நிழல் வீரர் என அழைக்கப்பட்ட சோழ அரசகுடி வீரர்களாகிய அகம்படியர்கள் ————…

Spread the love

First
நிழல் வீரர் என அழைக்கப்பட்ட சோழ அரசகுடி வீரர்களாகிய அகம்படியர்கள்
———————————

“திருநிழலு மன்ன யிருஞ்சிறந்த மைப்ப
ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்க – ஒருநிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்கா விரிநாடன்
கோழியர் கோக்கண்டன் குலம்”

ஆதாரம்:: ஈரோடு மாவட்ட தொல்லியல் கையேடு பக்கம் எண் 17-18 , தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
பார்க்க இணைப்பு : 1

தலைவன், தலைவி பற்றி “நின்னை விட்டு நீங்காத நிழற்போல என்னை விட்டு நீங்காமற் திரிகின்றவனே” என்று நச்சினார்க்கினியர் குறிஞ்சிக் கலியில் உரை செய்தார். உடன் இருத்தல், ஒன்றி இருத்தல், இணைந்து வாழ்தல் என்ற வாழ்க்கை முறைமையில் நிழல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இன்ப துன்பங்களில் உடனிருப்போர் உறவினர் (சுற்றத்தினர் ,பரிவாரத்தார்) என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணமாக

மலையமான் மக்களை, “தமது பகுத்து உண்ணும் தன்நிழல் வாழ்நர்”
என்று குறிப்பிட்டுள்ளார். மலையமான் மக்களை அவர் தம் குடியினருக்கு நிழல் (உறவினர்) என்ற பொருளில் ‘நிழல்’ என்னும் மலையர் குலத்தை புறனானூற்று பாடலில் புலவர் குறிப்பிடுகின்றார்.

இராமாயணக் காதையில் இராமபிரானின் “நிழலாக அமைந்தோன்” அவன் தம்பி இலக்குமணன் என்பது புராணப் பாடம்.

இவ்வாறு பல்வேறு உதாரணங்கள் மூலம் நிழல் என்போர் குடிசார்ந்த உறவுகள் மூலம் இணைக்கப்படுவர் என்பதை தெளிவாக உணர முடிகின்றது.

ஆகவே நிழல் என்போர் ஒருவரின் சாயலாக (நிழலாக) இங்கு அரசர் எனும் போது அரசரின் சாயலாக(நிழலாக) விளங்குவோர் என்றும் நிழல் வீரர் என்பவர்கள் அந்த அரசகுடி சார்ந்த குடியால் அமைக்கப்பட்ட படையணியாகும் என்பது மேலே காட்டிய சான்றுகளால் விளங்கும்.

அதே போல் நிழல் வீரர் என்போர் அத்தகைய வேந்தரின் குடிசார்ந்தவர்களை கொண்டு அமைக்கப்படும் படையாகும்.

அவ்வகையில் சோழர்களிடம் இருந்த படை வீரர்களே ஏழகத்தார் ,ஏழகப்படை என்றும் முன்னூற்றுவர் என்றும் அழைக்கப்பட்ட படைவீரர் தொகுதியாகும்.

இதை ஏழகத்தார் என்ற ஏழகப்படை என்ற பெயர்களே இதை மேலும் உறுதி செய்யும் சான்றாகும்.

சூரியனின் ஏழு கதிர்களை குறிக்கும் இதை சூரிய குலத்தவர்களாக அடையாளப்படுத்தி கொண்ட சோழர்கள் ஏழு என்ற எண்ணை தங்கள் அடையாளமாக பயன்படுத்தினர்.

சோழரின் அரசியர் பலர் ஏழுலகமுடையார் என்று அழைக்கப்பட்டதும் இதனை பின்புலமாக கொண்டு தான்.

மேலும் சோழர்கள் தங்கள் காப்பு படைக்கு ஏழகப்படை என்றும் ஏழகத்தார் என்றும் அழைத்தானர்.

ஏழகத்தார் என்பதில் ஏழு என்பது சோழர்களையும் அகத்தார் என்பது உறவினரையும் குறிக்கும் ஏழகத்தார் என்பது சோழர்களின் உறவினர்கள் என்பதை குறிக்கும்.

அதே போல் தான் ஏழகப்படை என்பதில் (ஏழு+அகம்+படை ) அதாவது ஏழு என்ற சோழர்களின் உறவு( அகம்) படை என்பதை சோழர்களின் உறவுப்படை என்பதை குறிக்கும்.

இந்த ஏழகத்தார் அல்லது ஏழகப்படையே சோழ அரசின் ஆதாரமாக (முக்கிய வருவாயாக ) விளங்கிய வணிகப்பாதைகளை பாதுகாவல் செய்த படையாகும். அதிலும் குறிப்பாக காவேரி பூம்பட்டினம் தொடங்கி பல்வேறு பகுதிகளில் வணிகத்தை நடத்திய நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டை செட்டியார்களை பாதுகாக்கும் படையாக இந்த ஏழகத்தார் அல்லது ஏழகப்படைகள் விளங்கின. சோழநாட்டில் இருந்து சோழ அரசர்களுடன் முரண் ஏற்பட்டு நகரத்தார்கள் பிற்காலத்தில் பாண்டிய நாட்டுக்கு வந்து குடியேறினர். குறிப்பிட்ட நகரத்தார்கள் இப்படையை கொண்டே நகரத்தாருக்கு ஏழகத்தார் என்றும் நகரத்தாரில் ஓர் பிரிவினருக்கு (இளையான்குடி ) பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு ஏழு கோவில் ஏழு பிரிவு நகரத்தார் என்பன போன்ற பெயர்களும் வழங்கப்பட்டு வருகின்றன. நகரத்தார்களும் தங்கள் குறிப்புகளில் ஏழகப்படை என்பது அகம்படியரை குறிக்கும் என தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல ஏழகப்படை என்பது அகம்படியர்களையே குறிக்கும் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்

ஆதாரம்: நூல் :வான்மீகியார் தமிழரே பக்கம் எண் 22,
ஆசிரியர்: மு. கணபதிப்பிள்ளை
பார்க்க இணைப்பு : 2

ஆதாரம்: கட்டுரை ” ஏழகப்படை” இதழ் கலைமகள்
கட்டுரையாசிரியர் : சா.கணேசன்
பார்க்க இணைப்பு : 3

(இதை நாம் ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளில் விளக்கியுள்ள்ளோம் , அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் இனிவரக்கூடிய வீடியோக்களில் ஏழகத்தார் பற்றி விரிவாக பேசவிருப்பதால் இப்போது இக்கட்டுரையின் மையக்கருத்தான நிழல் வீரர் என்பதை நோக்கி நகர்வோம்).

“திருநிழலு மன்ன யிருஞ்சிறந்த மைப்ப
ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்க – ஒருநிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்கா விரிநாடன்
கோழியர் கோக்கண்டன் குலம்”

கோவை மாவட்டம் பச்சைப்பாழியில் கிடைத்த இக்கல்வெட்டு இந்தியாவிலே தொன்மை வாய்ந்த் பெருவழி பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டாகும்.

முதலாம் ஆதித்த சோழனுக்குரிய வெண்பாவில் அமைந்த கல்வெட்டு பாடல் சோழர் குடிவீரர்களாக நிழல் வீரர்களை (அகம்படியர்களை ) குறிப்பிடுகின்றது.

அதாவது இறைவனின் (திருநிழல் ) நிழலாக சோழர் மன்னர்கள் தங்களையும் , சோழ மன்னர்களின் நிழலாக வணிகத்தை பாதுகாவல் செய்த வீரர்களையும் (நிழல் வீரர்) குறிப்பிடுகின்றது.

இப்பாடலை ஆராய்ந்த தமிழகத்தின் மூத்த வரலாற்றிஞர் திருநிழல் ஆட்சி என்றும் படையமைப்பு பற்றி விளக்கி ஒரு நிழல் போல் வாழியர் என்று கூறுதல் என்பது சோழர் குடி வீரர் பற்றியதாகும் என்பதாக விளக்கியுள்ளார்.

ஆகவே சோழர்களின் வணிகப்பாதைகளை பாதுகாத்த ஏழகத்தார் என்றும் ஏழகப்படை என்றும் அறியப்பட்ட வீரர்களே சோழர்களின் குடிப்படை வீரர் என்பவர்களாவர் இவர்களே நிழல் வீரர் என்றும் அழைக்கப்படுவர் ஆவர்.

அகம்படியர்களே நிழல் வீரர் என்று அழைப்பதற்கு மற்றோரு சான்று கேரளத்தில் இருந்து கிடைக்கின்றது.

கேரளோல்பத்தி (கேரள உள்பத்தி) எனும் 15-16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழம் நூல்
சேரமானின் பரிவார படையாக விளங்கிய அகம்படி பதினாயிரம் (10 ஆயிரம்) படைதலைவராக விளங்கிய பதமேல்(படமேல் ) நாயரை குறிப்பிடுகின்றது.

ஆதாரம்: Jainism IN Kerala ,பக்கம் எண் 217
பார்க்க இணைப்பு: TR manoj

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் குறிப்பிட்ட இந்த அகம்படி பதினாயிரம் படையே நிழல் இறக்கல் என்றும் நிழல் வீரர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே நிழல் வீரர் என்பது அகம்படியர்களையே குறிக்கும் என்பது நேரடியாகவும் உறுதியாகின்றது. இங்கு நிழல் இறக்கல் என்பது கோவில்களை பாதுகாவல் செய்பவர்களாக குறிப்பிடப்படுகின்றனர்.

மேலும் இராஜாதிராஜனுக்கு அடங்கிய அரசனான கந்தவர்மனின் கர்நாடக கல்வெட்டில் பதினாயிரவர் என்றும் நிழல் என்றும் குறிப்பிடப்படுகின்றனர் .இவர்களும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட “திருமங்கலம்” எனும் பிராமண ஊர்களை பாதுகாவல் செய்யும் வீரர்களாக இவர்கள் (பூதப்பாடி பதினாயிரவர் ஆகிய நிழல் ) குறிக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : எபிகிராபிகா கர்நாடிகா ,பாகம் IV H.G 56
பார்க்க இணைப்பு: 5

கி.பி 3 அல்லது 5ம் நூற்றாண்டை சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டிலும் உள்மனையார் என்று அழைக்கப்பட்ட அகம்படியார் தேவகோட்டத்தை (கோவில்களை ) பாதுகாத்த செய்த காணப்படுகின்றது.
ஆதாரம்: ஆவணம் இதழ் 1, பக்கம் எண் 61
பார்க்க இணைப்பு: 6

அதன் பின் தொடர்ச்சியாக கல்வெட்டுக்கள் வருகின்றன. இலங்கையில் கூட புத்தர் கோவிலை பாதுகாவல் செய்தவர்களாக அகம்படியர் குறிப்பிடப்படுகின்றனர்.

இவ்வாறு அகம்படியர்கள் அரசர்களையும், அரண்மனைகளையும் மட்டுமல்லாது கோவில்களையும் பாதுகாத்த செய்தி 2000 வருடங்களாக தொடர்ச்சியாக வரும் வரலாற்று ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஆகவே சோழர்களின் குடியினரான நிழல் வீரர் எனப்பட்டோர் அகம்படியர்கள் என்பது தெளிவு!

குறிப்பு:
அகமுடையார் வரலாற்றை பொறுத்தவரை சொல்வதற்கு நிறைய செய்திகள் உள்ளன. அந்த அளவு ஆய்வு செய்துள்ளோம். ஆனால் படிப்பதற்கோ கேட்பதற்க்கோ தான் அகமுடையார் சமுதாயத்தில் ஆர்வலர்கள் இருப்பதாக தெரியவில்லை.

மற்றொரு பக்கத்தில் அகமுடையார் வரலாற்றை ஆய்வு செய்து எந்த வகையிலும் எளிதான காரியம் அல்ல .

அகமுடையார்கள் வரலாற்று ஆர்வமின்மையினால் வரலாற்றை ஆராயது இருந்ததினால் அகமுடையார் வரலாற்றை பலர் தங்கள் வரலாறு போல் கட்டமைப்பு செய்துள்ளனர்.

மேலும் அகமுடையார்கள் தங்கள் பாரம்பரியம், பட்டம் ,வழிபாட்டு முறை ,சேப்பேடுகள் போன்ற பலவற்றை தொலைத்து நிற்பதினாலும் தங்களிடம் உள்ள வரலாற்று ஆதாரங்களை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு உறங்கிவிடுவதாலும் அகமுடையார் வரலாற்றை பலர் சொந்தம் கொண்டாடி எழுதுவது பலகாலமாக தொடர்கின்றது.

ஆகவே தான் சொன்னோம் அகமுடையார் வரலாற்றை ஆய்வு செய்து எந்த வகையிலும் எளிதான காரியம் அல்ல .

தினமும் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர வரலாற்று தேடல் செய்கின்றோம். மிகவும் சோர்வை ஏற்படுத்துகிற பணி என்றாலும் இலட்சகணக்கான அகமுடையாரில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆர்வலர்கள் அகமுடையார் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருப்பதையும் அதற்காக உதவுவதையும் கண்ணுறும்போது தான் வரலாற்றை மீட்பை நோக்கி நம்மை தொடர்ந்து இயங்க வைக்கின்றது.

இனிமேலேனும் அகமுடையார்கள் வரலாற்றை மீட்டெடுக்க ஒத்துழைப்பை நல்க வேண்டும். குறிப்பாக
தங்கள் குடும்ப ஆவணங்களில் முதற்பக்கத்தில் அவரவர் முன்னோர் பெயருடன் அகம்படி அல்லது அகமுடையார் என்ற சாதி பெயருடன் பட்டத்தை குறிப்பிடும் தகவலை நமக்கு அனுப்பினால் அகமுடையார் வரலாற்றை மீட்க மிகவும் உதவியாக இருக்கும்.

பத்திரங்களின் படங்களை அனுப்புவோர் பெயர்,பட்டம் சாதியை குறிப்பிடும் பகுதியை மட்டும் அனுப்பினால் போதும் முழுப்பக்கத்தையும் அனுப்பாதீர்கள். குறிப்பிட்ட அந்த வரி வரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதும்.

மேலும் ஓவ்வொருவரும் தங்கள் முன்னோர்களின் வரலாற்றை அவர்களின் பட்டம்,குலதெய்வம் தற்போது வசிக்கும் ஊர் , இப்போது உள்ள ஊருக்கு அவர்கள் வந்த கதை அவர்கள் முன்னோர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டால் அதுவும் அகமுடையார் வரலாற்றை மீட்க மிகவும் உதவியாக இருக்கும்.

அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் : 7200 50 7629







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo