொ.முத்திருளன் சேர்வை என்பவர் இந்த வாடிப்பட்டி அருகில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் என்ற ஊரில் முதலி குடியேறி அதன் பின்னர் பிற குடிகளை குடியேற்றியதால் குடி சேர்வை (குடிகளை உருவாக்கிய சேர்வை ) என்று அழைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஊரில் பிழைக்க தொழில் இல்லாததால் தொ.முத்திருளன் சேர்வை வெளியே சென்று வெற்றிலைக்கொடிக்கால் விவசாயத்தை கற்றுக்கொண்டு பாலகிருஷ்ணாபுரம் ஊரில் வெற்றிலை பயிருடுதலை செய்து வருமானத்திற்கு வழிசெய்து அதன் வருமானத்தை கொண்டு மற்ற குடிகள் அவ்வூரில் குடியேற வழிசெய்துள்ளார்.

தொ.முத்திருளன் சேர்வை வழியினர் அவ்வூரின் தலைவர்களாக இருந்து அவ்வூர் பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். உதாரணத்திற்கு நாகுப்பிள்ளை என்பவருக்கு எதிராக மருதநாயகம் பிள்ளை என்பவர் செய்வினை செய்ய முயற்சிக்கையில் மருதநாயகம் பிள்ளைக்கு ரூ25 அபராதம் விதித்துள்ளார் (இது 100 வருடங்களுக்கு முன்பு பெரிய அபராத தொகை அல்லவா)

தொ.முத்திருளன் சேர்வை வழியில் வந்த ஒருவர் ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு இலங்கை சென்றுள்ளார் இதனால் இவரது சகோதர்கள் அவர் மீது வருத்தத்திலோ (வெறுப்பிலோ) இருந்துள்ளனர். இவர் மதுரைக்கோ அல்லது வெளியூர் செல்வதற்கு குதிரையை பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சிலோன் செல்லுவதால் தான் பயன்படுத்திய குதிரையை அருகில் உள்ள ஊரான கருப்பட்டியில் உள்ள கோடாங்கி ஒருவருக்கு விலைக்கு கொடுத்துள்ளார் ஆனால் குதிரையை வாங்கிய அவர் பணம் தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளார். பணம் தாராமல் இருந்தவரும் அகமுடையார் இனத்தவர் தான் அதனால் வருந்திய அவர் ஒரு குறிப்பை எழுதி தனது சகோதர்கள் பார்ப்பதற்காக ஊரில் உள்ள தனது பெட்டியில் வைத்து சென்றுள்ளார். அந்த குறிப்பில் “நானும் அகம்படியார் தான்” நம்மையே ஏமாற்றுகிறான் பாருங்கள் என்று வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அதே போல் பாலகிருஷ்ணாபுரம் ஊரில் 120 வருடங்களுக்கு முன்பே 1904ம் வருடத்திலேயே ஜல்லிகட்டு விழா நடந்துள்ளது. இதில் பாலகிருஷ்ணாபுரம் ஊருக்கும் , கருப்பட்டி ஊருக்கும் மோதல் ஏற்பட்டு போலீஸ் ,நீதிமன்றம் வழக்கு என்பது வரை சென்று பின்பு ஜல்லிக்கட்டு போட்டியே பின்பு நின்றுள்ளது. இரண்டு ஊரில் உள்ள அகமுடையார்கள் இணக்கமாக இல்லாதது திருவிழாக்களையே நிறுத்தும் அளவிற்கு சென்றுள்ளது. 1956ம் வருடத்திற்கு பிறகு அவ்வூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவில்லை என்று தெரிகிறது.

அகமுடையாருக்கு எதிரி அகமுடையார் என்று எல்லாகாலங்களிலும் இருந்துள்ளனர் என்பதையும் மேலே கண்ட இரண்டு உதாரணங்களும் வெளிப்படுத்துகிறது … என்றுதான் இது மாறுமோ! )

தைப்பொங்கலை எப்படி கொண்டாட வேண்டும் என்று விரிவாக எழுதியுள்ளார் (கால்நடைகளை குளிப்பாட்டி , அலங்கரிப்பது, பொங்கல் நாட்கள் முழுவதும் சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்பதையும் ,பொங்கல் கொண்டாடுவதன் நன்மையும் விளக்கியுள்ளார்.

கருப்பட்டி என்ற ஊரே கிராமம் என்றால் அதிலும் உள் கிராமமான பாலகிருஷ்ணாபுரம் ஊரில் திண்ணைப்பள்ளி நடந்துள்ளதை அந்த ஓலைச்சுவடி ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

1876ம் வருடத்திலேயே தங்களது நஞ்சை நிலத்தில் பஜனை மடத்தை ஏற்படுத்தியுள்ளனர். அங்கு சைவநெறி விளக்கம் தரப்பட்டதாக தெரிகின்றது.

ஊரில் கொடிக்கால் விவசாயம் நன்கு நடந்ததை கணக்கு புத்தங்களில் தெளிவாக குறித்துள்ளனர்.

பாலகிருஷ்ணாபுரம் ஊரில் அகமுடையார்கள் (சேர்வை பட்டம்) , பிராமணர், நாயுடு , பிள்ளைமார் ,வேளார் (குயவர்) ,நாடார் போன்ற பல்வேறு சாதிகள் இருந்துள்ளது அவர்கள் எழுதியுள்ள கணக்கு வழக்கு புத்தங்களின் மூலம் தெரியவருகின்றது. 1962ம் வருடம் வரை அனைத்து சமுதாயத்தினரின் இல்ல நிகழ்வுகளில் குடிசேர்வைக்கு சபை மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்று பல்வேறு விவரங்கள் அவர் அனுப்பிய தகவல்களில் உள்ளன. ஏற்கனவே சொன்னது போல் முழுவிவரங்களையும் படித்து அவ்வப்போது இச்செய்திகளை பதிவுகளாக வழங்குவோம்.

மேலதிக செய்தி:
அகமுடையார்கள் பலர் இது போல் பல்வேறு ஊர்களில் முதலில் குடியேறி மற்ற குடிகளை அவ்வூர்களை குடியேற்றியதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு உலகப்பன் சேர்வைக்காரர் என்பவர் கூத்தனாக்கோட்டை என்ற ஊரையும் அவ்வூரில் காக்கனூர் குளத்தையும் அழிவில் இருந்து மீட்டு அதை மீண்டும் ஏற்படுத்தி பல்வேறு குடிகளை அவ்வூரில் குடியேற்றியுள்ளார். இக்கல்வெட்டு செய்தியை விரைவில் தனிப்பதிவாக பதிவு செய்து விரிவாக விளக்குகின்றோம்.இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?