First
முறைகேடான கோப்பில் கையெழுத்திட மறுத்த அகமுடையார் இனத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி மீது மேலதிகாரி கொலைவெறி தாக்குதல்!
——————————————————————————————————————
மதுரை திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா ஈஸ்வரி ,அகமுடையார் இனத்தைச் சேர்ந்த இவர் ஶ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவில் சர்வேயர்(அளவையராக) பணியாற்றி வருகிறார்.
இதே அலுவலகத்தில் இவருக்கு மேலதிகாரியாக பணியாற்றிவரும் சிவசாமி எனும் தலைமை அளவையர் ஒருவர் நீண்டநாளாக முறைகேடான கோப்பில் கையெழுத்திட அழுத்தம் கொடுத்து வந்தார்.தொடர்ந்து திட்டியும் ,பயமுறுத்தியும் இப்பெண் அதிகாரியை முறைகேடான கோப்பில் கையெழுத்திட மிரட்டி வந்த இவர் கடந்த 10ம் தேதி (10-05-2017) அன்று சம்பந்தபட்ட பெண் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார் இதில் அந்த பெண் அதிகாரியின் கை முறிந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இவரை இந்நிகழ்வின் போது உடன் இருந்த தாசில்தார் அப்பெண் அதிகாரியை அழைத்துச் சென்று ஶ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க முனைந்துள்ளார். ஆனால் அந்த மேலதிகாரியும் அவர் தொடர்பில் இருந்த மற்றொரு ஐபிஸ் அதிகாரி ஒருவரின் தூண்டுதலின் பெயரில் மேற்கண்ட மருத்துவமனையில் அனுமதிக்க மருத்ததால் அவர்கள் ஶ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து நெடுஞ்தொலைவில் உள்ள மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இக்கொலைவெறித் தாக்குதல் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூட ஶ்ரீவில்லிப்புத்தூர் காவல்நிலையத்தில் மறுப்பதாகவும் இதன் பிண்னனியில் குறிப்பிட்ட ஐபிஸ் அதிகாரி தொடர்ந்து குறிப்பிட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளரை , எப் ஐஆர் பதிவு செய்தால் உன்னை இவ்வூரில் இருந்து பணியிட மாற்றம்(ட்ரான்ஸ்பர் ) செய்துவிடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட அந்தப் பெண் அதிகாரி இன்னும் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதோடு பணியில் சேர பயத்துடன் இருக்கும் நிலை நீடித்து வருகிறது.
ஆகவே கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அந்த அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரிக்கு உரிய இழப்பீடும் ,பணிப் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்!
பாதிக்கப்பட்ட அந்த பெண் அலுவலருக்காக இன்று மதுரை ஐஜி அலுவலகத்தில் அகமுடையார் சங்கம் மற்றும் அகம் வழக்கறிஞர் குழு சார்பாக மனு அளிக்கப்பட இருக்கிறது.
தொடர்புக்கு: மருது பாண்டியன்-7010267354
வேண்டுகோள்
—————————
தமிழ்நாடு அரசில் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் இச்சுழலில் பணியில் இருக்கும் இவர் போன்ற ஒரு சிலருக்கும் மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவதை உரியமுறையில் அனைவரும் கண்டிக்க வேண்டும்! இல்லாவிட்டால் ஒருநாள் தமிழக அரசில் அகமுடையாரில் அகமுடையார் அதிகாரிகளே இல்லாத நிலை வரலாம் ஆகவே தொடரக்கூடாது!எனவே அகமுடையார் உறவுகள் அனைவரும் இது குறித்து தேவையான விழிப்பினர்வோடு கண்டனப் பதிவுகளை அவரவர் முகநூலில் இடுங்கள்!நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்