First
உயிர் விட இருக்கும் அரசனும்-தன் உயிரை மாய்த்துக்கொள்ள மனைமகன் (அகமுடையார்) தயாராகும் நிலை
————————
இது ஒரு அரிய மற்றும் மயிர்கூச்சரிய வைக்கும் வரலாற்று சிற்பமாகும்.
மேலை கங்க அரசனான நீதிமார்க்கன் இறப்பை நோக்கி படுக்கையில் இருக்க அதன் அருகில் உயிரை மாய்த்துக்கொள்ள உடைவாளை எடுத்து தன் மார்பில் குத்திக்கொண்டு உயிர் துறக்க மனைமகனாகிய(அகம்படியராகிய) அகரய்யன் காத்திருக்கிறான்.
சிற்பத்தில் காட்டியுள்ளவாறே அரசன் இறந்தவுடன் இந்த மனைமகனும் இறந்துவிடுகிறான். அதற்காக அவன் வாரிசுகளுக்கு உதிரப்பட்டி வழங்கப்பட்டு அதற்கு வீரகல் நடப்பட்டுள்ளது.
ஆதாரம்: Epigraphia Carnatica – Volume 3 – Page 42 பார்க்க இணைப்பு 1,2)
கல்வெட்டின் வரிகள்
”
ஓம் ஸ்வஸ்தி நீதிமார்க்க கொங்கணி வர்ம தர்மமஹராஜாதிராஜ குவாலாலபுர ஈஸ்வர நந்தகிரிநாத ஶ்ரீமத் பெருமானடிகள் சுவர்க்கம் எய்திட பெம்மானடிகளாள மனைமகத்தின் அகரய்யன்
நீதிமார்க்க பெம்மானடிக்கே கில் குந்தே (கிழிந்துண்டு) —
பெருமானடிகள் அகப்புரத்தின்
சத்யவாக்கிய பெருமானடிகள்
கல்நட்டு கொடுத்து
கப்புகலி(களப்பலி) பரிகார
இதை அழித்தோர் வாரணாசி அழித்தோ ஓம்!
இடன்(இடம்) அளித்து —– அளித்தோம்
இதை அழித்தோன் மாபாதகன்”
கர்நாடக பகுதியில் கிடைத்த இக்கல்வெட்டின் முழுவிவரங்களை இன்னொரு நாள் விரிவாக பதிவிடுகின்றோம்.
அகம்படி,அகம்படியர், அகத்தார்,கோயிற்றமர், மனைமகன்,உள்மனையார், மனைப்பெருஞ்சனம் போன்றவை இன்றைய அகமுடையார்களை அன்று குறிக்கப்பட்ட பல பெயர்கள் .பெயர்கள் பலவாக இருந்தாலும் இவை குறிக்கும் பொருள் ஒன்று தான். அது அரண்மனையில் வசிப்பவன் அரசகுலத்தனவன் என்பதாகும்.
மனைமகன் என்பது அகம்படியரை குறிக்கும் ஆதார நூல்: நூல் – நடுகற்கள் ,பக்க எண்கள்: 267 ,ஆசிரியர் : சரித்திர செம்மல் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (பார்க்க இணைப்பு 3)
வேளை வரும் போது உயிர் துறக்க காத்திருக்கும் வேளைக்காரர்
——————————————————
வேளைக்காரர் என்போர் வேளைவரும் போது அரசனுக்காக உயிர் துறப்போம் என்று சத்தியம் செய்து கொள்பவர்கள்.உயர்ந்த போர்மரபினராகிய இவ்வேளைக்காரர்களை பல்வேறு சாதியினர் சொந்தம் கொண்டாடினாலும் இன்று வரை அகமுடையார் சமுதாயத்தினருக்கே
வேளைக்காரர் என்பதில் சாதியும் இணைந்து வரும் கல்வெட்டு கிடைத்துள்ளது.
உதாரணத்திற்கு
“அகம்படி முதலிகளில் அழகியன் மெய் வேளைக்கார பல்லவரையன் ”
ஆதாரம் = மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை , வருடம் 1964/65 எண் 331
(பார்க்க இணைப்பு 4)
இக்கல்வெட்டு செய்தியை ஏற்கனவே பதிவிட்டுள்ளோம் என்பதால் இதை இங்கு பெரிதாக விளக்கவில்லை.
இணைப்புகள்
1,2- மனைமகன் அகரைய்யன் வீரகல் புகைப்படம்
3- அகம்படி முதலிகளில் அழகியன் மெய் வேளைக்கார பல்லவரையன் ஆண்டறிக்கை குறிப்பு
4- நூல் – நடுகற்கள் ,பக்க எண்கள் 267 ,ஆசிரியர் : சரித்திர செம்மல் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்