First
வரலாற்றில் மருதரசர்கள்
—————————————-
சிவகங்கைச் சீமையை அரசாண்ட மாமன்னர் மருதுபாண்டியர்கள்,
காளையார்கோயிற் இராஜ கோபுரத்தை
கட்டியபொழுது, அவருடைய திருப்பணியின் அருமையைப் பற்றி,
சவ்வாதுப் புலவர் இயற்றிய செய்யுள்;
செய்யுளின் பாடல் வரிகள்
————————————————–
“வானம் வெட்டச் சென்றபணம்
வானமட்டுக் குங்குவிய வளர்த்தானித்ய
தானகன்னன்* கோபுர மொட்
டுத் தொகைகா ளீசர்சித்தந் தனக்கே தோன்றும்
ஆனமட்டும் பார்த்தாலு
மூவேழு வள்ளலிவனம் சையுண்டோ
ஞானசனகண் மருத
பாண்டியன் சிவ புண்யமக ராசன்றானே.”
செய்யுளின் விளக்கம் ;
தினமும் தானம் செய்த கர்ணன் வானளாவிய புகழைக்கொண்டான்.
ஆனால் தான்கட்டிய காளீசர் கோபுரத்தால் காளீசர் உள்ளத்தையே கவர்ந்துகொண்டான் ஞான சனகனாகிய எங்கள் சிவபுண்ணிய மகாராசன் மருதுபாண்டியன்.
கர்ணன்,முதல் ஏழு,இடை ஏழு,கடை ஏழு வள்ளல்களிலும் சிவபுண்ணியம் கொண்டவன் மருதரசனே.
*கன்னன்-கர்ணன்..
(சவ்வாது புலவர் இசுலாமிய மார்க்கத்தை சார்ந்தவர், சிறந்த தமிழ்ப் புலவர்களிடம் தமிழ்ப் பயின்று, தமிழ் இலக்கண இலக்கியங்களில் வல்லவராகி, விரைவில் செய்யுள் இயற்றும் திறமையும் பெற்றுப் பலரால் நன்கு மதிக்கப்பட்டுச் சேதுபதி அரசவையை அடைந்து, அங்கேயுள்ள சிறந்த தமிழ் வித்துவான்களுள் ஒருவராகிய சர்க்கரைப் புலவரோடு மிகுந்த நட்புடையவராக இருந்து, சேதுபதியின் மீது பாடல்கள் பல இயற்றியுள்ளார்).
சான்றாதார நூல்,
பிற்காலப் புலவர்கள்,
பதிப்பாசிரியர் : வித்துவான் எச்.வைத்தியநாதன்,
வெளியீடு : டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
முதற்பதிப்பு : 1986, (பக்கம் : 161,162,163)
————————————
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்