First
பங்காரு திருமலை நாயக்கருக்கு பட்டம் சூட்டிய வெள்ளையன் சேர்வை(அகமுடையார்) ,
இன்றும் வாழும் மதுரை நாயக்கர் அரச வாரிசுகள்
வரலாற்றின் சில விடுபட்ட பக்கங்கள்
—————————
ஆற்காடு நவாப்ப்பும் ஆங்கிலேயர்களும் இணைந்து கி.பி 1752ம் ஆண்டு வாக்கில் மதுரை நாயக்கர்களை போரில் வென்று மதுரையை கைப்பற்றிக்கொண்டனர் .
மானாமதுரை அருகில் உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் அகமுடையார் வீரர்களை பெருமளவு குடியேற்றி
மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த பங்காரு திருமலை நாயக்கரை
தளவாய் வெள்ளையன் சேர்வை பாதுகாத்து வந்தார்.
பின் ஆற்காடு முகமதிய படைகளையும் , ஆங்கிலேய தளபதி கோப் என்பவரையும் ஆங்கிலேய படைகளையும் வென்று வெள்ளையன் சேர்வை மதுரையில் பங்காரு திருமலை நாயக்கருக்கு பட்டம் சூட்டினார்.
சில காலம் பின்பு முகமதிய படைகள் மீண்டும் வந்து பங்காரு திருமலை நாயக்கரை வென்றனர்.
மதுரை மறுபடி முஸ்லீம்களின் கைகளுக்கு வந்ததை அறிந்த
மீண்டும் வெள்ளையன் சேர்வை வந்து போர் செய்தார்.
ஆனால் இப்போரில் வெள்ளையன் சேர்வை இறந்ததாக மதுரை தலபுராணம் தகவல் தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் அவர் இப்போர் நடந்து பல காலம் பின்பு கி.பி 1762ம் ஆண்டு வரை உயிருடன் இருந்தார் என ஆங்கிலேயரின் ஆவணங்கள் கூறுகின்றன.
ஆதாரம்: தமிழ்நாடு மாவட்ட விவர சுவடிகள்,இராமநாதபுர மாவட்டம் ,பக்கம் எண் 115.
உண்மையில் நடந்தது என்னவென்றால்
வெள்ளையன் சேர்வை ஆற்காடு மற்றும் ஆங்கிலேய படைகளை மீண்டும் ஒருமுறை போரில் வென்றதோடு முஸ்லீம் படைகள் மதுரையில் அரசு செழுத்தலாம் என்றும் ஆனால் ஆற்காடு நவாப்பின் மேலாண்மையை ஏற்க கூடாது என்றும், இராமநாதபுரம் அரசிற்கு கப்பம் செழுத்த வேண்டும் என்று முஸ்லீம் படைகளுக்கு நிபந்தனைகளை விதித்தார்.
நாயக்க மன்னர் மீண்டும் மதுரையை ஆட்சி செய்ய விரும்பவில்லை என்பதோடு அவரும் அவரது வாரிசுகளும் வெள்ளிக்குறிச்சி ஊரிலேயே இருந்து கொண்டார் என்பது பின்னாளில் கிடைக்கும் ஆவணங்கள் தெரிவிக்கின்றனர். இஸ்லாமிய படைகள் பெரும் எண்ணிக்கையிலும், பலத்துடன் இருந்ததும் தொடர்ந்து இருந்து வந்த அச்சுறுத்தல் காரணமாகவும் தொடர் போர்களினாலும் படைபலமும் ,நிதி குறைபாடும் மனச்சோர்வு உற்றிருந்த நாயக்க மன்னர் இம்முடிவை எடுத்திருக்கலாம்.
பின்னரும் பல போர்களை சந்தித்த வெள்ளையன் சேர்வை தஞ்சை,திருநெல்வேலி பகுதிகளில் இருந்த அனைத்து பாளையக்கார்களையும் ஒடுக்கி இராமநாதபுரம் அரசிற்கு அடங்கிய அரசுகளாக மாற்றினார்.
கி.பி 1762ம் ஆண்டின் பிற்பகுதியில் அரசர்களையும் ஆக்கியும், ஆட்டியும் வைத்த கிங் மேக்கர் என்று சரித்திரத்தில் அறியப்பட்ட வெள்ளையன் சேர்வை காலமானார். இவரது பெருமைகளை கண்டு வியந்த மருதுபாண்டியரின் தந்தையான உடையார் வேள் மொக்க பழனியப்பன் சேர்வை என்பவர் தனது பெரிய மகனுக்கு வெள்ளை மருது என்று பெயரிட்டார். இவரே பெரிய மருது பாண்டியர் என்று அறியப்பட்டவர் ஆவார்.
வெள்ளையன் சேர்வை காலத்தில் முகமதியர் மதுரையில் அரசு செழுத்த வெள்ளையன் சேர்வை இசைவு தெரிவித்தார் என்று அப்படிப்பட்ட காலத்தில் மதுரை கோயிலின் திருப்பிரகாரத்தில் முகமதியர்கள் மதுரை கோவில் மண்டபத்தை ஆக்கிரமித்ததோடு இஸ்லாமிய கூம்பு வடிவிலான அமைப்பை ஏற்படுத்தி பலகாலம் தொழுகை செய்து வந்தார்கள்.
ஒருமுறை மருதுபாண்டியர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த போது கோவிலின் பிரகாரத்தில் முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை கவனித்த அவர் அங்கிருந்தவர்களிடம் கோவில் இடத்தை காலி செய்ய கூறினார் அதைபோலவே மருதுபாண்டியர்கள் சாமி தரிசனம் முடித்து வருவதற்குள் கோவில் இடத்தை காலி செய்திருந்தனர்.
என்னதான் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததை அகற்றினாலும் அவர்களும் சிலகாலம் தொழுகை நடத்திய இடம் என்று கருதியதால் மருதுபாண்டியர்கள் இஸ்லாமியருக்கு கோவிலில் இருந்து சற்று தூரத்தில் தொழுகை இடத்தை வழங்கி அதில் கட்டிடம் கட்டியும் வழங்கினார் அதுவே இன்று மதுரை தெற்குவாசல் சப்பானி கோவில் தெருவில் உள்ள மினர்வா நூர்தீன் பள்ளிவாசல் ஆகும். மருதுபாண்டியர் காலத்தில் இந்த பள்ளிவாசல் கோவில் போன்றே தூண்கள் போன்ற அமைப்புடன் கட்டப்பட்டது. 10 வருடங்களுக்கு முன் தான் இந்த அமைப்பை மாற்றி ஏற்படுத்தியுள்ளனர்.
உறுதி செய்யப்படவேண்டியவை
—————————
மதுரை நாயக்க மன்னர் அரசு கடைசியாக இராணி மீனாட்சியின் கி.பி 1736ம் ஆண்டோடு முடிவடைந்து விட்டது என்றும் மதுரை நாயக்க அரச வாரிசுகள் இப்போது எங்கு இருக்கின்றனர் என்று தெரியவில்லை என்றும் பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.
ஆனால் திருமலை நாயக்க மன்னரின் அரச வாரிசுகள் 100 வருடங்களுக்கு முன்பு கூட தெளிவாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளது 100 வருடங்களுக்கு முன்பு நடந்த நீதிமன்ற விசாரணையின் மூலம் தெரியவருகின்றது.
திருமலை நாயக்க வாரிசுகளுக்கு (குமார திருமலை நாயக்கர் மற்றும் பங்காரு திருமலை செளரி நாயக்கர்) இடையில் நடந்த சொத்து தகராறு சம்பந்தமாக 1927ம் வருடம் நடந்த நீதிமன்ற விசாரனையில் மேற்குறிப்பிட்ட வெள்ளிக்குறிச்சி ஊரில் திருமலை நாயக்கர் வழியினர் வாழ்ந்து வந்ததை அறிய முடிகின்றது.
ஆதாரம்: Indian Cases, Vol-102, Issue no.-954 பக்கம் எண் 618
இலங்கையின் கண்டி ராஜ்ஜியம் தமிழ்நாட்டை சேர்ந்த அகம்படியர்களால் உருவாக்கப்பட்டதை “சோழர் எச்சாதியினர்” என்று அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிட்ட காணொளியில் பார்த்திருந்தால் கவனித்திருப்பீர்கள்!
இந்த கண்டி நாயக்கர்களை பற்றி உங்களில் நிறையப்பேர் அறிந்திருக்கலாம். ஆனால் நிறைய பேர் அறியாதது என்னவென்றால்
அப்படிப்பட்ட கண்டி அரசர் ,தமிழ்நாட்டில் உள்ள நாயக்க அரசகுடும்பத்தினரிடம் பெண் எடுத்து அதன் மூலம் அவர் அரசியானார் . அந்த அரசர் வாரிசு இல்லாமல் இறந்து போக நாயக்க ராணியின் தம்பி அடுத்த அரசராகி அதன் மூலம் கண்டி ராஜ்ஜியத்தில் கண்டி நாயக்கர் எனும் புதிய அரச வம்சம் தொடங்கியது.
கண்டி அரசர்கள் பெண் எடுத்தது தஞ்சை நாயக்கர் அரசபரம்பர்ரையினரிடம் இருந்து என்று இலங்கையில் இருந்து வரும் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம்
அகமுடையார்கள் நிறைந்து வாழும் வெள்ளிக்குறிச்சி உள்ளிட்ட மானமதுரை பகுதிகளில் திருமலை நாயக்கர் வழியினர் அரசு ஏற்படுத்தியதையும், பின்னால் வந்த வெள்ளையன் சேர்வை பங்காரு திருமலை நாயக்கருக்கு பட்டம் சூட்டியதன் பிண்ணனியில் கண்டி அகமுடையார்களுக்கும் , நாயக்கர் அரசபரம்பரையினருக்கும் இடையில் உள்ள திருமண உறவு கூட காரணமாக இருந்திருக்கலாம்.
சிறு விளக்கம்
————–
வெள்ளையன் சேர்வை குறித்து அறியப்படாத மேலும் தகவல்களை திரட்டியுள்ளோம். லேட்ப்டாப் சில காலமாகவே பழுதாகியுள்ளதால் பல தகவல்களை வெளியிட முடியவில்லை
அப்படியே கடினமாக முயற்சி செய்து வெளியிட்டாலும் பலர் அதை படிக்காலும் சேர் செய்யாமல் கடந்து சென்று விடுவதால் கடின முயற்சிகளுக்கு இடையேயும் அதை வெளியிட முடியவில்லை. இந்த பதிவு சம்பந்தமாக பல தரவுகளை சேகரித்திருந்தாலும் மேற்கூறிய காரணங்களால் அதை இப்பதிவில் இணைக்க முடியவில்லை.
ஆனாலும் வரும் காலங்களில் அவற்றையெல்லாம் ஓவ்வொன்றாக வெளியிட முயற்சிப்போம்.
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் முன்பு போல பதிவுகள் வருவதில்லையே என்று சிலரிடம் சொன்னதாக நமது உறவுகள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியதால் இதை இங்கு குறிப்பிடுகிறேன்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்