First
நாயக்கர்,ஆசாரிகள் உள்ளிட்ட பல்வேறு சாதியினரும் வழிபடும் மருதுபாண்டியர்
———————————————————————
சில நாட்களுக்கு முன் வேற்று சமுதாயத்தைச் சேர்ந்த (கொண்டையன் கோட்டை மறவர் ) நண்பர் ஒருவர் பார்த்தீர்களா எங்கள் திருநெல்வேலியில் உள்ள கோவிலில் மருதுபாண்டியர் சிலை வைத்திருக்கிறோம் என்றார். அப்பொழுதே நான் பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன் ஆனால் அது வேறு ஒருவர் பதிவில் அவர் இட்ட கமேண்ட் என்பதால் விவாதத்தை வளர்க்காமல் விட்டு விட்டேன்(பொதுவாக வீண் விவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை,வரலாற்றுத் தேடலுக்கே முழுநேரமும் செலவாகும் நிலையில் இத்தகையோரின் கமெண்டிற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க எங்களுக்கு விருப்பமும் இல்லை அதையே சக அகமுடையார்களுக்கும் பரிந்துரைக்கிறோம் )
முதலில் மருதுபாண்டியர் விடுதலைப் போராட்டவீரர் ,தேசியத் தலைவர் அவர் பிறந்த இனம் அகமுடையார் சாதியாக இருக்கலாம் அதற்காக மருதுபாண்டியரை அகமுடையார் சாதிக்கு மட்டுமே என்று எவரும் கொண்டாட முடியாது,கொண்டாடவும் கூடாது!
இரண்டாவது மருதுபாண்டியரை தெய்வமாக வழிபடுவதால் ஒருவர் அகமுடையார் சாதி என்றாகி விடமுடியாது.இதோ நாங்குநேரியில் உள்ள ஒர் பகுதியில் மருதுபாண்டியருக்கு கோவில் கட்டி நாயக்கர் ,ஆசாரிமார் மற்றும் இன்ன பிற சாதியினரும் வணங்குகின்றனர்.இது மகிழ்ச்சிக்குரியது.ஆனால் மருதுபாண்டியரை வணங்குவதாலேயே அவர்களையும் அகமுடையார் சாதியும் ஒன்று என்று சொல்லமுடியுமா?
ஒரு சாதியில் பிறந்து தியாகம்/வீரச் செயல் பிறந்தவரை தெய்வமாக்கி குலதெய்வமான ஒருவரை , பல்வேறு சாதியினரும் தங்கள் குலதெய்வமாகக் கொள்ளுதல் தமிழர் மரபு,சிறப்பு! ஒரு குடும்பத்தாருக்கு/குலத்தாருக்கே நன்மை செய்தவரை பின்னாளில் பல்வேறு சாதிகளும் தெய்வமாக வணங்கும் மரபு உள்ள நம்நாட்டில் இந்த ஒட்டுமொத்த தேசத்திற்காகவே உயிர் தியாகம் செய்த மருதுபாண்டியரை இந்த தேசத்தில் உள்ளோர் அனைவருமே வணங்குதல் மிகப்பொருத்தமன்றோம்!
அவ்வகையிலேயே இவ்விசயத்தை நாங்கள் அணுகுகிறோம்!
நூல் அதாரம்: தென் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம்பெயர்வு! பக்கம் எண் : 240,241 ஆசிரியர்: டாக்டர்.சு.தாமரைப்பாண்டியன்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்