First
அயலி வெப்சீரிஸில்- மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் (நன்றியும்-கேள்விகளும்)
———————
அயலி வெப்சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நன்கு பிரபலமாகியிருந்தது. இந்த சீரீஸை நேற்று முழுவதுமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
புதுக்கோட்டை பகுதியை களமாகவும் ,1990 காலகட்டத்தில் நடப்பதாகவும் கொண்ட இந்த வெப்சீரிஸின் 5வது எபிசோடில் ( கதையின் நாயகி வெளியூருக்கு தேர்வுக்கு சென்று வரும் காட்சிகளில்) மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் என்ற பெயரில் பேருந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி!
குறிப்பு:
ஜனவரி மாதமே வெளியான வெப் சீரிஸை நம்மவர்கள் நிறைய பேர் முன்பே பார்த்திருப்பீர்கள். ஆனால் எவரும் இச்செய்தியை பகிர்ந்து கொள்ளாதது வருத்தமே.
இது போன்ற சமுதாயம் சார்ந்த செய்திகளை அகமுடையார் ஒற்றுமையின் வாட்ஸ் அப் நம்பர் 720050 7629 என்ற எண்ணிற்கு அனுப்பினால் நாம் அனைவரைக்கும் சென்றடையும்படி நமது பக்கங்களில் வெளியிடுவோம்.
பாண்டியன் போக்குவரத்து கழகத்தில் 1249 பேருந்துகள் இருந்தபோது பாணடியனில் இருந்து 352 பேருந்துகள் எடுக்கப்பட்டு 01.04.1983ல் காரைக்குடியை தலைமையாக கொண்டு சிவகங்கை காரைக்குடி இராமநாதபுரம் புதுக்கோட்டை மற்றும் மதுரை அருப்புக்கோட்டை சாலையின் கிழக்குப் பகுதிகளில் அனைத்தும் மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகம் என உருவாக்கப்பட்டது.
மேலதிக செய்திகள்
—————-
அயலி வெப்சீரிஸில் மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அக்கதையின் காலகட்டத்தை காட்டுவதற்கு அவசியமான ஒன்று என்றாலும் அதை காட்டியதற்காவே நாம் அந்த இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
அதே நேரம்
அயலி வெப்சீரிஸ் சுவாரஸ்யமான சீரியஸ் தான் ஆனால் அதன் சில கருத்துக்களில் நமக்கு பெரிதும் உடன்பாடு இல்லை.
அதுவும் தமிழர்களின்
குலதெய்வ வழிபாட்டை பற்றி திரிபு வேலை செய்திருப்பதை ஏற்பதற்கில்லை!
2000 ஆண்டுகளுக்கு முன்பே 100க்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்கப்பாடல்களை பாடிய சிறப்பு பெற்றது தமிழகம் . புலவர்களே 100 கணக்காணோர் இருந்தார்கள் என்றால் பாமர பெண்கள் எத்தனை எழுத்தறிவு பெற்றுருந்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட தமிழகத்தில் இடைக்காலத்தில் நடந்ததையெல்லாம் வைத்து பெண்ணடிமைத்தனம் என்றெல்லாம் பேசுவது அதுவும் பெண் கல்வி எல்லாவற்றையும் விட முக்கியம் என்று கருதும் இக்காலத்தில் இதுபோன்ற படைப்புகள் எதற்காக? சரி இதையெல்லாம் ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான குலதெய்வ வழிபாட்டை கேள்விக்குள்ளாக்கும் வகையில் திரிவு செய்து படமெடுத்திருப்பதை எப்படி ஏற்பது ?
பெருதெய்வ வழிபாட்டை விட சிறுதெய்வம் என உருவகப்படுத்தப்படும் குலதெய்வ வழிபாடே தமிழர்களின் பண்பாட்டு உயிர்! அதை காலி செய்தால் இங்கு மதமாற்றம் சாத்தியமாகும். குழப்பம் விளைவிக்கலாம் என்று நினைக்கிறார்களா? சிந்திப்பதற்கு நிறைய உண்டு!
அப்ளிகேசன் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்
————————————————————————–
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்